RightClick

ஆத்மநேயனின் அன்பளிப்புகள்

நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள், கடந்த 32 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு நமது ஆன்மிகக்கடல் அறக்கட்டளை வாயிலாக  நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


இந்த வருடம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் புடைசூழ 19.02.2016 வெள்ளிக்கிழமை அன்று  அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;ஒவ்வொரு ஆண்டும் ஜீன்,ஜீலை மாதங்களில் இவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார்.

சிறப்பு உரை
குழந்தைகளுக்காக நமது தமது கைகளினால் அடையாளஅட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு தனது  சிறப்பு உரையை பேசினார். இன்றைய மாணவர்களுக்கு படிப்பின் இன்றைய நிலைமையில் நமக்கான தனிப்பட்ட கடமையும், சமூகத்தில் நாம் பின் பற்ற வேண்டிய கடைமைகளையும் பற்றியும் தெளிவாக எளிய நடையில் அந்த மாணவமணிகளிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையில்  கடந்த முப்பது  ஆண்டுகளாக இந்த அட்டை வழங்கும் விழா  நடந்ததற்கான ஒரு சுவாரசியமான உரையில் இருந்து  ஒன்று ,   அது அதை நாம் நம் வலைப்பூ வாசகர்களுக்காக நேரிடையாக அய்யாவின் உரையில் இருந்தே இதோ’, கல்வி என்பதன் பொருள்  கல்லாமை இல்லாமல் விரட்டிடு நீ என்பதன் ரத்தினச்சுருக்கம். இன்றைய தொழில்நுட்பம், சமுதாயமும் நாளை உங்கள் கரங்களினால் செயல்படத்தான்.தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்கள் ஒருகதை சொல்லப்போகிறேன், ஒரு ஊரில் இரண்டு நபர்கள் ஊருக்குள் வருகிறார்கள் என்று ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் போ சொல்கிறான். யாருடா அவுங்க என்று அப்பா கேட்க , அதற்கு சிறுவன்., அப்பா நம்ம ஊருக்கு வாத்தியாரும், சிலை செய்பவரும் வந்திருக்காங்க. இதில் இந்த ரெண்டுபேர்ல யாருப்ப ரெம்ப முக்கியம்., அதற்கு அப்பா அவங்க ரெண்டு பேருமே முக்கியம் என்று சொல்ல ., எப்படிபா? என்று சிறுவன் கேள்விகேட்டான்., யாராவது ஒருத்தர சொல்லுங்க அதுக்கான காரணத்தையும் சொல்லுங்கள் என்றான்., அதற்கு அப்பா சற்றும் தாமதிக்காமல் ஆசியர்தான் என்று கூறினார். ஏனன்றால் அவர்களால் மட்டும்தான்., உன்னை அறிவியலாளராகவோ, படைப்பாளியாகவோ, பொறியாளராகவோ,சிந்தனையாளராகவோ மற்றும் ஆசிரியராகவோ மாற்றமுடியும் ஏன், அதோ அவருடன் வந்த சிற்பியாகக்கூட மற்ற இயலும்.. இது மட்டும் அல்லாமல் நமது பெற்றோர், உறவினர்கள் சேர்த்து யார் எந்த  ஒரு நல்லபண்புகளை சொல்லித்தரும் அனைவருமே,  நமக்கு  நல்ல ஆசிரியரின் பிரதிபலிப்புத்தான். அதற்கு அந்த சிறுவன் அந்த சிலை செய்பவர் என்றான்., அதற்கு அவரும் உன்னைப் போன்ற ஒரு மாணவனாக., ஒரு சிலை செய்யும் ஆசிரியரிடம் இருந்துதான் கற்றிருக்கிறார். எனவே நீ எவ்வள்வு சாதனைகளும் செய்தாலும்., உன்னை சாதிக்க அடித்தளம் விதைத்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது.., சரியா என்றார்.,அதற்கு அந்த சிறுவன் சரி என்று தலை அசைத்தான்.இது அந்த பையனுக்கு மட்டும் அல்ல நமக்குத்தான். என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். இறுதியாக மாணவமணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக நடனம், பாடல் மற்றும் நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நமது ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு குழுமம் சார்பாக நமது குருநாதர் மாணவர்களுக்கு அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார். 


புதுவகுப்பறைகள் திறப்புவிழா

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பள்ளிக் கட்டடம் ஒன்றும் கட்டி தரப்பட்டு அய்யவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது .

ஓம் சிவ சிவ  ஓம்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நம்ஹ