RightClick

ஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை அஷ்டமி நாட்கள்!!!(புதுப்பிக்கப்பட்டது)




ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும்.ஏற்ற நேரம் அந்த தேய்பிறைஅஷ்டமி திதி இருக்கும் நாளில் வரும் பகல் நேர ராகு காலம் ஆகும்.கீழே ஜய வருடத்தின் தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களை பட்டியலிட்டிருக்கிறோம்;அடைப்புக்குறிக்குள் ராகு  கால நேரத்தையும் குறிப்பிட்டிருக்கிறோம்;

ஆவணி மாதத்தில் இரண்டு தேய்பிறை அஷ்டமி நாட்கள் இந்த வருடம் வர இருக்கின்றன;அதில் முதல் தேய்பிறை அஷ்டமி நாளில் இரண்டு முறை தேய்பிறை அஷ்டமியும்,ராகு காலமும் சேர்ந்தே வர இருக்கின்றன;

ஐப்பசி மாதத்தில் தேய்பிறை அஷ்டமிதிதியில் இரண்டு முறை இராகு காலம் வருகிறது;அதே சமயம்,பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிதிதி  இருக்கும் நேரத்தில் ராகு காலம் ஏழு நிமிடம் மட்டுமேவருகிறது;

அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருநாள் விடாமல் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவிட்டால்,இந்தப் பிறவியிலேயே பெரும் செல்வச் செழிப்பை அடைவார்கள் என்பது குரு வாக்கு;அசைவ உணவுப் பழக்கத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு,ஒரு நாள் கூட விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வது கலியுகத்தில் ஒரு சாதனையே!



துலாம்,விருச்சிகம்,தனுசு,மீனம்,மேஷம்,கடகம்,கன்னி ராசிக்காரர்கள் தினமும் ஸ்ரீகால பைரவரையும்,தேய்பிறை அஷ்டமிகளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரையும் விடாமல் வழிபட்டு வர சனியின் தாக்கம் இராது;ஆனால்,அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே,இந்த வழிபாடுகளைத் துவங்க வேண்டும்;மதுப்பழக்கத்தையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;

 23.1.2014 வியாழக்கிழமை மாலை 5.55 மணி முதல் 24.1.2014 வெள்ளி மாலை 5.09 வரை;

22.2.2014 சனிக்கிழமை(சனி காலை 9 முதல் 10.30 வரை)

23.3.2014 ஞாயிறு மாலை 5.55 முதல் 24.3.2014 திங்கள் மதியம் 3.45 வரை;(திங்கள் காலை 7.30 முதல் 9 வரை;)

22.4.14 செவ்வாய்(இராகு காலம் மதியம் 3.00 முதல் 4.30 வரை)

21.5.14 புதன் காலை 10.46 முதல் 22.5.14 வியாழன் காலை 8.28 வரை;(புதன் கிழமை இராகு காலம் மதியம் 12.00 முதல் 1.30 வரை)

20.6.14 வெள்ளி மாலை 4.19 வரை(காலை 10.30 முதல் 12.00 வரை)

19.7.14 சனி (காலை 9.00 முதல் 10.30 வரை)

17.8.14 ஞாயிறு காலை 11.54 முதல் 18.8.14 திங்கள் காலை 11.25 வரை;(ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 வரை;மற்றும் திங்கள் காலை 7.30 முதல் 9.00 வரை)



16.9.14 செவ்வாய் (மதியம் 3.00 முதல் 4.30 வரை)

1.10.14 புதன் காலை 10.37 முதல் 2.10.14 வியாழன் காலை 10.32 வரை;(புதன் மதியம் 12.00 முதல் 1.30 வரை)

14.11.14 வெள்ளி காலை 8.29 முதல் 15.11.14 சனி காலை 10.32 வரை;(வெள்ளி காலை 10.30 முதல் 12 வரை;சனி காலை 9.00 முதல் 10.30 வரை)

14.12.14 ஞாயிறு (மாலை 4.30 முதல் 6.00 வரை)

13.1.15 செவ்வாய் (மாலை 3.00 முதல் 4.30 வரை)

11.2.15 புதன் மாலை 4.15 முதல் 12.2.15 வியாழன் மாலை 4.20 வரை;(வியாழன் மதியம் 1.30 முதல் 3.00 வரை)

13.3.15 வெள்ளி(காலை 10.30 முதல் 12.00 வரை)

11.4.15 சனி மாலை 6.22 முதல் 12.4.15 ஞாயிறு மாலை 4.37 வரை;(ஞாயிறு மாலை 4.30 முதல் 4.37 வரை;வெறும் ஏழு நிமிடங்கள் மட்டுமே)

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ