RightClick

கடலூரிலும் வீற்றீருக்கும் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்

                                                                                                                                               

இத்திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள வடலூருக்கு தெற்கு திசையில்  சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள நற்கருங்குழி கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. வள்ளலார் தண்ணீரால் விளக்கெரித்த இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

                                         திருக்கோயில் தோன்றிய வரலாறு



சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் குலோத்துங்க மன்னர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மன்னர் தன்  துணைவியாரின் திருகைலாச தரிசன வேட்கையைப்  போக்க வேண்டி திருகைலசநாதனையே தமது அருட்சக்தியால் மானசீகமாக கைலாசநாதபெருமானை கொண்டு வந்து, இவ்வூரில்   கைலாசநாதர் திருக்கோவில் என்று பெயர் சூட்டினார். மன்னரின் துணைவியாரும் அன்று முதல் இத்திருக்கோவிலேயே                      திருக்கயிலைநாதர்  தரிசனத்தைப் பெற்று   வந்தார். அன்று முதல் தற்போது வரை  இத்திருக்கோயிலில் திருக்கைலாச நாதரின் தரிசனம் போல் தினமும் மூன்று வேளையும்  நடந்து வருகிறது. 


                                                 திருக்கோவில் பராமரிப்பு


  இத்திருகோவிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கடலூர் உதவி ஆணையர் ஆளுகைக்கு உட்பட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய  அதிகாரி அவர்களால் தக்கார் நிலையில் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

                                                  பூஜை விவரம்

இத்திருகோவிலில் தரிசனம்   காலை 5.30am, மதியம் 11.30am, இரவு 7.30pm, ஆக மூன்று கால பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் , முருகன் சன்னதியும், நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது. நந்தவனம், மடபப்பள்ளி சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
  

                                                   திருக்கோயில் மகிமை 



இத்திருக் கோவிலில் வந்து ஒருமுறை  தரிசித்து சென்றால் 12 முறை திருக்கைலாயம் சென்று வந்த பலன் கிடைக்கும். திருக்கைலாயம் சென்று வந்தால்  என்னென்ன ஆத்மபலன்   கிடைக்குமோ? அதே பலனை அனுபவிக்கலாம், நோயற்றவாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் பெற்று இம்மையிலும் மறுமையிலும் கையிலை நாதரின் அருளைப் பெறுவது உறுதியாகும்.
 

                                                              விழாக்காலம்

இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி அன்று சூரசம்ஹாரம், விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி மற்றும் மார்கழி  விழாக்கள்  உபயமாக மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.


                                                            குடமுழக்கு



இத்திருக்கோயில் கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உபயத்தால் திருப்பணி வேலைகள் நடைபெற்று மூன்று குடமுழக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருக்கோவில் பொலிவுடன் திகழ்கின்றது. இத்தனை பெருமையும் அருட்சக்திக்ளையும் உள்ளடக்கிய இந்த ஆலய திருப்பணி  மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் வாசர்களும் தங்களை இணைத்துக் கொண்டால் நிச்சயம் அந்த கைலாய பெருமானின்  அருளில் நாம் பங்குகொள்ளலாம். இதில் இறை அன்பர்கள் யாரும் தங்களை இணைத்து கொள்ள விரும்பினால்  கீழேக்  குறிப்பிட்டு  உள்ள கைபேசியில்   கோவில் நிர்வாகத்தினரை தொடர்புகொள்ளவும்.


அருள்மிகு காமாட்சி சமதா  கைலாசநாதர் காமாட்சி சுந்தரி திருக்கோவில்  நிர்வாகம்,
சிவன் கோவில் தெரு, 
கருங்காலி(PO),
வடலூர்-607303
கடலூர் மாவட்டம் ,

தலைவர்-திரு.S.இராஜேந்திரன்,
                     கைபேசி-9443411453
உப தலைவர் -திரு.s.அருள்பிரகாசம் 
                      கைபேசி-8508547936


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ