RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 17



1.மேல்நாடுகள் என்று சொல்லக்கூடிய ஐரோப்பா,அமெரிக்க நாடுகளின் வரலாறு வெறும் 5000 ஆண்டுகள் தான்.அதற்கு முன்பு அவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து வந்தார்கள்.நமது ஆசியக் கண்டமே மனிதன் நாகரீகமடைந்தது முதல் இன்று வரையிலும் நாகரீக முதிர்ச்சி அடைந்து மனித குலத்திற்கு வழிகாட்டி வருகிறது.ஆசியக் கண்டத்திலும் மனிதன் நாகரீகமடைந்தது நமது பாரத தேசத்தில் தான்.அதுவும் நாம் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் தான்.

சுமாராக 20,00,000 ஆண்டுகள் முன்பு இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் தமிழ் மொழிதான் இன்றைய பாரத தேசம் முழுவதும் பேசப்பட்ட மொழியாக இருந்தது.நம்பமுடியவில்லையா? நம்பாமல் இருந்தாலும் இதுதான் உண்மை.அதே போல உலகம் முழுவதும் சிவவழிபாடு பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது.சைவத்தின் உச்சமே பைரவ வழிபாட்டுமுறைகள். தமிழும் சைவமும் உலகம் முழுவதும் பரவியிருந்த காலம் வரையிலும் அனாவசியமான மனித அழிவுகள்(போர்கள்,கலகங்கள்,யுத்தங்கள்) இருந்ததில்லை;இன்றும் வட அமெரிக்கக் கண்டம் முதல் தென் அமெரிக்கக் கண்டம்,ஆப்ரிக்கக் கண்டம்,இன்றைய ஆஸ்திரேலியக் கண்டம் என்று உலகம் முழுவதுமே சிவலிங்கங்கள் பூமியைத் தோண்டும் போது கிடைத்து வருகின்றன.


2.நாம் வாழ்ந்து வரும் பூமியில் மனித இனம் தோன்றி 5 கோடி ஆண்டுகள் ஆகின்றன;மனித இனம் நாகரீகமடையத் துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;அவ்வாறு நாகரீகமடையத் துவங்கிய காலகட்டத்தில் உருவான நாகரீகங்கள் ஐந்து! 

கிரேக்கம்,லத்தீன்,யூதம்,அரேபியம்,சீனம்,தமிழ்.இதில் கால வெள்ளத்தில் அனைத்து அழிவுகளையும் கடந்து இன்று வரையிலும் தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பது சீன நாகரீகமும்,தமிழ் நாகரீகமும் தான்.மற்ற அனைத்தும் அழிந்து விட்டன.சீன நாகரீகத்தின் ஆணிவேரை தோற்றுவித்ததும் நமது தமிழ் இனமே.சுமாராக 2000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழ மன்னன் காலத்தில் சோழப் பேரரசு இன்றைய ஆசிய,ஆஸ்திரேலியக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது.இப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான சோழப் பேரரசு தோன்றிடக் காரணம் ராஜராஜசோழ மன்னனின் அமைச்சராக கருவூர் சித்தர் இருந்ததே காரணம்.


ராஜராஜசோழ மன்னன் காலம் வரையிலும் தமிழ் மொழியானது வட்டெழுத்து முறையில் எழுதப்பட்டு வந்தது.அந்த வட்டெழுத்து முறையில் இன்றும் எழுதப்படுவதே சீன,ஜப்பானிய மொழிகள்.ஆமாம்! ராஜராஜசோழ மன்னன் காலத்தில் தமிழ் மொழியை இன்றைய வரிவடிவத்திற்கு மாற்றி எளிமைப்படுத்தினர்;அவ்வாறு எளிமைப்படுத்திய தமிழ் மொழி சீனாவுக்குள் பரவும் முன்பே ராஜராஜசோழனின் ஆயுள் நிறைவடைந்து விட்டது.எனவே,இலக்கணம் இன்றும் தமிழுக்கும்,சீன ஜப்பானிய மொழிகளுக்கும் சிறு சிறு வித்தியாசமே உண்டு.இந்தக் கருத்தின் அடிப்படையில் நமது அரசு மொழி ஆராய்ச்சி செய்தால் உலக வரலாற்றையே மாற்றுமளவுக்கு பல ரகசியங்கள் வெளிப்படும்.சித்தர்களில் போகர் சீன நாட்டில் இருந்து நமது தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே ஜீவசமாதியாகிவிட்டார்.ஏன் வந்தார்? தமிழ் மொழி ஒரு தெய்வமொழி என்று அவர் உணர்ந்ததால்!

3.எந்த வழிபாடு செய்தாலும்,வழிபாட்டின் முக்கிய அம்சமே நமது மனதிற்குள் உருவாகும் நம்பிக்கையே! ஒரு பழமையான சிவாலயம் சென்று வழிபடும் போது நமது நம்பிக்கையே அங்கே இருக்கும் தெய்வ சக்திகளால் கவனிக்கப்படுகிறது.நம்பிக்கையில்லாமல் கடனே என்று வழிபட்டால் நமது கோரிக்கைகள் இறை சக்தியால் கவனிக்கப்படுவதில்லை;

ஒரு சாலையோர விநாயகர் கோவிலுக்கு தினமும் மனப்பூர்வமான நம்பிக்கையோடு சென்று நமது கோரிக்கையை வைத்தால் நிச்சயம் நமது நம்பிக்கை நிஜமாகும்.

நமது நம்பிக்கையை எப்படி மனதிற்குள் உருவகப்படுத்த வேண்டும் தெரியுமா?

எது நம்முடைய லட்சியமோ அதை அடைந்துவிட்டதாக நாம் திரைப்படம் போல கற்பனை செய்ய வேண்டும்.அவ்வாறு ஒவ்வொரு நாளும் நினைக்கும் போது அந்த லட்சியம் நிறைவேறியதற்காக நாம் இப்போது வழிபடும் தெய்வத்திற்கு நன்றியும் கூறும் விதமாக சிந்திக்க வேண்டும்.இதைத்தான் மனோதத்துவ டெக்னிக்குகளில் Creative Visuvalization என்று கூறுகிறார்கள்.இப்படி தினமும் அந்த சாலையோர விநாயகர் கோவிலில் வழிபடும் போது(சாமி கும்பிடும்போது) திரைப்படம் போல நினைக்கும் போது ஒரு சில நாட்களில் நமது ஆழ்மனம் விழிக்கும்;அப்படி விழிக்கும் போது நமது ‘லட்சியம் நிறைவேறும் விதமான நமது கற்பனைத் திரைப்படம்’ நமது ஆழ்மனதிற்குள் பதிந்துவிடும்;அப்படி ஒரே ஒருமுறை பதிந்துவிட்டாலே அடுத்த சில நாட்கள்/வாரங்களில் நமது லட்சியம் நிஜமாகத் துவங்கும்.


4.எப்போதும் ஒரு தெய்வத்தை தினமும் வழிபாடு செய்யும் போது ஒரே ஒரு கோரிக்கையோடு மட்டுமே வழிபட வேண்டும்.அது நிறைவேறிய பின்னரே அடுத்த கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்.


5.ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது இப்படி கற்பனை செய்ய வேண்டியதில்லை;ஏனெனில்,தொடர்ந்து நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றிடக் காரணமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.மேலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானைத்தவிர,வேறு எந்த தெய்வத்தை வழிபடச் சென்றாலும் நமது ஒரே ஒரு கோரிக்கையை திரும்பத் திரும்ப நினைத்து வேண்டிக்கொண்டே இருந்தால் தான் அது நிறைவேறும்.


ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது எந்த கோரிக்கையும் இல்லாமல் திறந்த மனதுடன் போனாலே போதும்.இதுவும் சரணாகதி தத்துவத்தின் ஒரு அங்கமே!
நம்மை படைத்தவருக்குத் தெரியாதா? எதை நமக்கு முதலில் தர வேண்டும்; எதை நமக்கு இறுதியில் தர வேண்டும் என்று!!


நம்மைப் படைத்தவர் பிரம்மாதான்.அதே பிரம்மாதான் நாம் இப்பிறவியில் இந்த ஆத்மா ஸ்ரீகாலபைரவப் பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து தனது காலத்தையே மாற்றிடப் பிறந்திருக்கிறது என்றும் நமது தலையெழுத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்.

6.ஸ்ரீகாலபைரவப்பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் அல்லது ஸ்ரீவடுக பைரவர் என்று நமது ஊரில் இருக்கும் எந்த பைரவப் பெருமானையும் நாம் வழிபடலாம்;அவ்வாறு வழிபட்டு வரும் போது தேய்பிறை அஷ்டமி அன்று வழிபாடு செய்து வருவதுதான் பரவலாக இருந்து வருகிறது.தேய்பிறை அஷ்டமியன்று வழிபாடு செய்தாலே நமது நியாயமான கோரிக்கைகள் விரைவாக நிறைவேறிவருகின்றன.

வளர்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீபைரவப் பெருமானை வழிபட்டு வரலாம்;தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவப் பெருமானை வழிபட்டு வந்தால்
விரையச் சனியின் தாக்கம்
ஜன்மச்சனியின் தாக்கம்
வாக்குச் சனியின் தாக்கம்
அஷ்டமச்சனியின் தாக்கம்
அஷ்டமச்சனியின் தாக்கம்
கண்டச்சனியின் தாக்கம்
அர்த்தாஷ்டமச்சனியின் தாக்கம்
போன்றவை விலகிவிடும்;மேலும்,வேலையில்லாதவர்களுக்கு அவரவர் திறமைக்கேற்ற வேலை கிடைத்துவிடும்;தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் படிப்படியான அதே சமயம் உறுதியான வளர்ச்சி கிட்டும்;கடன் உள்ளவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை அடைவார்கள்;வராக்கடன் உள்ளவர்களுக்கு படிப்படியாக கடன்கள் திரும்பக் கிடைக்கும்;ஒரே ஒரு நிபந்தனை:(அசைவம் சாப்பிடக்கூடாது;மது அருந்தக்கூடாது) தேய்பிறை அஷ்டமி வழிபாடு இனிமேல் செய்யக் கூடாது.தேய்பிறை அஷ்டமியை விடவும் பல மடங்கு உடனடிபலன்களைத் தருவது வளர்பிறை அஷ்டமியே! இந்த அரிய பைரவ ரகசியத்தை நமக்கு உபதேசித்திருப்பவர் நமது சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்!!!


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ