RightClick

விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணராத தலைவர்கள்!!!

புதுடில்லி: நாட்டின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில் அரசியல்வாதிகள் அக்கறை செலுத்துவதில்லை என்றும், அவர்கள் மிக குறைவாகவே நிதி தருகின்றனர், அதுவும் காலம் தாழ்ந்து ஆய்வுக்கு கிடைக்கிறது. இவ்வாறு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கடும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்ற சச்சினுக்கு கடந்த சனிக்கிழமை மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி கவுவரவித்தது. இவருடன் வேதியியல் துறை விஞ்ஞானி பேராசிரியர் ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் பிரதமர் அலுவலக அறிவியல் ஆலோசனை குழு தலைவராகவும் உள்ளார்.

இவர் பெங்களூரூவில் நிருபர்களிடம் பேசினார். அப்போது , நமது நாட்டின் அறிவியல் துறை ஆராய்ச்சியில் நீங்கள் என்ன மாதிரியாக பாதிக்கப்பட்டதாக உணர்கிறீர்கள் ? என ஒரு நிருபர் கேட்டதும், அறிவியல் துறைக்கு அரசு ஒதுக்கிய நிதி குறைவு. , ஆனால் நாங்கள் அதிகம் சாதித்துள்ளோம். ஏன் தான் இந்த அறிவிலிகள் (இடியட்ஸ்) ( அரசியல்வாதிகள்) அறிவியல் துறைக்கு மிக சொற்பமாகவே நிதி ஒதுக்குகின்றனரோ ? ( இவ்வாறு பேசும் போது மிக கோபத்துடன், உணர்ச்சிகரமாக இருந்தார் ) இருந்த போதிலும் நமது விஞ்ஞானிகள் சில விஷயங்களை செய்து முடித்துள்ளனர். அறிவியல் முக்கியத்துவம் உணராதவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

நமது முதலீடு அளவுக்குட்பட்டு இருக்கிறது. மேலும் நிதி வந்து சேருவதில் பெரும் கால தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் சில சாதித்துள்ளோம். இருந்தாலும் நாம் பெறும் பணம் மிகவும் குறைவு என்று சொல்லவில்லை, அதே நேரத்தில் மற்ற ஆராய்ச்சிகள் உடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை என்று தான் பொருள்.

சீனா முன்னேற்றம் குறித்து கேட்டபோது, இன்னும் நாம் சீனாவை போல் கடுமையாக உழைக்கவில்லை, தேசியம் மீது உள்ள பற்றை விட நம்மவர்கள் வெளிநாட்டுக்கு போய்கொண்டிருக்கின்றனர், அதிக நிதி பெற்றால் வெளிநாட்டுக்கு செல்ல தயாராக இருக்கின்றனர் என்று நம்மை நாமே குறை சொல்லி கொள்கிறோம்.

தகவல் தொழில் நுட்பம்: எதிர்கால இந்தியா அறிவியலுடன் இணைந்திருக்கும், இன்னும் நாம் அதிகம் சந்திக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம் ( இன்பர்மேஷன் டெக்னாலஜி) அறிவியலுடன் தொடர்புடையதாக இல்லை. இது பணம் சம்பாதிக்கும் களமாகவே இருக்கிறது. இந்த துறையில் பணியாற்றுபவர்கள் பலரும் கவலையுடனே காட்சியளிக்கின்றனர். பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர், சிலர் கொல்லப்படுகின்றனர், இதனைத்தான் நாம் செய்தி தாள்களில் பார்கிறோம். என்னை பாருங்கள் நான் 80 வயதிலும், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நாம் என்ன செய்கிறோமே அதனை மகிழ்வுடன் ஏற்று செய்ய வேண்டும், இல்லையேல் நமக்கு கவலையே மிஞ்சும்.

இவ்வாறு விஞ்ஞானி ராவ் கூறினார்.