RightClick

கால சர்ப்ப தோஷமும் கால பைரவரும்


ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்களை கொடிய சர்ப்பத்திற்கு அடையாளமாக காட்டி, இந்த இரு கிரகங்களுக்கும் நடுவில் மற்ற ஏழு கோள்களும் வானில் இருக்கும் நிலையை சர்ப்பகாலம் என்றும், அந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை, கால சர்ப்பத்தில் பிறந்தவைகள் என்றும் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

ராகுவைத் தலைப்பகுதியாகவும், கேதுவை வால் பகுதியாகவும் ஜோதிடம் குறிப்பிடுகிறது. மேஷத்தில் ராகு சஞ்சரித்தால் துலாமில் கேது இருக்கும். அதாவது 180 டிகிரியில் இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் தொடங்கி, ஏழு வீடுகளுக்குள் தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியும், ஏழாம் வீட்டில் தொடங்கி, லக்னத்தில் முடிபவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியும் சிக்கலாக இருக்கும். 

சிக்கல் என்ற சொல்லுக்குள், அனைத்துவிதமான கஷ்டங்களும், துன்பங்களும் அடங்கும். ஆண்டவன் அனைவருக்கும் அனுக்கிரகம் புரிபவன். தன்மீது நம்பிக்கை கொண்டவர்களை அவன் கைவிடுவதே இல்லை.

தோஷ ஜாதகன் திருமண வாழ்க்கை நன்றாக அமையாது. வேலையின்றி சுற்றித் திரிய வேண்டிவரும். தீய, கொடிய பழக்கங்களுக்கு ஆளாகி, பிறரால் ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன?

கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.





வால்மீகி , ஜெயந்தன் , மஹா விஷ்ணு ,முருகன் , அருணகிரி நாதர் பேன்றோர் வழிபட்ட மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலம் இது.



எத்தகைய பாவங்கள் செய்திருந்தாலும் அதை உணர்ந்து மன்னிப்பு கோரினால் அதற்கு முழுமையான மன்னிப்பு உண்டு என்பதை இங்கு வழிபட்ட வான்மீகி முனிவரின் வாழ்க்கை முலம் அறியலாம்.



பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.



கால சர்ப தோஷம் என்பது என்ன? 

காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும். எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.


ஓம் ஹ்ரீம் மஹாபைரவா நமஹ