RightClick

கந்த சஷ்டிக் கவசம் தோன்றிய வரலாறு!





பாலன் தேவராய சுவாமிகள் ஒருமுறை பழனிக்குச் சென்றார்.அங்குள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார்;கிரிவலப்பாதையில் உள்ள பல மண்டபங்களில் பலர் நோயால் பீடிக்கப்பட்டும்,மன நோயால் பாதிக்கப்பட்டும்,சிலர் பசி,பட்டினியால் வாடிக்கொண்டும் இருந்த காட்சிகளைப்பார்த்த தேவராய சுவாமிகள்,மனம் வருத்தத்தோடு மலை மீது ஏறி பழனிமலை முருகனிடம் முறையிட்டார்.

அன்று இரவு பழனியாண்டவர் கோவில் மண்டபத்தில் தேவராய சுவாமிகள் தூங்கிக்கொண்டிருந்த போது,அவர் கனவில் முருகக்கடவுள் தோன்றினார்.நோயுற்றவர்கள்,ஏழை எளிய மக்களால் பணம் செலவழித்து வழிபாடு செய்ய முடியாது;ஆகவே,அவர்களின் துயரம் தீர்க்கும் விதமாக தன்னை வேண்டி ஒரு பாடல் பாடும்படி கூறி மறைந்தார்.

இந்தக் கனவை முருகக் கடவுளின் திருவுள்ளம் என்று கருதிய தேவராய சுவாமிகள் பக்திப் பரவசம் மேலிட முருகப் பெருமானைத்துதித்து,ஓர் எளிய பாடலைப்  பாடுகிறார்.அதுதான் 238 வரிகளைக் கொண்ட கந்த சஷ்டிக்கவசம்!!!

ஒரு நாளுக்கு 36 முறை வீதம்  கந்த சஷ்டிக்கவசம் பாடி,திருநீறு அணிந்தால் எந்த நோயாக இருந்தாலும் நீங்கிவிடும்;நவக்கிரகங்கள் மகிழ்ச்சியடைந்து நன்மை செய்யும்;எப்போதும் நிம்மதியுடன் வாழ்வர் என்று பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டிக்கவசத்திலேயே பாடியிருக்கிறார்.

நன்றி: விஜயபாரதம்,பக்கம் 2,வெளியீடு 17.1.14



இந்த கந்த சஷ்டிக் கவசத்தை யார் தீராத நோயுடன் அவதிப்படுகிறார்களோ அவர் மட்டுமே பாட வேண்டும்;பாடுபவர் 48 நாட்களும் அவரது வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் முருகக் கடவுள்  சன்னதியிலோ தினமும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  பாட வேண்டும்.ஒரு நாளுக்கு 36 முறை வீதம் பாடுவதன் மூலமாக நிச்சயமாக எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் பரிபூரணமாக குணமாகிவிடும்.அவ்வாறு பாடும் நாட்களில் முடிந்த வரையிலும் தீட்டு வீடுகளுக்குச் செல்லாமல் வழிபாட்டினை நிறைவு செய்ய வேண்டும்;இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு(எத்தனை நாட்கள்,எத்தனை முறை போன்ற அடிப்படை வழிபாட்டு விஷயங்கள்) நமக்கு அருளியவர் நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்(செல்: 9677696967)

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ