RightClick

ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் நடத்திய வருடாந்திர அன்னதானம்!!!









விஜய வருடம்,பங்குனி மாதத்தில் தென் தமிழ்நாட்டில் பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் விரதம் இருந்து பூக்குழி இறங்குவது பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது;வட தமிழ்நாட்டில்  இதை அக்னி குண்டம் இறங்குதல் என்று அழைப்பது வழக்கம்;அம்மனுக்காக காவி,சிகப்பு,மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு,சொந்த ஊர்/கிராமத்தை விட்டு எங்கும் செல்லாமல் ஒரு நாளுக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு,விரதம் இருந்து பத்தாவது/இருபதாவது நாளில் பூ(தீ) இறங்குவது வழக்கம்;

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள் நிறை முத்துமாரியம்மன் கோவில் சுமாராக 300 ஆண்டுகள் பழமையானது;கடந்த 48 ஆண்டுகளாக இங்கே பூக்குழித் திருவிழா பங்குனி மாதம் தோறும் நடைபெற்றுவருகிறது.வருடம் தோறும் இங்கே பூ இறங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இங்கே பூ இறங்குபவர்களின் நியாயமான பல கோரிக்கைகள் முத்துமாரியம்மன் அருளால் நிறைவேறி வருகின்றன.இதனால்,கடந்த சில ஆண்டுகளில் இங்கே பூ இறங்குபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட ஆரம்பித்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம்,தூத்துக்குடி மாவட்டம்,கன்னியாகுமரி மாவட்டம் என்று மூன்று மாவட்டங்களிலும்,இந்த மாவட்டங்களைக் கடந்தும் அருள்நிறை முத்துமாரியம்மனின் அருளாற்றலை உணர்ந்திருக்கிறார்கள்;முத்துமாரியம்மன் அருளால் திருமணத்தடை,நீண்டகாலக் கடன் போன்றவை நீங்கியிருக்கின்றன;

ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் இந்த வருடத்தில் 3.4.14 வியாழக்கிழமை அன்று முத்துமாரியம்மன் திருக்கோவில் அருகே அமைந்திருக்கும் சமுதாயக் கூடத்தில் வருடாந்திர அன்னதானம் செய்தார்;அன்னதானத்தின் முடிவாக,மூன்று தலைமுறையாக பூ இறங்கி வரும் பக்தர்கள்,பக்தைகளுக்கு ஆடை தானம் வழங்கினார்;நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப்பணிகளை ஆன்மீகஅரசு மற்றும் ஆன்மீகக்கடல் தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்;



ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ