RightClick

16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி!!!



16.12.2014 அன்று துலாம் ராசியிலிருந்து சனிபகவான்,விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகி,11.2.2018 வரை விருச்சிகராசியில் இருப்பார்;சனிபகவானை நீதிமான் என்று கூறுவார்கள்;அவரது ராசியாக மகரமும்,கும்பமும் இருக்கிறது.இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி,நேர்மைக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிப்பார்கள்;சனி பகவான் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,அர்த்தாஷ்டமச்சனி காலத்தில் நமது கொள்கைகளில் இருக்கும் குறைபாடுகளை புரியவைக்கிறார்;நமது அகங்காரத்தைக் குறைக்கிறார்;நாம் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்;நமது வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகிறார்;அவர் தானாக இவைகளைச் செய்யவில்லை;நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்ததையும்,இப்பிறவியில் 14 வயதுக்குப் பிறகு நாம் செய்த தவறுகளையும் நமக்குப்புரிய வைக்கிறார்;
 
இதனால்,கன்னிராசிக்காரர்கள் ஏழரைச்சனியிலிருந்து முழுமையாக 16.12.2014 முதல் மீண்டுவிடுகிறார்கள்;
 
கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனியிலிருந்து துலாம் ராசியினர் மீண்டு வாக்கு(பாத)ச் சனிகாலத்தை 16.12.2014 லிருந்து 11.2.2018 வரை அனுபவிக்கப்போகிறார்கள்;

ஏழரைச்சனியின் முதல் பகுதியான விரையச் சனியை தனுசு ராசியினர் 16.12.2014 லிருந்து அனுபவிக்கப்போகிறார்கள்;

ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை அஷ்டமச்சனி காலமான ஒன்றரை ஆண்டுகளில் அனுபவித்து முடித்துவிட்ட மீனராசியினர் இனி எல்லாச் சிக்கல்களிலிருந்தும் (13.6.14 வைகாசி மாதாந்திர வெள்ளிக்கிழமை அன்று குரு மீனராசிக்கு ஐந்தாமிடமான கடகராசிக்குப் பெயர்ச்சி ஆவதாலும்,குரு உச்சமடைவதாலும்) மீளத் துவங்கிவிடுவர்;


விருச்சிகராசியினர் கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனியை16.12.2014 முதல் 11.2.2018 வரை அனுபவிக்கப்போகின்றனர்;இதே காலகட்டத்தில் மேஷ ராசியினர் அஷ்டமச்சனி காலத்தை அனுபவிக்க இருக்கின்றனர்;

கடகராசியினருக்குரிய அர்த்த அஷ்டமச்சனியானது 16.12.14 அன்றுடன் விலகி,சிம்மராசிக்கு அர்த்த அஷ்டமச்சனி ஆரம்பமாகப்போகிறது.

மேஷராசிக்கு இருந்து வந்த கண்டச்சனி(ஏழாமிடச்சனி) 16.12.14 அன்றுடன் விலகி,ரிஷபராசிக்கு கண்டச்சனி ஆரம்பமாகப்போகிறது.

துலாம்,விருச்சிகம்,தனுசு,மீனம்,மேஷம்,கடகம்,கன்னி ராசிக்காரர்கள் தினமும் ஸ்ரீகால பைரவரையும்,தேய்பிறை அஷ்டமிகளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரையும் விடாமல் வழிபட்டு வர சனியின் தாக்கம் இராது;ஆனால்,அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே,இந்த வழிபாடுகளைத் துவங்க வேண்டும்;மதுப்பழக்கத்தையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;

எனவே,இந்தப்பதிவை வாசித்த மேஷ ராசியினர்,விருச்சிகராசியினர்,ரிஷபராசியினர்,தனுசுராசியினர் உடனே பைரவ வழிபாட்டைத் துவக்குவது அவசியம்;அவசரம்;ஏனெனில்,இன்று உங்களது தினசரி வாழ்க்கை சுறுசுறுப்பாகச் சென்று கொண்டிருக்கும்;ஆனால்,இந்த 11 மாதங்களில் நீங்கள் செய்யும் சிறு கவனக் குறைவான செயல்களும்,அகங்காரத்தினால் செய்த சேஷ்டைகளும்,விளையாட்டிற்குச் செய்த வேடிக்கைகளும் 16.12.2014க்குப் பிறகு உங்களுக்கு தீராத பிரச்னைகளையும்,அவமானங்களையும்,விடுபட முடியாத சிக்கல்களையும் உருவாக்கிவிடும்.யார் நேர்மையாக வாழ்ந்து வருகிறார்களோ அவர்களுக்கு எந்த சிக்கலும் வராது;ஆனால்,நேர்மையாக வாழக் கூடிய சூழ்நிலை தற்போதைய உலகத்தில் இருக்கிறதா? 
 
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ