RightClick

இனிதாக நடைபெற்று முடிந்தது ஆடி அம்மாவாசை நிகழ்ச்சி (02.08.16)

வணக்கம்.,



காலை சரியாக 8.00 am அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின்  சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக 09.00 மணி அளவில்  நமது கழுகாசமூர்த்தியின்   சன்னதியை வந்தடைந்தார். பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது. பின் கோவிலன் தெற்கு  வாசல் பகுதிக்கு வந்த நமது குருநாதர், வந்த அனைத்து மக்களையும் அமர வைத்து,  இந்த கிரிவல நோக்கம் என்ன மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை வந்தவர்களுக்கு விளக்கினார். இந்த கூட்டமிகுதியில் ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கும், நம் கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். பின் 09.15 am அளவில் நமது கிரிவலம், சன்னதியின்  தெற்கு   வாசலில் இருந்து தொடங்கியது.

மிளகாய்ப்பழ சித்தர்










கழுகுமலை மக்களின்., சிவ அடியார்களின்  அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்ததது, பின் விஷேமாக கிரிவல கலந்துகொள்ளும் அன்பர்களுக்காகப் படைக்கப்பட்டிருந்த இனிப்பு பொங்கல் பிரசாதம் மற்றும் அன்னதான பொட்டலங்கள் ., போத மக்களுக்கும்., குருநாதரின் கைகளால் வழங்கப்பட்டது. அங்கு அனைவருக்கும் நமது குருநாதர்.,  ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். பின் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. இதில் வந்திருந்து அன்பர்களிள் சிலர் தங்களின் கிரிவல அனுபவங்களையும், நமது குருநாதரோடும் அங்கு வந்து அன்பர்களின் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.


தர்ப்பணம்




மிளகாய்ப்பழச்சித்தர் ஜீவசமதியில்  இருந்து தொடர்ந்த கிரிவலம் நேராக மலையின் பின் பகுதியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆம்பல் ஊரணியை அடைந்தது. அங்கு குருநாதர்கள் அவர்கள்., தர்பை மூலம் தர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக தங்கள் முன்னோர்களை மனதில்  நினைத்து, தர்ப்பணம் செய்தனர்.


 அன்னதானம்


அன்பர்கள் அனைவரும்  குருவை தொடர்ந்தபடி சரியாக 1.30pm மணி அளவில் சன்னதியின் மேற்கு வாசலை அடைந்தனர். அங்கு நமது ஆன்மிகக்கடல் சார்பாக கோயிலின் பிரதான அன்னதானம் ஏற்பாடு செய்யப்படிருந்தத நிகழ்ச்சி தொடங்கியது. மறுபுறம்  கழுகுமலை  ஊர்மக்கள் அனைவரும், நமது குருநாதரை வந்து சந்தித்து ஆசி பெற்று, பின் அனைவருக்கும்.




நன்றி

இந்த கிரிவலம் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் ஆசியாலும்,கழுகாசமூர்த்தியின் அருளாலும் கிரிவலம் இனிதாக நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து  அன்பர்களுக்கும், அனுமதி அளித்து உறுதுணையாக இருந்த கலுகாசமூர்த்தி ஆலய நிர்வாகத்தினர்,கழுகுமலை காவல்துறை ஆய்வாளர், மேலும்    தூத்துக்குடி,திருநெல்வேலி  மாவட்ட ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கழுகுமலை பொதுமக்களுக்கும்,நமது  அறக்கட்டளையோடு இணைந்து  இச்சீரியப் பணியில் பொருள் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு., நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பாகவும்., ஆன்மிகஅரசுமற்றும் ஆன்மிகக்கடல் குழுமம் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். குறிப்பு-சில தவிர்க்க முடியாத வலைதள மேம்படுத்துதல் பணி காரணமாக தாமதமான பதிவிற்காக வருந்துகிறோம்.