RightClick

அப்பன் பைரவர் இருக்கையில் பயம் எதற்கு ???

ஓம் கணேஷாய நமஹ !!

நமசிவாய வாழ்க !
நாதன்தாள் வாழ்க ! 

அண்ணாமலையுடன் அமர் உண்ணாமுலையம்மையே போற்றி ஓம் !!!

ஓம் சிவ சிவ ஓம் !!
         


  சனிபகவானின் தாக்கத்தைத் தகர்க்கும் பைரவ வழிபாடு




சனிபகவான்:

30 ஆண்டு வாழ்ந்தாரும் இல்லை; 30 ஆண்டு வீழ்ந்தாரும் இல்லை; என்பது ஜோதிடப் பழமொழி! ஒரு ராசியில் இருந்து பெயர்ச்சி ஆன சனி மீண்டும் அந்த ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும்;ஒரு ராசியை இரண்டரை ஆண்டுகளில் சனி கடக்கிறார்;12 ராசியைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது;இந்த ஜோதிட விளக்கமே ஜோதிடப்பழமொழியாக பரிணமித்திருக்கிறது;

சனியின் ஆதிக்கம்:

நவீன மருத்துவம் நமது உடல் ஆரோக்கியம் பற்றிகூறுவது என்னவெனில்,சாப்பிடும் அளவு குறையும் போதும்,வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருக்கும் போதும் நமது உடலானது அவசரத் தேவைக்கு சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறது;அதன் மூலமாக நாம் மெலிந்தாலும் பரிபூரணமான ஆரோக்கியத்தைப்பெறுகிறோம்;இதையே நமது முன்னோர்கள் உபவாசம் என்ற மரபினைத் தோற்றுவித்தனர்;தமிழ் மாதத்தில் அமாவாசை,ஏகாதசி,சதுர்த்தி,சஷ்டி,பவுர்ணமி வரும் நாட்களில் ஒருவேளை மட்டும் உண்டு(பல நாட்களில் நீராகாரம் மட்டும் அருந்தி) அந்த நாள் முழுவதும் உரிய கடவுளின் மந்திரம் ஜபித்து வந்தனர்;30 நாட்களில் வெவ்வேறு ஐந்து நாட்களில் இப்படி எதுவும் சாப்பிடாமல் இருப்பதன் மூலமாக நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுத்துக் கொண்டன;இதனால் தான் நமது முன்னோர்களில் பெரும்பாலானவர்கள் 100 வயது வரை வாழ்ந்தனர்;

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி என்று சனிபகவான் ஒருவருடைய 30 வருட ஆயுளில் 20 வருடங்களை கபளீகரம் செய்துவிடுகிறார்;எனவே,ஒரு மனிதனால் ஒவ்வொரு 30 வருடங்களிலும் வெறும் 10 வருடம் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்;இந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வரையிலும் சனியின் தாக்கத்தால் பல்வேறு சிக்கல்கள்,பிரச்னைகள்,வேதனைகள் வந்து சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடுகிறது;இதை முன் கூட்டியே உணர்ந்த நம்முடைய சைவ முன்னோர்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் வரையிலும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் வழக்கத்தை உருவாக்கினர்;இதன் மூலமாக 20 வருட சனியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஆத்மபலத்தைப் பெற்றனர்;




               
சனிப்பெயர்ச்சி:


சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசினார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.

இக்காலங்களில் இவர் 3 முறை வக்ரம் ஆகிய பின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

பங்குனி 24ம் தேதி (06.04.2017) வியாழக்கிழமை வக்ரமாகி, ஆவணி 9 ம் தேதி (25.08.2017) வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின்

சித்திரை 6ம்தேதி (18.04.2018) புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி ஆவணி 21 ம்தேதி (06.09.2018) வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்

சித்திரை 17ம்தேதி (30.04.2019) செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார்.

இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார்.




ராசிகளில் சனி:




16.11.2014 அன்று சனி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தர்; ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருக்க வேண்டிய சனி, கடந்த மாமாங்கமாக மூன்று ஆண்டுகள் வரை இருந்தர்; கலியுகத்தில் சனியின் தாக்கம் மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகவும் குறைவே!

இருப்பினும் அந்த குறைவான சனிதாக்கத்தையே நம்மால் சமாளிக்கமுடியாமல் தவிக்கிறோம்; இந்த தனுசு ராசிக்கு சனிப் பெயர்ச்சி ஆவதால்,

மேஷ ராசிக்கு அஷ்டமச்சனி விலகுகிறது.

ரிஷப ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பாகிறது.

மிதுன ராசிக்கு கண்டச்சனி ஆரம்பாகிறது

சிம்மராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி விலகுகிறது;

கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டமச்சனி ஆரம்பாகிறது

துலாம் ராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது;

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி கடைசி பகுதி ஆரம்பாகிறது

தனுசு ராசிக்கு கடுமையான காலகட்டமான ஜென்மச்சனி ஆரம்பமாகிறது;

மகர ராசிக்கு  ஏழரைச்சனி முதல் பகுதி ஆரம்பாகிறது

மேஷ ராசிக்கு 9ம் இடம், கடக ராசிக்கு 6ம் இடம், கும்ப ராசிக்கு 11ம் இடம், மீன ராசிக்கு 1௦ம் இடம் நன்மைகளை அள்ளித் தரும் சனியாக பரிணமிக்கிறது;




ஸ்ரீகாலபைரவர் :


மிருகண்டு மகரிஷிக்கு அவரது பிறந்த நட்சத்திரப்படியும்,ராசிப்படியும் ஏழரை ஆரம்பமானது;எனவே,அவரை சிக்கலில் மாட்டிவிட்டார் சனி.

சித்தர்கள்,ரிஷிகள்,மஹான்கள்,சாதுக்கள் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தியானம்,தவம்,பிராணயாமம் என்று இருந்து வருபவர்கள்;இவர்களுக்கு என்று எந்தவித ஆசாபாசமும் கிடையாது;ஆசையின் மூலமாகவே சனி நமது நல்ல நேரத்தின் போது தவறுகளைச் செய்ய வைக்கிறார்;பிறகு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி வரும் போது அந்தத் தவறுக்குரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார்;இந்த விதியெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கே பொருந்தும்;


சனியின் இந்த செயல்பாட்டினால் மிருகண்டு மகரிஷி அவமானப்படும் சூழலை அடைந்தார்;இதற்கு யார் காரணம் என்று தனது தவ ஆற்றல் மூலம் நினைத்தார்;சனிதான் காரணம் என்று அறிந்ததும்,சனிக்கு வாதநோய் வரக் கடவது என்று சாபம் விட்டார்;முனிசாபம் உடனே செயல்படும் என்பதற்கிணங்க,சனிக்கு உடனே வாதநோய் வந்துவிட்டது;


சனியின் வேதனையை உணர்ந்த அவரது அன்னை சாயாதேவி, சனியை பைரவ வழிபாடு செய்யும் படி போதனை செய்தார்;அதன்படி,சனி பைரவ வழிபாடு பல கோடி ஆண்டுகளாக செய்து வந்தார்;பைரவப்பெருமானின் அருளால் மிருகண்டமகரிஷியின் சாபம் நிவர்த்தியானது;சனியின் வாதநோய் விலகியது;இதனால் அகமகிழ்ந்த சனி, ஸ்ரீகாலபைரவப்பெருமானிடம் தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்;


ஸ்ரீகாலபைரவப் பெருமானும் அவரை சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஏராளமான தெய்வீக உபதேசங்களை போதித்தார்;அதன்படி,மீண்டும் சனி ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்து வந்தார்;இதன் மூலமாக ஸ்ரீகாலபைரவப் பெருமானால் ;நவக்கிரகப் பதவி பெற்றார்;


பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில்/வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவப்பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;


யார் என்னை தொடர்ந்து வழிபடுகிறார்களோ, அவர்களை நீ ஒருபோதும் துன்புறுத்தக் கூடாது என்று சனியிடம் ஸ்ரீகாலபைரவர் சத்தியம் வாங்கியப் பின்னரே நவக்கிரகமாகச் செயல்பட அனுமதித்தார்;






இந்த சம்பவம் தஞ்சை,திருவாரூர் மாவட்டப்பகுதியில் நடைபெற்றிருப்பதால்,இந்தப்பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான  கோவில்களில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவருடன் சனி இருப்பதைக் காணலாம்;(ஸ்ரீகாலபைரவருக்கு சனி கட்டுப்பட்டவர் என்பது இதன் தாத்பர்யம்!!!)



ஸ்ரீகாலபைரவர் வழிபாடு முறை:

ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் ஆறு ராசிக்காரர்களுக்கு அளவற்ற துன்பத்தையும்,ஆறு ராசிக்காரர்களுக்கு அளப்பரிய நன்மைகளையும் தருவதாக அமைகிறது;

தனுசு சனிப்பெயர்ச்சியானது ,
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு தீமையைத் தரும் சனியாக மாறுகிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்றுடன் அசைவம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்;மது,போதை தரும் பொருட்கள் உபயோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்;அதன்பிறகு தான் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருள் கிட்டும்;இந்த ராசிக்காரர்கள் வரையிலும் கிழேக் கூறப்பட்டிருக்கும் பைரவ வழிபாட்டுமுறையில்  பின்பற்றி வரவேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே அவர்கள் அனைத்து துயரங்களில் இருந்தும் மீண்டு வாழ்க்கைப்பயணம் மிக நன்றாக  போகும்;


நாம் சனிப்பெயர்ச்சி இன்னல்களை நம் நமது குருவின் வழிகாட்டுதலை நாடினோம், இதோ அதற்கான சிறப்பு வழிபாடு ஒன்று நமது வலைப்பூ அன்பர்களுக்காக,

ஒரு சனிக்கிழமை நாளில் ஒரு காப்பர் தட்டை வாங்கிக்கொள்ளவும், அதில் குறைந்த அளவு நல்லெண்ணையை உற்றிகொள்ளவும், பின் குடும்பத்தில் சனியின் பாதிப்பில் உள்ள இராசிகார்கள் முதலில் தனது முகத்தைப் பார்க்கவும், அதை அதற்குப் பிறகு குடும்பத்தார் ஒவ்வொருவரும் அதில் தங்கள் முகத்தைப் பார்த்த முடித்து பின் , அந்த எண்ணையை ஒரு பைரவரின்  முன் உள்ள எரியும் தீபத்தின் முன் உற்றிவிடவும்.

இப்படியாக தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்தால் முழுமையான நன்மையை, முன்னேற்றத்தையும் எட்ட முடியும். இதை யாரும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பயர்க்கும் இரகசியம் காத்தாலே நன்மையை பயர்க்கும்.



மேலும் தினமும் வேலைக்கு/தொழிலுக்குச் செல்லும் போது வழியில் தென்படும் சிவாலயத்தினுள் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானை மட்டும் வழிபட்டுச் செல்லலாம்;


ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலத்தில்(காலை 9 முதல் 10.30க்குள்) ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை அவரது சன்னதியில் பாடலாம்;வசதியிருந்தால் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்      அரகஜா கொண்டு அபிஷேகம் செய்து கொண்டே ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியைப் பாடலாம்;நிறைய ஓய்வு நேரம் இருந்தால் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியைப் பாடலாம்;









சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள நமது குரு ஒரு சுலபமான வழியைக் காட்டியிருக்கிறார்; நம் நன்மைக்காக அவரது ஆராய்ச்சிக் குறிப்பை நம்மிடம் பகிர்ந்து கொண்ட நம் குருநாதர் சகஸ்ரவடுகர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.




  ஓம் சிவ சிவ ஓம்!      ஓம் சிவ சிவ ஓம்!!         ஓம் சிவ சிவ ஓம்!!!