RightClick

ருத்ராட்சம்

நம் நாடு ஆன்மீக பாரம்பரியங்களின் வேர்கள் என்பதை விளக்குவதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் எப்போதுமே நிருபிக்கிறார்.நமது மண்ணின் விதைகளாய் இருக்கிற ரிஷிகளும் சித்தர்களும் குருமார்களும் மற்றும் மருவத்துவர்களும் வழிபாட்டின் மகிமையை கொண்டு செல்லவும் அதன் பயனின் மகிமையை விளக்கியும் காட்டி இருக்கிறார்கள். அந்த விதையில் வந்த பூக்கள் தான் நாம்.அவர்கள் தங்கள் உபவாசங்களை மக்கள் முன் வைக்கும் போது இறைவனின் அருகினில் பல அரிய பொக்கிஷங்களையும் பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள். அவைகள் மலர்கள்,கனிகள்,தானியங்கள்,ருத்ராட்சம் மற்றும் திருநீறு என பலவகையான விஷயங்களை நம்மிடம் சொல்லி சென்றிருக்கிறார்கள். இதில் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள் என கருதப்படுவது மகா வில்வம் மற்றும் ருத்ராட்சம்.







இந்த பொருளைப் பற்றிய விழிப்புணர்வையும், பயன் மற்றும் உபயோகிப்பதன் பற்றி நிறைய நூல்களின் மூலமாகவும், குருமார்களின் மூலமாகவும் நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் நீங்கள் உபயோகித்து பலன்களையும் பெற்றுக் கொண்டு இருக்கலாம். இந்த கட்டுரையில் சில முக்கியமான விஷயங்களை தெரிவிக்க உள்ளேன். அது என்னவென்றால் ருத்ராட்சம் மற்றும் பத்ராட்சம் என்பதன் வித்தியாசம். பத்ராட்சம் என்பது ருத்ராட்சத்தின் சாயலில் இருக்கும் நகல் வடிவம். இவற்றில் எந்தவித சக்தியும் இருக்காது. இது வழிபாட்டுக்கும் மற்றும் தியானம் போன்ற விஷயங்களுக்கும் உகந்தது அல்ல. அப்படி என்றால் இன்றைய கடைகளில் கிடைக்கும் போலிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறிர்களா? கவலை வேண்டாம் , இனிமேல் தைரியமாக நீங்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சத்தையும் சரி இனிமேல் அணிய இருப்பவர்கள், ருத்ராட்சத்தை சுடு நீரில் போடுங்கள் அது வெடித்தால் பத்ராட்சம், இல்லை என்றால் ருத்ராட்சம்.அடிப்படையில் ருத்ராட்சம் 1 முதல் 32 முகங்கள் இருக்கிறது.இதில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் போலிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.இந்த கட்டுரையை நம் ஆன்மீக நண்பர் ஒருவர் சில லட்சங்களை செலவு செய்தும் அதில் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து மிகவும் வருந்தினேன். அதன் வெளிப்பாடு இந்த கட்டுரையின் பிறப்பிடம்.



யார் என்ன ருத்ராட்சம் அணியலாம் ?



ஒரு முக ருத்ராட்சம் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களிடம் மட்டும் தான் உள்ளது. இதனால் இதை தேடும் முயற்சியில் பணங்களை விரயம் செய்ய வேண்டாம். வியாபாரம் செய்பவர்கள் ஏழு முகமும் , குழந்தைகள் கல்விக்காக நான்கு முகமும் அணிந்து கொள்ளலாம்.நடுத்தர வயதான அன்பர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவது சிறப்பு.



ருத்ராட்சம் விளையும் இடம்



நேபாளத்தில் ருத்ராட்சம் விளைகிறது.இதில் முக்கியமான ஒரு முக ருத்ராட்சமானது அங்குள்ள மன்னர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் மட்டுமே காணிக்கையாக்கப் படுகின்றன.இதை இவர்கள் மட்டும் அல்ல நம் சைவ சமய ஞானிகளும் ருத்ராட்சத்தை புண்ணிய ஸ்தலங்களிலும் வைத்து சீடர்களுக்கும் கொடுத்துள்ளார்கள் என்பது சிறப்பு.



பயன்கள்



சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது போன்று சித்தர்களின் அணிகலானது சிவனின் அணிகலன் ஆகும். அந்த அளவிற்கு சக்தியும் சிறப்பும் வாய்ந்தது ருத்ராட்சம். நேரடியாக ஆன்மீக பெரியோர்களின் கைகளில் இருந்து பெற்றோமாயின் நிச்சயம் சிவ பலத்தையும் சக்தி அருளையும் பெறலாம்.இதுவே நம் பைரவரின் விஷேச சக்தி வாய்ந்த அணிகலன். இதன் முலம் தங்கள் தகுதிகளையும் பொன் , பொருள் போன்ற தேவைகளையும் நியாயமான முறையில் பெற்றவர்கள் ஏராளம். இது சில அரிய பெரிய மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். நமது சித்தர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன