RightClick

உலகின் பழமையான மொழிகளான வடமொழியும்,தென்மொழியும் தோன்றிய வரலாறு!!!





வடமொழி என்றும்,தேவ மொழி என்றும் போற்றப்படும் சமஸ்க்ருதத்திற்கு எல்லாவிதங்களிலும் இணையானது நமது தமிழ் மொழி! இருமொழிகளும் சதாசிவனின் உடுக்கையின் இரு பக்கங்களில் இருந்து தோன்றின;

இரு மொழிகளையும் சதாசிவன் தனது துணைவியான பார்வதிக்கு உபதேசிக்க,பார்வதிதேவி தமிழ் மொழியை அகத்திய மகரிஷிக்கும்,சமஸ்க்ருதத்தை பாணினி மகரிஷிக்கும் பயிற்றுவித்தார்.

இருவருமே பூமிக்கு வந்து நமது பாரத தேசத்தில் இரு மொழிகளையும் பரப்பினர்; பாரத தேசம் முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இரு மொழிகளையும் பேசி வந்தனர்.தற்போது பாரத தேசத்தில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் இந்த இரண்டு மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன.(ஆதாரம்:திருமந்திரம்(மூலம் மட்டும்); பூம்புகார் பதிப்பகம் வெளியீடு,வெளியான ஆண்டு:ஜீன் 2004)


கந்த சஷ்டிக்கவசம்,பைரவ சஷ்டிக்கவசம்,பதிகங்கள்,திருமூலரின் திருமந்திரம்,மழையை வரவழைக்கும்  ஆழிமழைக்கண்ணா என்று துவங்கும் திருப்பாவைபாடல்,சித்தர் போற்றிகள், முதலான ஏராளமான தமிழ் தெய்வீகப் பாடல்களை தினமும் பாடி பலர் தமது வாழ்க்கைச்சிக்கல்களில் இருந்து மீண்டுள்ளனர்;இப்படி மீண்டது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.தற்காலத்திலும் தமிழ் பேசும் மக்கள் இந்தப் பாடல்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட பாடல்களையே தினமும் அவரவர் வீட்டில் பாடி வருகின்றனர்.அவ்வாறு பாடி வருவதன் மூலமாக அவர்களுக்கு உரிய தெய்வத்தின் ஆசி கிடைத்துவருகிறது.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டு,பைரவ சஷ்டிக்கவசம் தினமும் ஒருமுறை வீதம் 90 நாட்கள் வரை நமது வீட்டில் பாடினாலே நம்மையறியாமல் நமக்குள் நுழைந்திருக்கும் துஷ்ட சக்திகள் விலகிவிடும்.


ஒவ்வொரு நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறிட ஒரு பதிகம் சைவ சித்தாந்தத்தில் நாயன்மார்களால் பாடப்பட்டிருக்கிறது.உதாரணமாக பண வரவு அதிகரிக்க,கடன்கள் தீர,கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க,யோகம் நிறைந்த குழந்தை பிறந்திட,திருமணத் தடை நீங்கிட, நிரந்தரமான வேலை கிட்டிட,பூர்வ ஜன்ம பாவவினைகள் நம்மை விட்டு விலகிட,நமது சுபாவத்திற்கு ஏற்ற குரு கிட்டிட, சிவனை நேரில் தரிசித்து ஆசி பெற,சிவனடி சேர்ந்து மறுபிறவியில்லாத முக்தி அடைய என்று ஒவ்வொரு நியாயமான கோரிக்கைகள் நிறைவேறிடவும் பதிகங்கள் தனித்தனியாக இருக்கின்றன.பதிகங்களை வீட்டிலும் பாடலாம்;அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்திலும் பாடலாம்;

பதிகங்களில் என்னனென்ன விதமான தெய்வீக சக்திகள் உள்ளனவோ அனைத்தும் திருமூலரின் திருமந்திரத்திலும் இருக்கின்றன;திருமந்திரத்தின் பெருமைகளும்,ஆத்மசக்தியும் இன்று தமிழ் இனத்தைச் சேர்ந்த நம்மிடையே ஏராளமானவர்களுக்குத் தெரியவில்லை;திருமந்திரம் தமிழ் மக்களிடையே பரவினால் நாம் தான் இந்த உலகத்தை வழிநடத்தும் தலைமையைப் பெறுவோம்;

நமது நாட்டின் தாய்மொழி சமஸ்க்ருதம் என்று கொண்டால்,தந்தை மொழி நமது தமிழ் மொழி என்பது தமிழறிஞர்களின் கருத்து.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ