RightClick

ஒருவரது ஆளுமைத் திறன் தோற்றத்தில் இல்லை;சுபாவத்தில் இருக்கிறது.





நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அசோகர் பற்றிய பாடம் இருந்தது.ஆனால்,அவர் படம் இல்லை;அசோகர் எப்படி இருப்பார்? என்று என் ஆசிரியரிடம் கேட்டேன்.கோடுகளால் வரையப்பட்ட ஒரு சிறிய படத்தை என் ஆசிரியர் காட்டினார். ‘வேற படம் இல்லையா சார்?’ என்று கேட்டேன். ‘அப்படின்னா நீ கலிங்கத்துக்குத்தான் போக வேண்டும்’ என்றார்.

நானும் வளர்ந்து,22 ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கப்போர் நடைபெற்ற இடத்திற்குச் சென்றேன்.அங்கே அவர் படம் கிடைக்கவில்லை;அசோகரைப் பற்றி அங்கே நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் ஓர் ஆய்வாளரிடம் கேட்டேன். அவர், ‘அசோகர் கறுப்பாகவும்,குள்ளமாகவும் அடுத்தவர் கேலி செய்யும் அளவுக்குத்தான் இருந்தார்’ என்றார்.பலரும் அசோசகரைக் கேலி செய்யும் போதெல்லாம், ‘வருங்காலத்தில் அசோகன் எப்படி இருந்தான்? என்று மக்கள் பேசமாட்டார்கள்.அசோகனுடைய ஆட்சி எப்படி இருந்தது? என்றுதான் இந்த பரதவர்ஷம் (இந்தியாவின் பழைய பெயர்) முழுவதும் பேசும்’ என்று அசோகர் சொன்னதாக குறிப்புகள் வரலாற்றில் இருப்பதாக அதே ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

மனோதத்துவ உண்மை:ஒருவரைப்பார்த்ததும்,அவரை,அவரது தோற்றத்தை வைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்;பழகியப் பின்னரே முடிவு செய்யுங்கள்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ