RightClick

அபூர்வமான ராம நவமியை நாமும் கொண்டாடுவோம்!!!





விஜய வருடத்தின் இறுதி மாதமான பங்குனி மாதத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;செவ்வாய்க்கிழமையில் ராம நவமி 48 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்திருக்கிறது;மிகவும் அபூர்வமான  ராம நவமி இந்த வருடம் 8.4.2014 அன்று வர இருக்கிறது.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி

ராமசாமி

ஸ்ரீகோபால க்ருஷ்ணன்

ராமர்+சீதை

லட்சுமணப் பெருமாளுடன் ராமர்+சீதை

நவநீதக் கிருஷ்ணன்

நவநீதக் கண்ணன்

கண்ணபிரான்

கோகுலக் கண்ணன்

ஆழிமழைக் கண்ணன்

கண்ணப் பெருமாள்

கண்ணபிரான்

கண்ணனும்ராதையும்

கண்ணன்+கோபியர்கள் சூழ ராதை

 என்று பல்வேறு பெயர்களில் ராமபிரானை வழிபடுபவர்களுக்கும்,மேலே கூறியிருக்கும் தெய்வங்களைக் குலதெய்வமாகக் கொண்டவர்களுக்கும்,ராமரைத் தவிர வேறு எவரையும் வழிபடமாட்டேன் என்ற சங்கல்பத்தோடு வாழ்ந்து வருபவர்களுக்கும் அரிய வழிபாட்டு ரகசியத்தை ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் அருளியிருக்கிறார்.

27 லட்டுக்கள்(வீட்டில் செய்வது மிகவும் புண்ணியம் தரும்);

அவல் பாயாசம்(வீட்டில் செய்வது நன்று;சில கோவில்களில் தான் இதை அனுமதிப்பார்கள்)

9 சீதாப்பழங்கள்

இவைகளுடன் நாம் வழிபடும் ராம சன்னதிகளுக்கு 8.4.14அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அல்லது மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் அல்லது மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் அல்லது இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நமக்கு வசதிப்படும் நேரத்தில் சென்று,மேலே கூறியிருக்கும் பொருட்களைப் படையலாக வைக்க வேண்டும்; நமது குடும்பத்தாரின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனையின் முடிவில் லட்டுக்களையும்,அவல் பாயாசத்தையும் அங்கே வருபவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;


சீதாப்பழங்களை மட்டும் வீட்டிற்கு பிரசாதமாக எடுத்துச் சென்று குடும்பத்தாருடன் சாப்பிட வேண்டும்;கோவிலில் பகிர்ந்து தரக் கூடாது;

இவ்வாறு செய்வதால்,நமது வாழ்நாளில் நாம் தெரிந்தோ,அறியாமலோ பிறருக்குச் செய்திருந்த தீங்குகளும்,அந்தத் தீங்குகளால் ஏற்பட்ட தீமைகளும் நம்மை விட்டு அடியோடு விலகிச் சென்றுவிடும்;

தவிர,பூமியில் வாழ்ந்து வரும் 84,000 உயிரினங்களுக்கு நம்மால் ஏற்பட்டிருக்கும் துன்பங்களின் விளைவுகளும் நம்மை விட்டு நீங்கி விடும்;


வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள் இந்தப் பொருட்கள் அனைத்தையும் வாங்க முடியாவிடில்,அல்லது அனைத்தையும் தயார் செய்ய முடியாவிடில்,ஏதாவது ஒன்றை மட்டுமாவது அவரவர் வீட்டில் இருக்கும் ராமர் அல்லது கிருஷ்ணர் அல்லது கண்ணன் படத்தின் முன்பாக படைத்து அவரது துதி/போற்றி/சகஸ்ரநாமம் பாடி விட்டு பிரசாதமாக விநியோகம் செய்யலாம்;அவ்வாறு செய்யும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒருங்கிணைந்து சகஸ்ரநாமம்,போற்றி,துதி பாடினால் அளவற்ற வரங்கள் அந்த குடும்பத்தார் அனைவருக்கும் கிட்டும்;


ராமபிரானையோ,கிருஷ்ண பிரானையோ,கண்ணனையோ குலதெய்வமாகக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பக்தர்களும் அவரவர் குலதெய்வ கோவிலில் இப்படி கூட்டு வழிபாடு செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்;


ஒவ்வொரு குலதெய்வக் கோவிலிலும்,ஒவ்வொரு ராமர்,கிருஷ்ணர்,கண்னன் கோவிலிலும் ஒவ்வொருவிதமான வழிபாட்டுமுறைகள் உண்டு;அந்த வழிபாட்டுமுறையுடன் சேர்த்தே இங்கே ஐயா சகஸ்ரவடுகர் தெரிவித்திருக்கும் முறையை இணைத்தும் இந்த ராமநவமியைக் கொண்டாடலாம்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ