RightClick

சூரிய கிரகணமும் சித்த ரகசியங்களும் !!!

சிவமயம் 

ஓம் அண்ணாமலையாரே போற்றி  !
ஓம் உண்ணாமலை தாயே போற்றி !!



திக்கற்றவர்க்கு தெய்வமே துணை ! 
குரு காட்டிய தெய்வம் துணை   !!

ஓம் சிவசக்தி ஓம் ...

ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீக கடலின் வணக்கங்கள் .

  சூரிய கிரகணம் ஓர் பார்வை 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது, பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது சூரியனும் நிலவும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும்.இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும்

இந்த மாதம் 9.3.2016 மற்றும் 23.3.2016 ( வாய்ப்புகள் அதிகம் ) மேலும் 8 வது ( ஆகஸ்டு ) 9 வது ( செப்டம்பர் ) மாதங்களில் வாய்ப்புக்கள் ஏராளம். 

அன்பர்களே !

ஓர் அறிவு உயிர் தொட்டு ஆறறிவு மானுடர் வரை நாம் அனைவருமே சூரிய பகவானை வைத்தே வாழின்றோம். யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப உலகங்கள் அனைத்திற்கும் ஆதாரமான சூரிய பகவான்சந்திர பகவானால் தற்காலிகமாக மறைக்கபடுகிறார் அதாவது பூமியை கடக்கும் தருணத்தில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது பலமுறையோ நடை பெறுகிறது. 



நாம் நன்கு அறிந்ததே சூரிய பகவான் தந்தைக்கு நிகரானவர் ; தம் சொந்த பிள்ளைகள் தவறு செய்தாலும் தட்டிக்கேட்டு தண்டிப்பவர் தந்தையே - அத்தகைய இயல்புடையவர் சூரிய பகவான் . இவரின் இத்தகைய பண்பினால் எதிர்மறை எண்ணங்கள் முதல் தீய சக்தியை பிரபஞ்சத்தினை அடையாதவாறு என்றும் காக்கும் அறிவுத் தந்தை ஆவர். எப்பொழுது இவரின் வேலை நேரத்தில் இவருக்கு இடையுறு வருகிறதோ அப்பொழுது தம் திறனை தற்காலிகமாக இழக்கிறார். 



சந்திர பகவானோ தாய்க்கு நிகராக போற்றபடுபவர். ஆம் அன்னைக்கு அனைத்து பிள்ளைகளும் ஒன்று தான். தீய குணமுடைய எதிர்மறை எண்ணங்களுடன் கூடிய துர் ஆவிகளும் குழந்தைகளே . இந்த தீய குழந்தைகளின் விளையாட்டு அப்பனிடம் செல்லாது ஆனாலும் தாய் கண்டிப்பதில்லை . இப்பொழுது அன்பர்களே தங்களுக்கு அதிக விஷயங்கள் குறித்த ஐயம் தீரும் . இது நம் அய்யா சகஸ்ரவடுகரின் கூற்று .


இந்த சூரிய கிரகணத்தில் என்ன நிகழும் ? 

என்ன வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் நிகழ்வு எதிர்பாரததாகவும் ஏமாற்றத்தினை குறிப்பதாக இருக்கும் . ஆம் அன்பர்களே என்ன வேண்டுமானாலும் நிகழலாம். முக்கியமாக நாம் சமைத்த உணவு விஷமாகும் - குடிநீர் விஷமாகும் - நோய் தொற்றுகள் ( நோய் மூலம் கண்டறியா - புது புது கிருமிகள் ) எண்ணங்களில் மாற்றம் ( விரும்பதகாத ) உடல் பலவீனம் - குழப்பம் - பயம் - உயிர் வளி குறைந்து மாசு அதிகரிக்கும் வாய்ப்பு ( நுரையீரல் பாதிப்பு ) இப்படி கூறிக்கொண்டே செல்லலாம் . துர் சக்திகளின் ஆதிக்கம் 

ஆலயம் - இறைவன் - வழிபாடு பயன் : 

இந்த தருணத்தில் உலகில் உள்ள அனைத்து கருவறை கடவுளும் தற்காலிகமாக செயலற்று இருப்பார்கள். கோவில் நடைகள் மூடப்பட்டு இருக்கும் . 

நாம் என்ன செய்தால் இவ்வகை பாதிப்பில் இருந்து தப்பலாம் ?? 

நம் வீட்டில் பயன்படுத்தும் நீர் ஆதாரங்களில் அருகம் புல் இட்டு வரவும் . அருகம் புல் இட்ட நீர் விஷத்தினை முறிக்கும் .



வேலைக்கு செல்லும் அன்பர்கள் என்ன செய்ய வேண்டும் ?? 

தினமும் உள்ளங்கை நீளமுள்ள விஷ்வாமித்திர தர்ப்பை புல்லைநுனியினை வெட்டி , அதே நீளமுள்ள நுனி வெட்டப்பட்ட அருகம் புல் இந்த இரண்டையும் நீரில் நனைத்து பின்பு ஈரமான அந்த புற்கள் இரண்டையும் ஒரு துணியில் ( மெல்லிய ) எடுத்து தமது பாக்கெட்டில் அல்லது கை பையில் வைத்து கொள்ள வேண்டும் . இரவு வீடு திரும்பிய பின்பு அந்த புற்களை எடுத்து ஒரு தனி துணி பையில் வைத்து விடவும்.



பின் வரும் அடுத்தடுத்த நாட்களிலும் இதை தொடர்ந்து செய்ய உத்தமம் . 

இப்படி சேகரித்த புற்களை மாத இறுதியில் மானுடர் காலில் மிதிபடாதவாறு ஆறுகள் / கடலில் செலுத்த வேண்டும் . குளங்களில் / கிணறுகளில் போடகூடாது .( பிறருக்கு தீங்கு தரும் )  



இதை இந்த மாதம் முழுவதுமோ அல்லது வருடம் முழுவதுமோசெய்வதால் மிகுந்த நன்மை உண்டாகும் .

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே தாயுமானவர் அய்யா 

இதை கூறியதும் அய்யா கூறிய ஒரு வாக்கியத்தினை பதிவு செய்ய விரும்புகிறோம் - " ஆராய்ச்சி அரிது - முடிவு கண்டுரைப்பது மிக அரிது - அறிந்து கூறினும் கடைபிடித்தால் அதைவிட அரிது " 
           ஆம் அன்பர்களே எளிய பரிகாரம் என்று தோற்றமளித்தாலும் நடைமுறைபடுத்துவது அரிது - நடைமுறைபடுத்தினால் வெற்றிநிச்சயமே. 


அன்பர்கள் பலர் நமது கட்டுரைகளில் வரும் பரிகாரம் மிக எளிமையாக இருக்கிறது ? எப்படி சாத்தியம் என்று வெறுமனே படித்துவிட்டு பயிற்சி செய்ய தவறுகின்றனர். அன்பர்களே " கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது " மேலும் 'யானை' வடிவம் கொண்ட  'கர்ம வினைகளை '  'சுறுசுறுப்பான எறும்பு' தனது நம்பிக்கையாலும் விடாமுயற்சியினாலும் வீழ்த்தும்  (  இந்த தலத்தில் அய்யா அவர்களால் அருளப்படும் கட்டுரை )


நம்புங்கள் நலமுடன் வாழ்வோம் என்று ! 

                 ஓம் சிவசிவ ஓம் !                     ஓம் சிவசிவ ஓம் !                    ஓம் சிவசிவ ஓம் !!!

ஆன்மீக ஆராய்ச்சியினை நம்மோடு பகிர்ந்தமைக்கு அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு அன்பர்கள் மற்றும் ஆன்மீக கடல்சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்