RightClick

வருந்துவதை விட்டுவிடு வருவதை எதிர் கொள், உன்னுடன் நான் இருக்கின்றேன் - சகஸ்ரவடுகர்


ஓம் சிவசிவ ஓம் !ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ !!

ஓம் அண்ணாமலையாரே போற்றி !! 

ஓம் உண்ணாமலை அம்மையே போற்றி !!! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். "உனக்கு என நிர்ணயிக்கபட்டது உன்னை வந்து அடைந்தே தீரும்". மனிதன் தோன்றிய காலம் முதல் வாழ்நாள் முடியும் வரை நிர்ணயிக்கபட்டதே நடக்கும் என்றாலும் இறைவன் சிலவற்றை மறைபொருளாக, சிலவற்றை அதிக முயற்சியினால் மேலும் சிலவற்றை மற்றவர்கள் மூலமாக கிடைக்க இருப்பதினை - நமக்கென்று நிர்ணயிக்கபட்டதை நாம் பயன்படுத்த / அடைய மறந்துவிடுகிறோம். 

நமகென்று நிர்ணயிக்கபட்டது எதுவாக இருக்கலாம் ? எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆம் அன்பர்களே - உத்தியோகத்தில் பதவி உயர்வாக இருக்கலாம், சிறந்த ஆளுமை தன்மையின் மூலம் மிக சிறந்த பொருளாதார வல்லுனராக இருக்கலாம் ; சிறந்த மங்கையாக நாட்டின் தலைவியாகவோ அல்லது வீட்டின்/ நிறுவனத்தின் பொருளாதார நிலையினை மாற்றும் திறம் கொண்டவர்களாக ; தலைவனாகும் ஆகும் திறமை ; சிறந்த கல்வி அறிவு பெற்று இருந்தும் கை கொடுக்காமை நீங்க வழி இருந்தும் கண்டு கொல்லாமை மேலும் ஆன்மீக பயணத்தினை சிறப்புற தொடங்க , தொடங்கிய பயணம் தங்கு தடை இன்றி நிறைவடைய;  நம் மூதாதையர்களின் சாபம் நீங்கி சுகமாக வாழ - மூதாதையர்களின் ஆத்ம சாந்திக்காக நீங்கள் செய்ய வேண்டியவைகளாக இருக்கலாம், பித்ரு தோஷம் தொட்டு எல்லா தோஷங்களும் இந்த ஜன்மத்தில் நீங்க வாய்ப்புகள்  - இப்படி உங்களுக்காக நிர்ணயிக்கபட்டது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

நிர்ணயிக்கபட்டதை மறப்பதற்கு காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உதாரணமாக பணம் (நிதி ) அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  நேரம் - காலம், உண்மையினை மறந்து நடுப்பு காலத்திலே லயித்து இருத்தல் ( செய்ய வேண்டியதை தவிர்த்து சாதாரண செயல்களிலே)  தீயோர் சேர்க்கை ( கூடா நட்பு ) சரியான வழிகாட்டுதல் இல்லாமை ; போலிகளின் மூலம் பெற்ற முன் அனுபவம்
இப்படி வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம். இதற்கு தீர்வு தான் என்ன ? 

மனிதன், தான் பெற்ற இந்த பூத உடலையினையே உண்மை என்றெண்ணி மதி மறந்து மாய மயக்கத்தில் செய்வது அறியாது திரிக்கின்றான். தீர்வினை தேடி தேடி ஓடி அலைந்து சோர்ந்து சொத்துகளை இழந்து இறுதியில் இயற்கை என்னும் மரணத்தின் பிடியில் சிக்கி சிதைகிறான். 
நம்மில் பலர் இறைவனை இகழ்ந்து பேசி இருக்கிறோம். யாரேனும் காரணம் யோசித்து இருகிறீர்களா ? ஏன் அவர் மீது கோபம் என்று. கண்டிப்பாக உண்மைதனை உணராமல் வந்ததே தவிர உண்மை காரணம் யாரும் அறியோம். தன்னை இப்படி தாழ்த்தி படைத்துவிட்டான் அவர்களை எஜமானராக படைத்துவிட்டான். அவர்களிடம் அதை கொடுத்தான் எனக்கு ஏன் இதை தரவில்லை என்று தன்னால் இயலாததை எண்ணி எண்ணி தானும் நொந்து தன்னை படைத்த தாய் தந்தையரை பழித்து மேலும் எல்லாம் வல்ல இறைவனை திட்டிபடுகிறான், மதிகெட்ட மனிதன். 
இயலாமையின் காரணத்தால் எல்லோரையும் வஞ்சித்தவன், ஒருவரை தேட, அடையாளம் காண , யாசகம் கேட்க தவறிவிடுகிறான். அவர் யார் தெரியுமா ? ஆம் அன்பர்களே அவர் தான் " குரு ".  குரு அவர்களின் அருமை பெருமைகளை நாம் நன்கு அறிவோம். " குரு பார்க்க கோடி நன்மை. 
மாதா - பிதா - குரு - குரு காட்டிய தெய்வம் 


இப்படி கடவுளை நமக்கு காட்டிய குரு அவர்களை மறந்து நாம்,நம் துயரை துடைக்கும் வழியினை மறந்து எதோ வாழ்ந்து வழி இன்றி இறந்து மீண்டும் பிறப்பெடுத்து மடிந்து கொண்டே இருக்கிறோம்

தீர்வு தற்பொழுது உங்களுக்கு ஓர் அளவு புரியும் என்றே எண்ணுகின்றோம் . 
தோஷங்களில் ப்ரம்ஹகத்தி தோஷமே கொடியது. ஆம் இந்த தோஷம் பற்றி நாம் நன்கு அறிவோம். சில குறிப்புகள் மட்டும் இங்கே; 
ஸ்ரீ ராம பிரான் - அவதார புருஷர் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி நாம் நன்கு அறிவோம் ; ஸ்ரீ ராம பிரான், தசரத சக்கரவர்த்திக்கு மூத்த மகனாக தோன்றியதில் ஆரம்பித்து இளமை - சீதாபிராட்டி சுயம்வரம் - அரசனாக வேண்டிய ஸ்ரீ ராம பிரான், தாயின் சூழ்ச்சியால் வனவாசம் அடைந்து  சோதனையாக சீதா தேவி அவர்களை மாயமான் கவர்ந்து ராவண தேசம் கொண்டு சென்று அங்கு அவர்களை தேட,அடையாளம் கண்டு வர தூதுவனாக அய்யன் ஆஞ்சநேயர்சென்று வருதல் : ராவணனின் பலம் - சிவ தொண்டு -  அவர் அறிந்த பிரம்மம் - பலம் மிகுந்த ராவணன் ஸ்ரீ ராம பிரானிடம் தோல்வியை தழுவி உயிர்தனை விடுதல் - அசுர சாம்ராஜ்யம் அழிந்து போதல் : இப்படி ஸ்ரீ ஆமா பிரான், கடவுளின் அவதாரமாக வர்ணிக்கப்படும் அவர் - நன்மைகளையே செய்தாலும் " பிரம்மத்தினை அறிந்த ஓர் ஞானிக்கு ஒப்பான ஒருவரை அதாவது ஸ்ரீ ராவணனை கொலை செய்த காரணத்தினால் - பிரம்ம கத்தி தோஷத்திற்கு ஆளானார். 

அன்பர்களே புரிகிறதா " பிரம்மகத்தி தோஷம் " என்பது உயர் ஜாதி அடிப்படையில் வந்தது அல்ல - பிரம்மத்தினை அறிந்த ஒருவரை யார் கொலை செய்கிறார்களோ அல்லது கொலை செய்வதற்கு இணையாக யார் சபித்து பேசுகிறார்களோ அல்லது பிரம்மத்தினை அறிந்தவரின் சொல் கேட்டும் கேட்க்காமல் ஏமாற்றுவது என்று நாம் இப்பிறப்பில் மட்டும் அல்லாது முந்தைய பிறப்புகளில் செய்திருந்தாலும் அதை சரி செய்யாவிடில் ஜன்ம ஜன்மத்திற்கும் இந்த தோஷம் நம்மையும் நம் சந்ததியர்களையும் தொடரும். இதில் எள் அளவும் ஐயம் இல்லை. 

அப்படி கொடிய தோஷம் ஸ்ரீ ராம பிரானை தொட்டது ஆம் அன்பர்களே எப்படி என்று கேள்வி எழுப்புகிறீர்களா ?? 

ஸ்ரீ ராவண பகவான் தனது துரதிஷ்டவசமான காலத்தினால் அத்தகைய ( சீதா தேவி கவர்ந்து வருதல் ) கொடிய செயலுக்கு ஆளானார். அது தவிர ஸ்ரீ ராவண பிரான், எல்லாம் வல்ல ஈசனிடம் அதீத அன்பு கொண்டு பிரம்ம மந்திரத்தினை பெற்று கடுந்தவம் மேற்கொண்டு பிரம்மத்தினை உணர்ந்து அறிந்தவர்; ஒரு ஞானிக்குநிகரானவர் ; 
அத்தகைய பெருமானை ஸ்ரீ ராம பிரான் வதை செய்ததினால் பிரம்மகத்தி தோஷம் அவரை ஆட்கொண்டது. ஆம் அன்பர்களே எல்லாம் வல்ல ஸ்ரீ ராம பகவானையே தோஷங்களில் கொடிய பிரம்ம கத்தி தோஷம் தீண்டியது. அதை ( தோஷத்தினை ) நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்ரீ ராம பகவானுக்கு சித்தராம் ரிஷிகளில் ராஜ ரிஷியாம் மஹா ரிஷி " ஸ்ரீ விசுவாமித்ர சுவாமிகள் " குருவாய் 


ஓம் விஷுவாமித்ர சுவாமிகளே சரணம் 

இருந்து நிவாரண பரிகாரம் செய்து வைத்து அருளியதோடு மட்டும் அல்லாமல் ராஜ இருக்கைதனையும்( அயோத்தி அரசராக ) பெற்று தந்தார்கள். 
தோஷ நிவர்த்தி எல்லா இடங்களிலும் செய்தல் ஆகாது ஆம் அன்பர்களே அதற்கென்று இடம் உண்டு அங்கு தான் செய்ய வேண்டும்: 
ரிஷி அவர்கள் தேர்வு செய்த இடம் கடற்கரையின் அருகில் பாவங்களை வேரோடு அழிக்கும் சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகா காளி அன்னை நின்றிருக்க , நன் நீர் ஆற்று படுக்கையுடன் ( குடிக்கும் நிலையில் ) கூடிய இடத்தில், ரிஷி அவர்களால் பிரதிஷ்டை ( தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காகவே பிரத்யேகமாக ) லிங்க வடிவில் சிவபெருமானும் உடன் உலகுக்கெல்லாம் தாயான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மை எழுந்தருளி காட்சியளிக்கும் " விஜயாபதி ". 

இந்த பரிகாரம், இது முழுக்க முழுக்க குரு - சிஷ்ய சூட்சும பரிகாரம். ஆம் அன்பர்களே..

நம்மில் பலர், பலமுறை, பல வகையான பரிகாரங்கள் செய்தும், சரியான பலன் கிடைக்காமல் இன்னும் அல்லல் பல பட்டுக்கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம். காரணம் " குரு இல்லா வித்தை பாழ் " ஆம் பரிகாரமும் ஒருவகையான வித்தை தான். 

இந்த வகையான தோஷ நிவர்த்தி பரிகாரம் நம் வாழ்க்கைதனை அப்படியே மாற்றி போடும் சக்தி வாய்ந்தது. சிவகதி கிடைக்க இந்த தோஷ நிவர்த்தி இன்றி அமையாதது. 

சர்வ வல்லமை வாய்ந்த சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மேலுலக வாசிகளும் இந்த வகையான நிவர்த்தி செய்தவர்கள்ஞானிகள்யாவரும் பிறக்கும் போதே சர்வ வல்லமையோடு பிறக்கவில்லைஆனால் மனிதனாக பிறந்து கஷ்ட நஷ்டங்களில் உழன்றுஉண்மைதனை உணரத் தொடங்கையில் குருவினது பாதம் பற்றி சிவதொண்டாற்ற முற்பட்டு பின் கர்ம வினைகளை களைய தோஷ நிவர்த்தி செய்து சிவ தீட்சையுடன் பிரம்மத்தை அடைகிறான். 

ஆம் அன்பர்களே நம் கர்மா இப்பிறவியினால் வந்தது அல்ல நாம் இதற்கு முன் தரித்த உடலாலும் சார்ந்திருந்த உயிரினாலும் நம்மை தொடர்ந்து வருவது. உங்களுக்குள் ஏன் - ஏன் - எப்படி என்று கேள்வி எழுப்ப சில உண்மை இரகசியத்தினை உணர்வாய் என்று நம் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூறுவதுண்டு. ஆம் அன்பர்களே முயற்சித்து பாருங்களேன்

இப்படி நாம் இன்று இப்பொழுது அடைந்து வரும் இன்னல்களில் இருந்து தீர்வு காண்பதோடு மட்டும் அல்லாமல் மறுமையிலும் மேன்மை கொண்டு வாழ வழி இதோ :- 

எல்லா வகையான தோஷத்தினையும் நிவர்த்தி செய்யும் ஒரே பரிகாரம் :- நவ கலச பூஜை. 

நம் அய்யாவின் குருநாதர் கூற்றுக்கு இணங்க,  அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் பொறுப்பேற்று பூஜைதனை நடத்தி வைக்க உள்ளார்கள். 

இது விளம்பரமோ வியாபாரமோ இல்லைகுரு கட்டிய தெய்வம் என்பதால் 

இந்த பூஜை நடத்தி கொடுக்கும் கடமை - ஆத்ம சீடனின் கடமையாக எண்ணி செய்ய இருக்கிறார்கள்.
  மேலும் இந்த பூஜை பற்றி அறிய அல்லது பூஜை செய்வது குறித்த உங்கள் கேள்விகளுக்கு நமது மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.மேலும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இதற்கு பின் இத்தகைய பூஜை செய்வது என்பது ஈசனை காட்டிய அவரது குருவின் கைகளிலே. 

மேலும் இந்த பூஜைக்கு அதிக அளவில் செலவுகள் ஆவதில்லை.மேலும் ஒருமுறை கூறிக்கொள்கிறோம் இது விளம்பரமோ அல்லது கட்டாயமாக எங்களுடன் இணைந்து செய்யுங்கள் என்று கூறவில்லை. எங்களை ஏற்றவர்கள் ஏற்றம் பெரும் வகையில் இதை செய்கின்றோம். நம்பிக்கையை விட சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை

விவரங்கள் வேண்டுபவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

ஆன்மீகக்கடல்/ஆன்மீக அரசு  அலைபேசி எண் 9952747999

குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்  !!!


ஓம் சிவசிவ ஓம் !             ஓம் சிவசக்தி ஓம் ! 

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா !!!

 ஓம் சிவசிவ ஓம் !!!

ஓம் சிவசக்தி ஓம் !!! நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள், கடந்த 33 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு நமது ஆன்மீகக்கடல் ( ஓம் நற்பவி ) அறக்கட்டளை வாயிலாக  நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


இந்த வருடமும்  திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,

அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள்படைசூழ 08.09.2017 வெள்ளிக்கிழமை அன்று  அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்  மாதங்களில் இவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார்.

சிறப்பு உரை
 குழந்தைகளுக்காக அடையாளஅட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு, சிறப்பு உரை பேசினார்கள் . இன்றைய மாணவர்களுக்கு படிப்பின் இன்றைய நிலைமையில் நமக்கான தனிப்பட்ட கடமையும், சமூகத்தில் நாம் பின் பற்ற வேண்டிய கடைமைகளையும் பற்றியும் தெளிவாக எளிய நடையில் அந்த மாணவமணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.அய்யா அவர்கள் உரையில் , கல்வி என்பதை , நாம் " தேன் " போல எண்ண வேண்டும் ஏன்னென்றால் " தேன் " என்பது தானும் கெடாது தன்னை சார்ந்தவர்களையும் கெடுக்காது .

எவ்வளவு பெரிய விஷயத்தை மிக மிக எளிமையாக எடுத்துரைத்து எல்லோரது எண்ணத்திலும் நிறைந்த நம் அய்யா அவர்களுக்கு நன்றி !!!
இறுதியாக மாணவமணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக நடனம், பாடல் மற்றும் நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்தினார்கள். 


நமது ஆன்மீகக்கடல்  மற்றும் ஆன்மீகஅரசு குழுமம் சார்பாக நமது குருநாதர் மாணவர்களுக்கு அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.  


ஓம் சிவசிவ ஓம்  

ஓம் சிவசக்தி ஓம் 

நமது கஷ்டத்தை நாமே துடைத்திடலாம் , குருவருள் இருந்தால் .. !! குருவின் அருள்மொழி இதோ !!!


ஓம் சிவசிவ ஓம் ஓம் ஈஸ்வரபட்டாயா நமஹ 

"" குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ
 குரு சாட்சாத் பரப்பிரம்ம தாத்மாய்ஸ்ரீ குருவே நமோ நமஹ  ""!!! 

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு வணக்கம்.


இந்த பதிவு அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் தங்களின் ஆன்மீக பயணத்தின் வாயிலாக, சித்தர்களின் வழிகாட்டுதலின்படி ஆராய்யப்பட்டு, ஆராய்ச்சியின் முடிவுகளை அவர்தம் குருவின் அருளாசிப்படி , இன்று நம்முடன் பகிர்கின்றார்கள்.. ஓம்அன்னதானம் :

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று நாம் நன்கு அறிவோம். அன்னதானம் என்றாலே அற்புதமான செயல். நாம் , ஒருவர்க்கு எதை எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று எண்ணாமல் , பொருட்களின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக அதிகமாக சேமித்துக்கொண்டே செல்வர் ஆனால் " அன்னம் " அப்படி செய்ய இயலாது.


போதும் என்ற எண்ணமே தலைசிறந்த மருந்து ,..என்பதுபோல போதும் என்ற எண்ணம் இங்கு தான் ஏற்படுகிறது.


யார் யாருக்கு அன்னதானம் செய்யலாம் ? 

யாவர்க்கும் செய்யலாம் . ஆனால்  சில நிபந்தனைகள் உள்ளன,. ஆம் அன்பர்களே ,  

1.யார் உண்மையில் அன்னத்திற்காக ஏங்குகின்றனரோ ;
2.யாரால் தங்களால் தங்களை கவனித்துக்கொள்ள முடியாதோ 
3.உடல் ஊனமுற்றோர் 
4.வயது முதிர்த்தோர் 
5.உழைத்து உண்ண வாய்ப்பு இல்லாதோர் 
6.ஓர் உயிர் முதல் அனைத்து உயிர்களுக்கும் 

இப்படி இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வதே உதவி , அதுவே உண்மை தானம் .

இவை அல்லது பகட்டு வாழ்க்கைக்காக , பிறந்தநாள் / மணநாள் /அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கொடுக்கப்படும் உணவு விருந்து "" அன்னதானம் "" ஆகாது . நினைவில் கொள்க .


இந்த பதிவின் முக்கிய நோக்கம் : 

 மக்களின் வாழ்க்கை மேம்பட ( பொருளாதார ரீதியில் , மனரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் )


யாருக்காக இந்த பதிவு :

1.தொழில் நஷ்டமானவர்கள்,(அதிக கடன்சுமை உள்ளவர்கள் )
2.இயற்கைக்கு முரணாக மக்களுக்கு வழிகாட்டும் அன்பர்கள்  ( ஜோதிடர்கள், அருள்வாக்கு சொல்பவர்கள், )
3.ரிஷி சாபம் உடையவர்கள் 
4. குரு சாபம் / குரு கோபத்திற்கு ஆளானவர்கள் 
5.தொழில் ரீதியாக சவால்களை சமாளிக்க இயலாதவர்கள் 
6.மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் 
7.எதிர்பார்ப்பில் இருந்து மீளவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் 
8.ஆன்மீகத்தில் ஏற்றம் பெற துடிக்கும் அன்பர்கள் 


என்ன செய்ய வேண்டும் ?

செய்யவேண்டியது ஒன்னு ஒன்று மட்டும்தான், "" அன்னதானம் ""

பிரதிபலன் எதிர்பாராமல் முடிந்த அளவு, அனைத்து உயிர்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.

அதில் மிக முக்கியமான ஒரு உயிர் , ஸ்ரீ கணபதியின் திருஉருவம் கொண்ட " களிறு (அ ) யானை . 
ஆமாம் அன்பு வாசகர்களே , யானைக்கு உணவு வழங்கிவர உங்கள் அனைத்துவித பாவங்களும் தூள் தூளாகிவிடும் . உடனே அல்ல படிப்படியாக .

 எத்தனை நாட்கள் அல்லது எப்படி தானம் செய்ய வேண்டும்?

பொறுத்தார் பூமி ஆள்வார் , என்பது இணங்க

 குறைந்தது ஆறு வாரம் (6 வாரம் )

வாரத்தில் ஏதாவது ஒரு நாள்

 ( குறிப்பாக குரு சாபம் / ரிஷி சாபம் / ஜோதிடர் / அருள்வாக்கு சொல்பவர்கள் ) ஒவ்வொரு வியாழக்கிழமையும் யானைக்கு அன்னதானம் செய்ய வேண்டும் குறைந்தது ஆறு வியாழக்கிழமை செய்ய வேண்டும் ,. அவ்வாறு செய்துவர விரைவில் வாழ்வில் ஏற்றம் பெறுவீர்கள் .


மற்றவர்கள் தங்களுக்கு இஷ்டமான நாளில் ஆரம்பித்து , அதே கிழமைகள் முறையே தொடர்ந்து ஆறு வாரங்கள் யானைக்கு அன்னதானம் செய்துவர பாவங்கள் விலகி நல்லவை நடந்தே தீரும் .


யானைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ? 

1. கரும்பு 
2.தென்னங்கிலை 
3.பழங்கள் (வாழை )
4.சாதஉருண்டை

( உணவு தானம் கோவில் யானைக்கு கொடுக்கும் பொழுது , முறையாக கோவில் நிர்வாகம் அல்லது யானை பாகனிடம் அனுமதி வாங்கியபின் கொடுக்கவும் )


எந்த நேரத்தில் தானம் செய்ய வேண்டும் ? 

எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் . காலையில் செய்வது சிறப்பு .


தொடர்ச்சியாக ஆறு வாரம் செய்ய வேண்டுமா ?

ஆம் .

 இடையில் தவறினால் பிழையில்லை . ஆனால் பலன்களில் சற்று தாமதம் ஏற்படலாம் .அறிய கருத்துக்களைநம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு

 அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை , ஆன்மீகக்கடல்/ ஆன்மீக அரசு சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம் . ஓம் !!

உங்களது ஆன்மீகம் குறித்த சந்தேகங்கள் , தெளிவு பெற எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் . அய்யா  இருந்து உரிய நேரத்தில் பதில்களை பெற்று உங்களுக்கு அனுப்புவோம்.


மேலும் மிகவிரைவில் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க ஆன்மீகக்கடல் குழுமம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் . இடம், தேதி,  குருதட்சணை விரைவில் அறிவிக்கப்படும். ஆன்மீகக்கடல் அலைபேசி எண்ணும் விரைவில் நமது வலைதளத்தில் இடம் பெறும் . 


விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் .. 

நன்றி.. 

வணக்கம் ... 

ஓம் சிவசிவ ஓம்..  ஓம் சிவசிவ ஓம்.. ஓம் சிவசிவ ஓம்..  ஓம் சிவசிவ ஓம்..அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் குருமொழி இதோ !!!


ஓம் சிவசிவ ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மாதா 
பிதா
 குரு,
 குரு காட்டிய தெய்வம் ... 

அன்பர்களே,

நமது செயல்கள் நன்முறையில் வெற்றியடைய, இறைபலம் நமக்கு அவசியம் . அந்த இறைபலம் , நமது கர்மவினையை பொறுத்தே நமக்கு கிட்டும் என்பதில் ஐயம் இல்லை.

நமது கர்ம பலனையே மற்றும் உரிமை நமது ( அவரவர் ) குருநாதருக்கு உண்டு. 

சிலர் எந்த வேலையை செய்ய நினைத்தாலும் ,அது தடை பட்டுக்கொண்டே போகும்.சிலர் செயலை செய்ய எண்ணுவர் ஆனால் செய்யாமல் தனது சோம்பேறி குணத்தால் காலம் தாழ்த்துவர்.சிலர் வெற்றியின் அருகில் சென்று அவர்தம் கர்மவினையால் தோல்வியை தழுவுவர் . சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு வராமல் தள்ளிப்போதல். உழைப்பிற்கு ஏற்ற பலன் இல்லாமை. இப்படி காரியத்தடைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 


 ஏற்படும் காரியத்தடைகளை இறையருளால் தகர்த்து ஏறிய தினமும் நாம் செய்யவேண்டியது குறித்து அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் குருமொழி இதோ , 


காரியத்திற்கு முதலானவர் அய்யன் விநாயக பெருமானின் அருளாசியை பெற்றால் எப்பேற்பட்ட இடரும் நீங்கும்.

இந்தமுறை சித்தர்களால் அறியப்பட்டு , ராஜகுருக்களால் மன்னர்களுக்கு , போர்ப்படை தளபதிகளுக்கு உபதேசிக்கப்பட்டு ரகசியமாக பின்பற்றப்பட்டு வந்த மிக முக்கியமான, எளிய முறை, நம் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் வழிநின்று இதோ, 


1. அருகம்புல் மாலை ( உங்கள் கைகளால் கோர்த்தால் - மிகச்சிறப்பு )
 2. தேங்காய் - 1


இந்த இரண்டையும் வீட்டின் ஈசான்ய மூலையில் மாலை நேரம் வைத்துவிடவும் . அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து பின்

 அருகில் உள்ள  விநாயகப்பெருமான் ஆலயம் சென்று

 


( கையில் அந்த அருகம்புல் மாலை மற்றும் தேங்காய் வைத்துக்கொள்ளவும் ) , வலது பக்கமாக ( கடிகார முள்  விதமாக ) ஒரு முறை வலம் வந்து ( சுற்றும் பொழுது மனதில் " சித்தியாக வேண்டிய காரியத்தை மட்டும் நினைவில்" கொண்டு )

பிறகு அருகம்புல் மாலையை ஸ்ரீ விநாயகருக்கு சாத்தும்படி அர்த்தகரிடம் கொடுத்து வழிபாட்டு பின் அந்த தேங்காயை ஆலயத்தில் விடலை போடும் இடத்தில் காரியத்தடை நீங்க  என்று எண்ணியவாறே " விடல் " போடவும் .


இதை முழுமனதுடன் , குருமொழியாக கொண்டு வாழ்வில் ஏற்றம் கண்டவர்கள் ஏராளம்.


" குருவின்  பணிந்து கூடுவோர் அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் "


ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !!

தினமலர் தூத்துக்குடி பதிப்பில் வெளியான கழுகுமலை ஆடி அமாவசை கிரிவலம்

கழுகுமலையில் ஆடி அமாவசை கிரிவலம் 23/07/17 சுமார் ஏழு மணியளவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மேலவாசல் நமது குருநாதர் தலைமையில் ஆடி அமாவசை கிரிவலம் துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த  பக்தர்கள் பைகளில் நவதானியங்களைக் கொண்டு வந்தனர்.

அவர்கள் கிரிவலம் சென்றபோது கிரிவலப்பாதையின் இருபுறமும் தானியங்களை உயிரினங்களுக்கு விதைத்தவாறும், ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை உச்சரித்தவாறும் சென்றனர். முன்னதாக மலைக்குன்றின் மேற்குப்பகுதியிலுள்ள ஆறுமுக நகரிலுள்ள மிளகாய் பழச்சித்தர் ஜீவசமாதிக்குச் சென்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. கிரிவலத்தில் தமிழகத்தின் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, சென்னை, பாண்டிச்சேரி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சிவகங்கை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சூட்சமமாக நிறைவடைந்த கழுகுமலை கிரிவலமும், ஆடி அமாவசை அன்னதானமும்

வணக்கம்:
காலை சரியாக ஏழு மணி அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின்  சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக ஓன்பது மணி அளவில்  நமது கழுகாசமூர்த்தியின்   சன்னதியை வந்தடைந்தார். பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது.

பின் கோவிலின் தெற்கு  வாசல் பகுதிக்கு வந்த நமது குருநாதர், வந்த அனைத்து மக்களையும் அமர வைத்துஇந்த கிரிவல நோக்கம் என்ன? மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதனை வந்தவர்களுக்கு கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். பின் பத்து அளவில் நமது கிரிவலம், சன்னதியின்  தெற்கு   வாசலில் இருந்து தொடங்கியது.மிளகாய்ப்பழ சித்தர்:கழுகுமலை மக்களின் அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்ததது, அங்கு அனைவருக்கும் நமது குருநாதர்ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். பின் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.


கிரிவலத்தில் சூட்சமமாக கலந்து கொண்ட 
சித்த பெருமான்கள்:

 மக்களின் அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்ததது, அங்கு அனைவருக்கும் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு தியானம் நடைபெற்றது. பின்பு நமது குருநாதர்ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். அப்போது நமது குருநாதர் அவர்களைச் சூட்சமாக சித்த பெருமான்கள் சிறு சிறு வெள்ளை நிற பௌர்ணமி ஓளியைப் போல வந்து கிரிவலத்தில் கலந்து கொண்டனர்.

                 

                 தர்ப்பணம்:

மிளகாய்ப்பழச்சித்தர் ஜீவசமதியில்  இருந்து தொடர்ந்த கிரிவலம் நேராக மலையின் பின் பகுதியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆம்பல் ஊரணியை அடைந்தது. அங்கு குருநாதர்கள் அவர்கள், தர்பை மூலம் தர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக தங்கள் முன்னோர்களை மனதில்  நினைத்து, தர்ப்பணம் செய்தனர்.


அன்னதானம்:


அன்பர்கள் அனைவரும்  குருவை தொடர்ந்தபடி சரியாக பனிரெண்டு மணி அளவில் சன்னதியின் தெற்கு வாசலை அடைந்தனர். பின் கழுகுமலை  ஊர்மக்கள் அனைவரும், நமது குருநாதரை வந்து சந்தித்து ஆசி பெற்று, பின் அனைவருக்கும், நமது குருநாதர் தமது கைகளால் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேலும் கிரிவலம் மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நமது குருநாதர், காசி உட்பட 108 சிவா ஆலயங்களில் வைத்து விஷேச பூஜை செய்யப்பட்ட சொர்ணநாணயங்கள் வழங்கப்பட்டது.


நன்றி:

இந்த கிரிவலம் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் ஆசியாலும்,கழுகாசமூர்த்தியின் அருளாலும் கிரிவலம் இனிதாக நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து  அன்பர்களுக்கும், அனுமதி அளித்து உறுதுணையாக இருந்த கலுகாசமூர்த்தி ஆலய நிர்வாகத்தினர்,கழுகுமலை காவல்துறை ஆய்வாளர், தூத்துக்குடி மாவட்ட ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கழுகுமலை பொதுமக்களுக்கும் ஆன்மிகஅரசுமற்றும் ஆன்மிகக்கடல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

ஓம் சிவ சிவ ஓம்! 
ஓம் சிவ சிவ ஓம்!!
ஓம் சிவ சிவ ஓம்!!!


கழுகுமலை கிரிவல நினைவூட்டல் - முன்பதிவு அவசியம்

ஓம் சிவசிவ ஓம் 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் வழிகாட்டுதலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை அன்று மஹாகுரு ஸ்ரீ ஈஸ்வரப்பட்டா அய்யா அவர்களின் நினைவு அன்னதானமும் சித்தர்களின் வாசம் எங்கும் நிறைந்த கழுகு மலை கிரிவலமும் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுரை " கழுகு மலை கிரிவல நினைவூட்டல் மற்றும் அன்னதானம் " சம்மந்தப்பட்டது.
இம்முறை கிரிவலத்தில் கலந்து கொள்ளும் அன்பர்கள் கட்டாயம் நமது ஆன்மீகக்கடல் குழுமத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஏனெனில் " காவல் துறையிடம் அனுமதி , வகுப்பு மற்றும் " அன்னதானம் "குறித்து  சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் , முன் பதிவு .அவசியம்


கிரிவலத்தில் கலந்து கொள்ளும் அன்பர்கள் aanmigakkadal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு
 subject ல் " கிரிவலம் - பங்கேற்பு " என்று type செய்து அனுப்பவும். 

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு ஆன்மீகக்கடல் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு : 

தேதி          :        23.07.2017    காலை 7.00 am 
கிழமை     :      ஞாயிற்றுக்கிழமை 

இடம்          :      கழுகுமலை 

ஓம் சிவசிவ ஓம் !                                                                                      ஓம் சிவசக்தி ஓம் !

விதியை வென்றிடலாம் வாங்க - அய்யா சகஸ்ரவடுகர் .

ஓம் சிவசிவ ஓம் 
தென்னாடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா பே ாற்றி

ஆன்மீகபெருமக்களே !!

நம் விதியை வெல்ல,  இதே ா நம் அய்யா திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்  ஈசனது அனுகிரகத்தால் ஸ்ரீஸ்ரீ பைரவப் பெருமானின் வழிபாடே மிகச்சிறந்தது  என்றும் ஓலைச்சுவடியில்  குறிப்பிட்டுள்ள தினங்களை மக்களுக்கு நலம் பெறும் பெ ாருட்டு சித்தர்கள் வழியில் செப்பியதாகும் கூறியிருந்தார்கள் . 

21.6.17-புதன் , 19.7.17-புதன் ,15.8.17-செவ்வாய் ,11.9.17-திங்கள் ,9.10.17-திங்கள் , 5.11.17-ஞாயிறு , 2.12.17-ஞாயிறு. 

அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து 
தாய் தந்தையரை வணங்கி பின் குலதெய்வத்தை எண்ணி முழு முதற்கடவுளை : ஸ்ரீ விநாயகரை வணங்கி  ஓம் ஸ்ரீ பைரவர் ஆலயம்   சென்று  கீழ்கண்ட பூசை முறையை மேற்கெ ாள்ள வேண்டும். 

செவ்வரளி மாலை 
அத்தர் 
புனுகு 
சந்தநாதி தைலம் 
வாழைப்பழம்
வெற்றிலை பாக்கு 
நிவேத்யமாக, தயிர் சாதம் மற்றும் மிளகு கலந்த உளுந்து வடை வைத்து பைரவர் கவசம் மனமுருகி பாடி, வேண்ட நம் விதியை அவரே மாற்றி,  வேண்டியதை வேண்டியவாறு அருளிடுவார் என்பதில் ஐயமில்லை! 

ஓம்சிவசிவஓம்  
ஓம் சிவசக்தி ஓம் 


பைரவ சஷ்டி கவசம்

பயன்பாட்டு முறை!!!


யார் முந்தைய மூன்று பிறவிகளில் ஒருபிறவியிலாவது பழுத்த சிவனடியாராகவோ,சித்தர் ஒருவரின் சீடராகவோ இருந்தார்களோ அவரே இந்த பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடுகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுவார் என்பது சித்தர்களின் உலகில் புழங்கும் அனுபவ மொழி ஆகும்.கலியுகம் பிறந்து 5000 ஆண்டுகளை கடந்த  இந்த சூழ்நிலையில்,நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பணம் சார்ந்த பிரச்னைகள்தான் இருக்கின்றன.அதை சரி செய்யாமல்,ஆன்மீக வாழ்க்கைபற்றி சிந்திக்க முடியுமா?


பணம் நேர்மையான முறையில் சம்பாதித்தால் மட்டுமே நிலைக்கும்; இந்த சூழ்நிலையில் நாம் பார்க்கும் வேலை அல்லது தொழில் மூலமாகவே நேர்மையாக செல்வ வளம் சேர வழி என்ன? என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகரிடம் வேண்டிய போது அவர் நமக்கு பைரவ சஷ்டி கவசத்தை பாடச் சொல்லி வலியுறுத்தினார்.உடனே,அதை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டுவிட்டோம்;பைரவ சஷ்டிக் கவசத்தை யாரெல்லாம் பாடலாம்? அதன் மூலமாக பைரவப்பெருமானின் அருளைப் பெறுவது எப்படி? 


யாருக்கெல்லாம் பண நெருக்கடி,கடுமையான கடன்கள்,பணம் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றனவோ அவர்களெல்லாம் கீழே குறிப்பிட்டுள்ள தினங்களில், ஸ்ரீகால பைரவரின் சன்னதி முன்பாக ஒரு மஞ்சள் துண்டின்(வசதியிருந்தால் மஞ்சள் பட்டுத்துண்டு) மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;ஸ்ரீகால பைரவரை நோக்கி அமரக் கூடாது;இந்த பைரவ சஷ்டிக் கவசத்தை பாட வேண்டும்;ஜபிக்கவும் செய்யலாம்;அவ்வாறு பாடுபவர்கள்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகவும்,முழுமையாகவும் கைவிட்டிருக்க வேண்டும்;அவர்களின் குடும்பத்தார் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டிய அவசியமில்லை;


ஒருவேளை வெளிநாடுகளில் ஸ்ரீகால பைரவ சன்னதி இல்லாவிட்டால்,தமது வீடுகளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் போட்டோ./கணினி/மடிக்கணினி வால்பேப்பரின் முன்பாக பாடலாம்;அதுவும் இல்லாதவர்கள்,தமது வீட்டின் தெற்குச் சுவற்றில் ஒரு எலுமிச்சை பழத்தால்(அறுத்து) அதன் சாற்றினால்,ஒரு சூலாயுதம் வரைந்து கொள்ள வேண்டும்;எலுமிச்சை பழம் இல்லாவிட்டால்,மஞ்சள் நிறத்தால் வரைந்து கொண்டு,அதன் மையப்புள்ளியை நோக்கியவாறு,கிழக்கு நோக்கி அமர்ந்து பைரவ சஷ்டிக் கவசம் பாடலாம்;ஜபிக்கலாம்;

கடுமையானசோகங்கள்,கர்மவினைகள்,துயரங்கள்,சிக்கல்கள்,அவமானங்களுடன் வாழ்ந்து வருபவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள ஜபித்து வர வேண்டும்;


பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகத் தாக்குதல்,பேய் பிசாசுத் தொல்லை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஜபிக்கவேண்டும்;

ஆளில்லாத ஆலயங்கள் அல்லது குலதெய்வக்கோவில் அல்லது ஆளரவமற்ற பைரவ சன்னதிகளில் பைரவ சஷ்டிக் கவசம் பாடும் சந்தர்ப்பம் அமைந்தால்,வில்வ இலைகள்,செவ்வரளி மலர்களால் சுயமாகவே அர்ச்சித்துக்கொண்டு பைரவ சஷ்டிக் கவசம் பாடலாம்;அவ்வாறு செய்தால்,வெகு விரைவாகவே ஸ்ரீகால பைரவர் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பார்;ஆனால்,ஒரு போதும் ஸ்ரீகாலபைரவருக்கு மல்லிகைப்பூக்களையோ,துளுக்க சாமந்திப்பூக்களையோ அர்ச்சனைக்குப் பயன்படுத்தக் கூடாது;


வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக

பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக

காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக

கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக

அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக

வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக

நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக

சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்

இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்

எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்

தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே

மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே

ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்

தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே

கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே

மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை

வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே

எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே

பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்

எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே

இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு

கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ

மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.

அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்

மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.

முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே

எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்

காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே

அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்

தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே

எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே

தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க

செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க

கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க

விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க

தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க

இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி

உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி

ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி

விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி

உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி

நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி

கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி

பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி

சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக

கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக

சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக

தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக

கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக

அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக

காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக

கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக

அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக

ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக

குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக

லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக

பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக

கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக

பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக

வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக

பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக

பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்

பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்

வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்

சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

குறிப்பு : 
தேதிகளை நன்கு கவனத்தில் கெ ாள்க 

21.6.17-புதன் , 19.7.17-புதன் ,15.8.17-செவ்வாய் ,11.9.17-திங்கள் ,9.10.17-திங்கள் , 5.11.17-ஞாயிறு , 2.12.17-ஞாயிறு. 


இறைவன் அருள் 
குருவின் திருவருள் 

 - சகஸ்ரவடுகர்