RightClick

மார்கழி மாதமும் ஸ்ரீவி ஆண்டாள் அருளும் - அய்யா சகஸ்ரவடுகர்

ஓம் அண்ணாமலையாரே போற்றி ! 
ஓம் உண்ணாமலை அம்மையே போற்றி !! 

ஓம் சிவசிவ ஓம் !! 

ஓம் நமோ நாராயணாய !!! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்





         " நல்லதை நினைப்போம் - நல்லதே நடக்கும் " .. மார்கழி மாதமும் ஸ்ரீவி ஆண்டாள் அருளும் - என்ற உட்கருத்தின் அடிப்படையில் பல வருட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவினை, பலனாக மாற்ற அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் ஆன்மீக வழிமுறைகள் இதோ !! 



நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடைய இப்படி பல நன்மைகளை பயக்கும் திருத்தலமாக விளங்குகிறது நம்   ஸ்ரீஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர். (இந்தியா - தமிழ் நாடு - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ) 



ஸ்ரீ ஆண்டாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி நாம் நன்கு அறிவோம் இருப்பினும் ஒரு சிறு குறிப்பு ;

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் - 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் இது. 

வில்லி என்பவர் இந்த காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது என்றும் வரலாறு உண்டு .

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

நோய் தீர்க்கும் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க்காப்பு: 

 திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் : 

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் : 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் 'பூரம்' அன்று ஸ்ரீ ஆண்டாள் தேரோட்ட உற்சவம் நடைபெறும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு திருத்தேர் வடம் பற்றி ஊர்வலம் வந்து வழிபடுவர்.




18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர்( மாற்று தேர் ஊர்வலம் நடைபெற்றது ) பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். 

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே)

காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம்,கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது. (கருத்துகளை பகிர்ந்ததற்காக நன்றி ஆன்றோர்களே)

இப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ? எப்படி பலன்களை பெற வேண்டும் ? எந்த நாள் ? எந்த நேரம் ? பதில் இதோ 

மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாள் அதாவது நாளை (1-1-2016) முதல் 14-1-2016 வரையில் உங்களது வசதிக்கு ஏற்ப காலையிலோ (மிக்க நன்று ) அல்லது மாலையிலோ கோவிலின் பிரகாரம் சுற்றி வந்து பின்பு வடகிழக்கு பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சென்று ( முறையாக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் ) மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் குறைந்தது 1 நிமிடம் நின்று உங்களது கோரிக்கையினை மனதில் வைத்து அம்மையாம் ஸ்ரீ ஆண்டாள் அவர்களிடம் சமர்பித்து ( 4*1=4 நிமிடங்கள் பிராத்தனை நேரம் ) இப்படி 16 முறை கண்ணாடி மாளிகைக்கு உள்ளே வலம் வர வேண்டும்(கன்னி மூலையில் தொடங்கி அக்னி,ஈசான்யம்,வாயு மூலையில் முடிக்க வேண்டும் - பிறருக்கு ஐயம் வாராதபடி ) சுற்றி வரும் பொழுது பிறரிடம் பேச்சை தவிர்ப்பது நன்று.  பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.மிக விரைவில் பலனை அடைவார்கள்.



இதை முடித்த பிறகு கோவிலின் உட்பிரகாரம் சுற்றி வந்து நேராக கருவறை அருகில் சென்று அன்னை ஸ்ரீ ஆண்டாள் அம்மையைசேவித்து தங்களது பெயர் - நட்சத்திரம் அர்ச்சனை செய்து, கோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும், 
அன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )
இதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது,. கட்டாயம் கை மேல் பலன் உண்டு என்பது அய்யாவின் கூற்று. 




இப்படி செய்தால் உங்களது நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடையலாம் . 

இதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம். 

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர்அவர்களுக்கு ஆன்மீக கடல் சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் நன்றிகள் பல. 

வாழ்க வளமுடன் 

ஓம் சிவசிவ ஓம்!!! ஓம் சிவசக்தி ஓம் !! 

குறிப்பு : 

1) மார்கழி மாதம் 
2) ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் 
3) கண்ணாடி மாளிகை - 4 மூலைகள் - 1 நிமிட பிராத்தனை -அதே போல 16 முறை வலம் (மாளிகைக்கு உள்ளே ) 
4) உட்பிரகாரம் சுற்றி கருவறை அன்னை ஸ்ரீ ஆண்டாள் வழிபாடு - தங்கள் பெயர் கூறி அர்ச்சனை 
5)  கோசாலை - பசுவிற்கு அன்னம் / யானைக்கு கரும்பு ( கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்று ) 
6)  பிரதான கொள்கை - அன்னதானம் (தகுதிக்கு ஏற்ப ) 
7) வேறு எங்கும் செல்லாமல் தங்களது இல்லத்திற்கு செல்லவும்