RightClick

தீபம் - சகஸ்ரவடுகர்.



உலகில் உருவாகும் கலைநிலைகளில் இருவகைப்படும். அவை இருள் மற்றும் வெளிச்சம். இந்த இரண்டு காரணிகளை இயக்கும் சக்திகள் முறையே சந்திரன், சூரியன் ,இவர்கள் ஆட்சியில்தான் உலகில் அனைத்தும் ஜீவராசிகளும் ஜனிக்கிறது மற்றும் மறைகிறது. பகலவனும், சந்திரன் என இரு அரசர்கள் உலகில் உள்ள உயிரனங்களை ஆட்சி செய்து வந்தாலும் நமது பைரவரே குருவாக இருந்து அந்த பலம் பண்ணுகிறார். இவரின் அன்பையும், அருளையும் பெருவதற்காக பயன்படுவதே தீபம் ஆகும்.

பண்டைய காலங்களில் பைரவரின் சக்தியின் வெளிப்பாடு தீபமாகவே இருந்தது. அவரின் ஒளியாலே தீமைகளும், சாபங்களும் பிணியும் விலகி நிற்க வைத்தது. அந்த ஒளி ஆற்றல் உலகின் இருளை மீட்டு எடுத்து நன்மை சேர்த்தது. அந்த ஒளி ஜீவராசிகளையும் ஒளிர செய்தது உண்மை. இதன் சாட்சியாகவே சூரியனும், சந்திரனும் உயிரனங்கள் துயிலில் ஆழ்ந்தாலும் எழுந்தாலும் பிரபஞ்சத்தை விட்டு பிரியாமல் படர்ந்து வருகிறது.

தீபம் பற்றிய விஷயங்கள் இருளையும உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொது சில சித்தர்களின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக சொன்னால் வள்ளார் பெருமான் அன்பும் அருள் நினைவுக்கு வருகிறது. அவர் மொழியில், தீப வழியில் மட்டுமே இருளை நீக்க முடியும், அந்த ஒளி நம்மை அனைத்துவிதமான இருளையும் விளக்கி அழைத்து செல்லும், இதில் எந்த விதமான ஏற்றதாழ்வு இல்லை. இதன் பிரகாசம் அனைவருக்கும் சமம்.

தீபத்தின் நன்மைகள்



வீட்டிலும், வியாபார தளத்திலும் தீமைகளை ஈர்த்து நன்மை மட்டுமே வெளியிடும் இயல்பு உடையது.

பக்தியின் உறுதுணையாக நின்று அனைத்துவிதமான வேண்டுதல்களுக்கும் சாட்சியாகவே நிற்கிறது.

நமது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தீபமே விருப்ப வழிபாடு என்பதில் சிரிதளவும் சந்ததேகம் கொள்ள வேண்டாம்.

நமக்கும் நடக்கவிருக்கும் அனைத்து நன்மைகளை ஊக்குவிக்கும் திறன் தீப ஒளியாலே சித்தம் ஆகும்.

நமது வேண்டுதலை இறைவனின் பாதத்தின் அருகில் கொண்டு சேர்க்கும் காரகனே தீபம்.

சித்தர்களின் வருகையும் மற்றும் பெரியோர்களின் அன்பையும் தீப வழிபடு முலமே ஈட்டமுடியும்.

மாயவழி துர் இடர்கள் போன்ற நிழல் நம்மை விட்டு விலக தீப வெளிச்சம் நமக்கு நண்பன் ஆகும்.

சில மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் இயக்கம் இந்த தீப பிம்பத்தை சேர்த்துக்கொள்கிறது.

இன்னும் எளிமையாக சொல்லப்போனால் நமது எல்லாவிதமான நிகழ்வுக்கு முழுமுதற் பொருள் தீபம் அமைந்திருப்பதை நீங்கள் அனைவரும் காணலாம்.

தீப வகைகள்

இறைவனின் அவதாதரத்திற்கு ஏற்றவாறு தீபத்தின் வகைகள் வேறுபடும் அவற்றில் முக்கியமான சில,

பிள்ளையார் – தேங்காய் எண்ணெய்

இலட்சமி - பசுநெய்

அம்மன் - இலுப்பை எண்ணெய்

பைரவர் - எள் தீபம்

இந்த முறையில் ஏற்றி வழிபட்டால் உங்கள் நியமான தேவைகள் மற்றும் பிரச்சனைகள் ஒரு மண்டத்தில் நிறைவேறும்.

-சகஸ்ரவடுகர்.