RightClick

மகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிகள்!





Temple images
திருவாரூர்: கொரடாச்சேரி அருகே மகாத்மா காந்தி, காமராஜர், வெங்கட்ராமன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வணங்கிய ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கட்டும்பணி துவங்கி நடந்து வருகிறது. சிவத் தொண்டர்களின் நன் கொடையை எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி களத்தூர் மேல் கரை கிராமத்தில் தியாகியும் 25 ஆண்டுகள் நன்னிலம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாகவும் இரு ந்த தியாகராஜப்பிள்ளையின் தந்தை துரை சாமிப்பிள்ளை என்பவர் 1918ம் ஆண்டு ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில்  கட்டி  ஸ்ரீ வாலாம்பிகா,  ஸ்ரீ கைலாசநாதர், பொய்யாது வினாயகர், சித்தி வினாயகர், தண்டபாணி, வள்ளி,தெய்வானையுடன் சுப்ரமணியர், உற்சவ மூர்த்தியாக சிவகாமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, சனிஸ்வரர், காளபைரவர், சூரியன், நந்தி, பலிபீடம் உள்ளிட்ட விக்ரக ங்களை பிரதிஷ்ட்டை செய்தார்.

ஒன்று பட்ட சோழமண்டலமாக இருந்த காலத்தில் இக்கோவிலில் 1934-36 ஆண்டில் கொரடாச்சேரிக்கு வந்த மகாத்மா காந்தி கோவிலுக்கு சென்று தரி சனம் செய்தார்.  அப்போது தமிழில் கஸ்தூர்பாய் காந்தியே நமகா  மந் திரம் ஒதியபோது ராஜாஜி..,  காந்திஜிக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துள்ளார். மேலும் பெருந்தலைவர் காமராஜர், ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ரான், போலீஸ் மந்திரி கக்கன், அறநிலை துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம், பொதுப்பணித்துறை அமைச்சர் புதுக்கோட்டை ராமையா, கல்வி அமைச்சர் சுப்ரமணியன், மரகதம் சந்திரசேகர், மூப்பனார் என காங்., கட்சியினர், முக் கிய தலைவர்கள் அமைச்சர்கள்  தரிசனம் செய்துள்ளனர். தற்போது இக்கோவில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தியாகியும், மாஜி எம்.எல்.ஏ., மகனுமான சண்முகம் பிள்ளை நன்கொடையாளர்கள் மூலம் கோவில் கட்டி வருகிறார். சிவத்தொண்டர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தி கோவில் கட்டி முடிக்க உதவியை எதிர்பார்த்துள்ளனர்.