RightClick

9 வயது பாலாம்பிகைகளின் ஒப்புயர்வற்ற சேவை!!!





பெரம்பூர் ஆனந்த நடேசன்+சாவித்ரி தம்பதிகளின் இரட்டைக் குழந்தைகள் குங்குமப்ரியா,மங்களப்ரியா! இவர்களின் ஓன்பதாம் வயதில் பெரியபுராணத்தில் இருக்கும் 63 நாயன்மார்களின் வரலாற்றை இரண்டரைமணி நேரம் ஆன்மீக சொற்பொழிவாக விவரிக்கின்றனர்;இச்சொற்பொழிவில் பெரிய புராணத்தின் பெயர் உருவான காரணக்கதை,சேக்கிழாரின் வாழ்க்கைக்குறிப்பு, சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை,திருநாவுக்கரசர் சிவனுள் கரைந்த புராணம், மெய்பொருள் நாயனாரின் வாழ்க்கை,மங்கையர்க்கரசியாரின் அயணம்,அப்பூதியடிகளாரின் சிவ அனுபவங்கள் என்று முக்கிய சிவ அனுபவங்களை இலக்கியச் சுவை ததும்ப அழகு தமிழில் விவரித்துவருகின்றனர்.

இரட்டையர்களான குங்குமப்ரியா,மங்களப்ரியா சென்னை பெரம்பூரில் 4 ஆம் வகுப்பு படித்துவருகின்றனர்;இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக திருமந்திரம்,சைவப் பதிகங்கள் இவைகளோடு நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் கற்று வருகின்றனர்.

குங்கும,மங்கள என்ற இருவார்த்தைகளுக்கு பைரவப் பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றியில் குங்கும மேனியனே போற்றி என்றும், எட்டு பைரவர்களில் ஒருவரை ஓம் மங்களேஷாய வித்மஹே என்றும் பாடுவதை நாம் அறிந்திருக்கிறோம்.

குங்குமப்ரியா,மங்களப்ரியா இவரும் நீடூழி வாழ பைரவப்பெருமான் அருள் புரியட்டும்!!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ