RightClick

சொர்ணகார்ஷ​ண கிரிவலம் இனிதாக நிறைவு பெற்றது : பகுதி 3

இந்த பகுதியானது குருநாதரின் வழிகாட்டுதலின்படி உங்களின் பகுதியாகும், ஆம்  ஏன் என்றால் கிரிவலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் கிரிவலத்திற்கு வந்ததிற்கு பின் கிடைதிருக்கும் நன்மைகள் பற்றி மின்அஞ்சல் மூலம் தொடர்ந்து தெரிவித்த வண்ணம்   உள்ளனர். அவர்களே தங்களுடைய  அஞ்சலை பகிர்ந்து கொள்ள   கேட்டதின்  பெயரில் அவற்றில் ஒரு மின் அஞ்சல் கடிதம் உங்கள்  பார்வைக்கு,   அவரின் நடையிலேயே  இந்த வலைபதிவில் இடம்  பெறுகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 



"கடந்த 20 ஆம் தேதி சொர்ண கிரிவலத்தில் சென்னையில் இருந்து வந்து  நான் கலந்து கொண்டேன், நான் 2014 ஜூலையில் BTECH (IT) முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தேன், அச்சமயம் உங்கள் வலைதளத்தை பார்த்து ஆகஸ்டு 2014ல் இருந்து  சொர்ண ஆகர்ஷண பூஜையை வீட்டில் செய்து வந்தேன், என் குடும்பத்தின் பொருளாதாரம் தேவைகேற்ப அதிகரித்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது, வேலை மட்டும் கிடைக்கவில்லை, அதற்கு பதில் வீட்டில் tuition மற்றும் onlineயில் வேலை செய்து வருமானம் ஈட்டி கொண்டிருந்தேன் (முழுக்க முழுக்க பைரவர் அருளால்). ஆனால் என்னுடைய படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என மன வருத்தம் இருந்து கொண்டுதான் இருந்தது, அப்போதுதான் நல்ல உள்ளம் படைத்த சகஸ்கர வடுகர்  அவர்களின்  வலைதளத்தில் சொர்ண கிரிவலம் பற்றி படித்து நவம்பர் 20 ஆம் தேதி அதில் கலந்து கொண்டேன், நவம்பர் 18 வரை 11 நேர்காணலை சந்தித்து இருப்பேன் ஆனால் என் கர்ம வினைகளின் காரணமாக நான் எதிலும் செலக்ட் ஆகவில்லை. நான் சொர்ண கிரிவலம் சென்று ஐயாவின் ஆசியுடன் சுற்றிவந்து வீடு திரும்பிய பின் attend செய்த முதல் interviewல்(25-நவம்பர்-2014)  select ஆனது முற்றிலும் சொர்ண கிரிவலத்தின் மகிமையே!
சொர்ண பைரவரின் அருள் எல்லோருக்கும் கிடைக்க இந்த பதிவை உங்கள் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் ஐயா.
கிரிவலத்தின் ஆரம்பத்தில் ஐயா அவர்கள் ஆசி வழங்கும் போது, அவர் காளி தேவியின் அற்புத அருளை பெற்றவர் என என் ஆழமானது சொன்னது, கூட்டத்தில் என்னால் சொல்ல முடியவில்லை அதனால் இப்போது தெரிவித்திருக்கிறேன் ஐயா.

ஐயா சொன்னபடி 9 நாட்களுக்குள் நினைத்த பிராத்தனைகள் நடக்கும் என்பது எனக்கு 5 நாட்களில் நடந்தது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.
ஐயா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் குடும்பத்தில் உள்ள அனைவரது விருப்பமாக உள்ளது. அதற்காக உங்கள் replyயை எதிர்பார்க்கும் அடியேள்!

சகஸ்கர வடுகர் அய்யாவுக்கு மிக்க நன்றி! "






ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ