RightClick

முள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா-2014








 மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த விஜய வருடம்,பங்குனி மாதம் 23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதியும்,திருவாதிரை நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்(6.4.14) மாலை 4 மணிக்குத் துவங்கியது;

 20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இன்று தீ மிதித்து பூ இறங்கினர்;

முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு உற்சவ ஊர்வலத்துடன் கிராம வலம் வந்தனர்;

 வலம் வந்ததன் முடிவாக,மாலை 6 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினர்;

கடந்த 47 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 48 ஆம் வருடத்தில் சுமாராக 900 பேர்கள் பூ இறங்கி முத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்;
 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ