RightClick

கண்ணனின் தாய்மாமா கம்சன் அல்ல!!!





ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என்று பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரு ஜோதிடப் பொய் பரவியிருக்கிறது.பகவான் க்ருஷ்ணன் ரோகிணி நட்சத்திரத்திலே பிறந்தவர்;அதனால் தான் தாய்மாமனாகிய கம்சனைக் கொன்றுவிட்டார் என்று புராணம் தெரிவிக்கிறது.


கம்சன் கிருஷ்ணருடைய தாய்மாமா அல்ல;வடமதுரையை ஆண்டு வந்த உக்கிரசேனன் என்பவனுடைய மகன் தான் கம்சன்.உக்கிரசேனனின் தம்பி தேவகன்;இந்த தேவகன் மகள்தான் தேவகி.


அதாவது கம்சனுடைய சித்தப்பா மகள் தான் தேவகி;அதனால் தேவகியுடைய மகனாகிய க்ருஷ்ணருக்கு நேர் தாய்மாமன் கம்சன் அல்ல;எனவே,சகோதரிகளுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது என்பது இடையில் உருவான போலியான ஜோதிட நம்பிக்கை;இப்படி ஏராளமான போலி ஜோதிட நம்பிக்கைகள் நம்மிடையே உலவுகின்றன.நன்றி:தினமலர் வாரமலர்


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ