RightClick

பணத்தை மட்டும் சேமித்தால் போதுமா?



ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு என்ற இயற்பியல் கொள்கை,அறிவியலில் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணவேண்டாம்;நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது;நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் தான் குறைந்த காலத்திலேயே அதிகமான பாவங்களைச் செய்ய முடியும்;நாம் மனம் திருந்தினால்,குறைந்த காலத்திலேயே அதிகமான புண்ணியங்களையும் சேர்க்கவும் முடியும்.குலதெய்வ வழிபாட்டுடன்,பைரவ வழிபாடும் செய்தாலே நமது வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் அனைத்தையும்(நியாயமாக இருந்தால்) பெற முடியும்.


நாம் நமது வருமானத்தில் இருந்து தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை சேமிக்கிறோம்;இப்படி ஒரு வருடம் வரை அல்லது சில வருடங்களுக்கு நமது தெருவில்/சமூகத்தில் சேமித்து வருகிறோம்;அந்த சேமிப்பே நமது வாரிசுகளின் மேல்படிப்பிற்கு கட்டணமாகத் தயாராகிறது;அதே போல,தினமும் அல்லது வாரம் ஒருமுறை அட்லீஸ்ட் மாதம் ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடும்,பைரவ வழிபாடும் செய்து வருவது நமது இப்பிறவியில் சேகரிக்கும் புண்ணிய சேமிப்பாக வரும்;இந்த புண்ணியச் சேமிப்பு,நம்மை இல்லறத்தில் இருந்து கொண்டே ஆன்மீகத்தில் முன்னேற வைக்கும்;நம்மையும்,நமது குழந்தைகளையும் நிம்மதியாகவும்,வளமோடும் வாழ வைக்க காரணமாக இருக்கும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ