RightClick

முனீஸ்வரர் அருளாசியுடன் வளரும் மதுரை முனியாண்டிவிலாஸ்கள்!!!





ஈஸ்வரப் பட்டம் இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இருந்தது;அது அந்த மகா ஈஸ்வரன் என்ற சதாசிவனுக்கு மட்டுமே! முன்னொரு காலத்தில் சதாசிவனுக்கும்,அவரது வாழ்க்கைத் துணைவியான ஆதி சக்திக்கும் மனக்கசப்பு வரும் போது அனைவருமே ‘சக்தி’ வேண்டி ஆதி சக்தியின் பக்கம் நின்று நியாயம் உரைத்தனர்;அந்தச் சூழ்நிலையில் சதாசிவன் என்ற மகா ஈஸ்வரன் பக்கம் நின்ற ஒருவர் முனி ஆவார்.இவர் சதாசிவனின் மெய்க்காவலர்களில் ஒருவரும் கூட!சதாசிவனின் ஆணைக்காக கோடிக்கணக்கான சிவகணங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன;மகா ஈஸ்வரன் பக்கம் முனி நின்றதால்,அகமகிழ்ச்சியடைந்த மகா ஈஸ்வரன் என்ற மகேஸ்வரன் தனக்கு மட்டுமே இருந்த ஈஸ்வரப் பட்டத்தை தனது மெய்க்காவலராக இருந்த முனிக்கு வழங்கினார்.அன்றிலிருந்து முனி என்ற சிவ கணம் முனி ஈஸ்வரன் என்ற பெயரில் பூமியில் பிரபலமடைந்தது;


மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர் திருமங்கலம் ஆகும்.இங்கிருந்து 14 கி.மீ.தொலைவில் இருக்கும் கிராமம் வடக்கம்பட்டி ஆகும்.இங்கே இருக்கும் முனீஸ்வரர் அருளாசியுடன் 1934 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டதே மதுரை முனியாண்டி விலாஸ் உணவகம்.
ஒவ்வொரு நாளும் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகத்தில் முதலில் யார் சாப்பிட வருகிறார்களோ,அவர் தரும் பணத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்வது வழக்கம்;ஒரு வருடம் நிறைவடைந்ததும்,அந்த முதலில் சாப்பிட்டவர்கள் கொடுத்த பணத்தின் மொத்தத்தை எடுத்துக் கொண்டு இந்த வடக்கம்பட்டி முனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து முனீஸ்வரருக்குப் படையல் போட்டு வழிபடுவது வழக்கம்.


இந்த வழக்கத்தினால்,இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்,எல்லா மாநகரங்களிலும்,இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு நாடுகளிலும் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகங்கள் பரவிக்கொண்டே இருக்கின்றன.

கிராமங்களின் பாதுகாக்கும் தேவதை வடிவில் இருந்து சிவனின் அருளை வாரி வழங்கி வருபவர் முனீஸ்வரர்.இந்தப் பெயர் உள்ளவர்களுக்கு அவர்களுடைய குலதெய்வத்தின் ஆசிகள் எப்போதும் பரிபூரணமாக இருக்கும்;ஏதாவது ஒரு தெய்வீகக் கலை கைகூடும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ