RightClick

கோடி அஸ்வமேதயாகம் செய்த பலனைத் தரும் சோமசூக்தப் பிரதட்சணம்!!!



மனதிற்குள் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தவாறு,முதலில்
நந்தியெம்பெருமானை தரிசித்துவிட்டு,சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள நந்தியின்
இரு கொம்புகளுக்கும் இடையே சிவலிங்கத்தைத் தரிசிக்க
வேண்டும்;பிறகு,அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் சன்னதி வரையிலும் சென்று
சண்டிகேஸ்வரை வழிபட வேண்டும்;(சிவாலயத்திற்கு வருகை தந்தமைக்கான புண்ணியத்தைத்
தரும் பொறுப்பு சண்டிகேஸ்வரருக்கு இருக்கிறது)பிறகு,முன்பு போல நந்தியை
வழிபட்டுவிட்டு,மீண்டும் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவலிங்க வழிபாடு
செய்ய வேண்டும்;பிறகு,சுவாமியின்(மூலவரின்) இடதுபுறம் இருக்கும்
அபிஷேகத்தீர்த்தம் விழும் தொட்டிவரை(இதன் மறுபெயர் கோமுகம்)வந்து மீண்டும்
சன்னதிக்கு வந்து சிவலிங்க வழிபாடு செய்ய வேண்டும்;பிறகு நந்தியையும் வழிபட
வேண்டும்;

 இதுபோல மூன்று முறை செய்தால்,அதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும்.இப்படிச்
செய்வதன் மூலமாக சிவனருளை கோடி மடங்கு பெறலாம்;பிரதோஷ நேரத்தில் ஒருமுறை
ஓம்சிவசக்திஓம் ஜபித்தால்,10,00,000 முறை ஜபித்தமைக்கான பலன்கள் நமக்குக்
கிட்டும்;ஒரே சமயத்தில் அன்னையின் அருளும்,தந்தையின் ஆசியும் நம்மைத்
தேடிவரும்;

 பிரதோச நாளில் பிரதோஷ நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை;பிரதோஷ நாளில் எந்த நேரத்திலும் இந்த சோமசூக்த பிரதட்சணம்
செய்யலாம்;சனிப்பிரதோஷ நாளில் மட்டும் இறுதி 30 நிமிட நேரத்திற்குள் இப்படி
சோமசூக்தப்பிரதட்சணம் வருவது நன்று.இதன் மூலமாக கோடி முறை அஸ்வமேதயாகம் செய்த
பலன் நமக்குக் கிட்டும்;

 பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு,திருப்பாற்கடலை வாசுகி என்ற நாகத்தைக்
கயிறாக்கி,கடைந்த போது முதலில் உண்டானது ஆலகால விஷமே! அந்த விஷத்தின்
தாக்குதலில் இருந்து தப்பிக்க மேலே கூறியது போல வலது புறமும்,இடது புறமுமாக
நகர்ந்ததையே இன்று சோமசூக்தப் பிரதட்சணமாகப் பின்பற்றி வருகிறோம்.

 பிரதோஷ நேரத்தில் திருமால் கையிலாயத்தில் இருந்ததை நினைவூட்டும் வகையில்
இன்றும் ஒவ்வொரு பிரதோஷ நாளன்று மாலையிலும் பெருமாள் கோவில்களில் சுவாமியை
திரையிட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஐதீகம் பின்பற்றப்பட்டுவருகிறது.

ஓம்சிவசக்திஓம்