RightClick

எந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்?





ஆன்மீகத்தில் முன்னேற விரும்புவோர் மணி,மந்திரம்,ஒளஷதம் இம்மூன்றையும் பயன்படுத்த வேண்டும்;அதன் மூலமாக ஆன்மீகத்தில் பல சாதனைகளை எட்ட முடியும்;காலம் காலமாக இப்படித்தான் முன்னேறினார்கள்;ஆனால்,எப்படி முன்னேறினார்கள் என்பது குருவானவர்,தகுந்த சீடனுக்கு மட்டும் உபதேசித்து வந்துள்ளார்;இதனால்,சமுதாயத்தில் பொறுப்பான சீடர்களும்,தகுதி நிறைந்த குருநாதர்களும் யுகம் யுகமாக உருவாகிக் கொண்டே வந்துள்ளார்கள்;

நாம் வாழ்ந்து வருவதோ தகவல்யுகம்! தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று எங்கோ இருந்து உலகம் முழுவதும் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்ப முடிகிறது;அப்படி பரப்பினாலும்,சபையில் சொல்லக் கூடிய விஷயங்களைத்தான் குருவருளாலும்,குருவின் அனுமதியோடும் வெளிப்படுத்தி வருகிறோம்;ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்ட விரும்புவோர் தொடர்ந்து நமது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வந்தால் மட்டுமே மேற்கொண்டு முன்னேற்றத்துக்குரிய தீட்சை அல்லது பயிற்சி அல்லது உபதேசம் கிடைக்கும்;

மணி மந்திரம் ஒளஷதம் என்ற வார்த்தைகளைக் கொண்டே சுமாராக 100 ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்;அவ்வளவு ஆன்மீகப் பொக்கிஷங்கள் இந்த மூன்று வார்த்தைகளிலும் புதைந்திருக்கின்றன;

நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய பக்தி மார்க்கமே போதுமானது;கோவில்களுக்குச் சென்று வழிபடுதல்,வீட்டிலேயே மந்திரம் ஜபித்தல்,குறிப்பிட்ட திதியன்று குறிப்பிட்ட தெய்வத்தை அவரவரின் பிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் திசையைப் பொறுத்து வழிபடுதல் போன்றவையே போதுமானது;

உதாரணமாக,கேது மஹாதிசை,கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் திசை,கேதுவின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகத்தின் திசை போன்றவை வரும் போது தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்;

சுக்கிரமஹாதிசை வந்தால்,திருக்கோவிலூருக்கு அவரவர் ஜாதகப்படி குறிப்பிட்ட கிழமை அல்லது நட்சத்திரநாள் அல்லது திதி வரும்போது சென்று வழிபட வேண்டும்;அவசியப்பட்டால் அபிஷேகம் செய்ய வேண்டும்;

சூரிய மஹாதிசை வந்தால் கண்டிப்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;

சந்திர மஹாதிசை வந்தால் சாந்தமான பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;சந்திரனுடன் ராகு,செவ்வாய் போன்ற பாவக் கிரகச் சேர்க்கை இருந்தால் உக்கிரமான பெண் தெய்வத்தை ‘முறைப்படி’ வழிபட வேண்டும்;

செவ்வாய் மஹாதிசை வந்தால் சஷ்டி திதியில் முருகக் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;அவரவர் ஜனன ஜாதகப்படி கடலோர முருகன் அல்லது மலைமீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;

ராகு மஹாதிசை வந்தால் நாகர்கோவில் நாகராஜா கோவில்,இருக்கன்குடி,சமயபுரம்,பொன்னமராவதி அருகில் அமைந்திருக்கும் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோவில்,கரூர் பசுபதீஸ்வரர் கோவிலினுள் அமைந்திருக்கும் கருவூர் சித்தர் வழிபாடு,திருநாகேஸ்வரம்,காளஹஸ்தி பாதாளபைரவர் வழிபாடு மற்றும் உக்கிரமான பெண் தெய்வ வழிபாடு =இவைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்;ராகு மஹாதிசை நடைபெறும் 18 ஆண்டுகளுக்குமே இந்த மாதிரியான கோவில்களுக்கு மாதம் ஒருமுறை செல்ல வேண்டும்;ராகுவின் நட்சத்திரம் நிற்கும் நாளில்,ராகு காலத்தில் வழிபாடு நற்பலன்களைத் தரும்;

குரு மஹாதிசை வந்தால் சித்தர்கள் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்;ஆன்மீக வழிகாட்டிகளின் தொடர்பும் அதன்மூலமாக தெய்வீக ரகசியங்களும் தேடி வந்துகொண்டே இருக்கும்;குரு ஓரை மற்றும் குருவின் நட்சத்திர நாட்களில் தெய்வீக முன்னேற்றங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்;

சனிமஹாதிசை வந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;இதன் மூலமாக சனி மஹாதிசையின் வலிமை அதிகரிக்கும்;யோகம் தரும் சனிமஹாதிசையாக இருந்தால் யோகத்தின் சக்தி அதிகரிக்கும்;அவயோகம்/பாதகம் தரும் சனி மஹாதிசையாக இருந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு அதை பெருமளவு குறைத்துவிடும்;

புதன் மஹாதிசை வந்தால் மஹாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டும்;

எந்த திசை வந்தாலும் சரி;இறைவனை பூக்கள் ,பழங்கள்,தூபதீப நைவேத்தியம் கொண்டு வழிபட வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது பக்தியுணர்வு இறைசக்தியைச் சென்றடைகிறது;அவ்வாறு சென்றடையும் போது நமது கோரிக்கைகளும்நீண்டகால ஏக்கங்களும்,வேண்டுதல்களும் இறைசக்தியைச் சென்றடைகின்றன;

வேகமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில்,நம்மில் பலர் கோவிலுக்குள்ளேயும் பரபரப்பாகவே வழிபாடு செய்கிறோம்;வேகமாக கோவில் வாசலுக்கு வருகிறோம்;தேங்காய் பழக்கடையில் நமக்குத் தேவையான தேங்காய்,பழம்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் வாங்குகிறோம்;கடைக்காரரும் கேரி பேக்கில் வைத்துத் தருகிறார்;(சில சமயம் தட்டிலும் வைத்துத் தருவதுண்டு) அந்த கேரிபேக்குடன் வேகமாக கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு சன்னதியில் நின்று வேகமாக வேண்டிவிட்டு,மூலஸ்தானத்துக்குச் செல்கிறோம்;கடைக்காரர் கொடுத்த கேரிபேக்கை ‘அப்படியே’ பூசாரி/பட்டர்/சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிடுகிறோம்;இப்படிச் செய்வதால் நமது கோரிக்கைகள் நிறைவேறுவதே இல்லை;ஏன்?

கடைக்காரர் கேரிபேக்கினுள் தேங்காயை எடுத்து வைக்கும் போது ‘மகளுக்கு கல்யாணம் ஆகணும்’ என்றோ,

‘கடன் சீக்கிரம் தீரணும்’ என்றோ

‘சொந்தமா வீடு வாங்கணும்’ என்றோ

கட்டிய வீட்டுக் கடன் சீக்கிரம் தீரணும்’ என்றோ நினைத்து தேங்காயை எடுத்துத் தருகிறார்;அவரது எண்ணம் தேங்காயில் படிந்து விடுகிறது;

அதேபோல்,பழங்கள்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் இவைகளையும் வைத்துத் தருகிறார்;நாமோ,நமக்கு இருக்கும் ‘பிஸி’யில் கேரிபேக்கில் இருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கூடத்தருவதில்லை;இதனால்,கடைக்காரரின் கோரிக்கை நிறைவேற நாம் பூஜைப் பொருட்கள் வாங்குகிறோம்;ஒருவேளை தட்டில் பூஜைப் பொருட்கள் வாங்கினாலும் பூசாரியிடம் கொடுக்கும் போது பூஜைப் பொருட்களை நாம் நமது இரண்டு கைகளால் தொட்டுத் தருகிறோமா?(அப்படி நாம் தொட்டுத் தந்தால் மட்டுமே நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நமது ஆன்மீக குருவின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு)

முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)

தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;

வள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர்த்த மாலையை அணிவிக்க வேண்டும்;

சப்தகன்னியர்களுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் கொண்ட மாலையை அணிவிக்க வேண்டும்;

வைத்தியக் கடவுளான தன்வந்திரிக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;

நரசிம்மருக்கு மல்லிகைப் பூ மாலையை(செவ்வரளிபூவை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

விஷ்ணு துர்கைக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;

மஹாவிஷ்ணுவுக்கும்,ஹயக்ரீவருக்கும் துளசிமாலையை அணிவிக்க வேண்டும்;ரோஜாமாலையை(துளசியை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;

குலதெய்வம் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்;

ஜீவசமாதிகளுக்கு மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;

அம்பாளுக்கு ரோஜாமாலை அல்லது செவ்வரளி மாலையை(குஞ்சம் வைக்காமல்) அணிவிக்க வேண்டும்;

சிவபெருமானுக்கும்,சிவலிங்கத்திற்கும் மல்லிகை மாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அல்லது ரோஜாமாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அணிவிக்க வேண்டும்;

காளியம்மாள்,மாரியம்மாள்,பத்திரகாளியம்மாள்,அங்காளபரமேஸ்வரி,    பூமாரி,பரமேஸ்வரியம்மாள்,முனியாத்தாள்,முனீஸ்வரி(அம்பாளின் பெயர்களில் ஒன்று),துர்கையம்மன்,பட்டத்தரசியம்மாள்,பெரியமாரி,சின்னமாரி,   முத்துமாரி,மகேஸ்வரி,ஜெயமாரி,செல்லியம்மன்,செவ்வாடைக்காரி,   பூவாடைக்காரி,கருமாரி,தேவி கருமாரி போன்ற உக்கிரமான பெண்தெய்வங்களுக்கு 27 அல்லது 58 அல்லது 108 எலுமிச்சைம்பழங்களால் மாலையை கட்டி அணிவிக்க வேண்டும்;

அதேசமயம்,இந்த அம்மன் கோவில்களில் ஒருபோதும் எலுமிச்சை பழங்களை அறுத்து அதில் தீபம் போடக்கூடாது;நவீனகால மூடநம்பிக்கையாக இந்த பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;இந்த உக்கிரமான பெண்தெய்வத்திற்கு ஒரு போதும் ரோஜா மாலையை அணிவிக்கக் கூடாது;

ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீயோக பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு ரோஜாமாலை(குஞ்சமாக அருகம்புல் வைத்து) அல்லது செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;மிளகுவடை மாலையை செய்தும் அணிவிக்கலாம்;மிளகுவடையை எட்டின் மடங்குகளில் செய்தமாலையாகக்  கோரித்து அணிவிக்கலாம்;

சூரியபகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்;

சந்திரபகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;

செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;

ராகு பகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;

புதபகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;

சுக்கிரபகவானுக்கு மல்லிகைப்பூமாலையை அணிவிக்க வேண்டும்;

கேதுபகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;

சனிபகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்கவேண்டும்;

குருபகவானுக்கு செவ்வந்தி மாலையை அணிவிக்க வேண்டும்;


எந்த கடவுளுக்கும்,ஜீவசமாதிக்கும் கேந்திப்பூவை ஒருபோதும் அணிவிக்கக்கூடாது;எந்த ஒரு சுபகாரியத்திற்கும் கேந்திப்பூ உகந்தது அல்ல;தமிழ்நாட்டில் பலர் இறைவழிபாட்டிற்கு கேந்திப்பூவை பயன்படுத்தி வருகின்றார்கள்;இது மிகவும் தோஷத்தையும்,கடுமையான பாவத்தையும் நமக்குத் தரும்;

பூமாலையை வாங்கும்போது பேரம் பேசாமல் வாங்க வேண்டும்;

தோஷநிவர்த்திக்கு என்று நவக்கிரகக் கோவிலுக்கோ அல்லது பைரவ சன்னதிக்கோ செல்லும் போது கைப்பட உரிய பூக்களை வாங்கி,தோஷமுள்ளவர் மாலையாக கோர்ப்பது அவசியம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ