RightClick

கோவலம் சிறப்பு பிரார்த்தனை -சகஸ்ரவடுகர்



அனைவருக்கும் வணக்கம்.

               நாம் அனைவரும் சேர்ந்து சிறப்பிக்க வேண்டிய கோவலம்., சில தவிர்க்க முடியாத காரணத்திக்காக நடைபெறவில்லை என்ற வருத்தம் வேண்டாம்.  வலைபூவில் வந்த அறிவிப்பின் படி அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள கோவிலில் சென்று வழிபட்டிருப்பிர்கள். உங்களுக்காக நான் என் பிரார்த்தனையுடன் உங்கள் பிரார்த்தனையும் நெல்லைஅப்பரின் பாதத்திலும் , சித்தர்களின் பாதத்திலும் வைத்து விட்டேன்.  அவர்கள் அருளும் ஆசியும் உங்களை வந்து சேரும்.மேலும் அபிசேக பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது உங்களை நியமான கோரிக்கை அனைத்தும் நிறைவேறும். மிக சிறப்பாக கோவலம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது


சிறப்புரை 

         கோவலத்தின் வெளிப்பாடை உடனே என்னால் அங்கு என்னால் அங்கு உணரமுடிந்து, அதற்கு சான்றாக அங்கு சைவ வேளாண் சன்மார்க்க மக்கள் குழு ஒன்று அங்கு வழிபாட்டு பாடல்களை பாடிகொண்டிருந்தார்கள்.  அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பின்கூறிய விஷயத்தை பகிர்ந்து அங்கிருந்து விடைபெற்றேன். 

கோவலத்தின் பின்புலம் 

            120 வருடங்களுக்கு முன் இந்த நெல்லைப்பர் பெருமான் இவ்வளவு சிறப்பு பெற்றிருக்கவில்லை., அன்றைய மக்கள் துயரங்கள் பல வருடங்களாக சித்தர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். அப்பொழுது நம் 18 சித்தர்கள் அனைவரும் அவர்களின் அன்பிற்கு இசைந்து சித்தரை மாதத்தில் திருவாதிரை மற்றும் பஞ்சமி சேர்ந்து வருகிற நாளை தேர்வுசெய்து, அன்று யாகம் ஒன்றை நடத்துவதற்காக முடிவை எடுத்து அதை செயல்படுத்தினார்கள். இங்கு அவர்கள் திருவாதிரையை சிவன் என்றும் பஞ்சமியை பார்வதி அம்மையாரும் என்ற அம்சத்தில் யாகத்தை முடித்தனர். அந்த யாகம் கோவிலின் குளத்தின் படியில் அமர்ந்து நிகழ்த்தபட்டு., அந்த யாகத்தில் பயன்படுத்தப்பட்ட நீரை எடுத்துவந்து கற்பககிரகத்தில் உள்ள லிங்கத்தில் மேல் ஊற்றபட்ட்து . அடுத்த வினாடியே மழை பொழிந்து மக்களின் இன்னல்கள் அனைத்தையும் நீக்கினார் நம் நெல்லைஅப்பார் . அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட புத்துணர்ச்சியை நமக்கு நெல்லைஅப்பர் அருள்வார்.


-சகஸ்ரவடுகர்