RightClick

இந்து தேசிய விழிப்புணர்வை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி!!!

மாசேதுங்கும்,செகுவேராவும் பிறப்பதற்கு 300 ஆண்டுகளுகு முன்பே சிவாஜி கொரில்லாப் போர்முறையை உருவாக்கியிருந்தார்.யுத்தம் தொடங்கியதும்,ஆபத்து நேரிடும்போது கை கொடுக்கும் என்ற முன்னெச்சரிக்கையுடன் தெற்கில் தொலைதூரப்பகுதிகளையெல்லாம் கைப்பற்றிய சிவாஜியின் தொலைநோக்குள்ள யுத்ததந்திர நடவடிக்கைகள்,நெப்போலியனும்,ஹிட்லரும்,மாஸ்கோ மீது படையெடுப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றவை;

நிலவியல் ஆதாரத்தில் அரசியல் ஆதிக்கம்(Geo Politics) என்பதாக விஞ்ஞான முன்னேற்றம் தொடங்குவதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்னரே சத்ரபதி சிவாஜி கடுமையான முயற்சிகள் செய்து கடலாதிக்கம் கைவரப் பெற்றிருந்தார்!மேற்கத்திய நாடுகளில் மதச்சார்பற்ற ஆட்சி என்ற கருத்து பரவாத அந்தக் காலகட்டத்திலேயே,ஹிந்து மரபுப்படி மற்ற வழிபாட்டுமுறைகள் எதையும் வெறுக்காத தர்மராஜ்ஜியத்தை சிவாஜி மஹாராஷ்டிராவில் நிறுவினார்.

சத்ரபதி சிவாஜியின் இந்த கொள்கைகளை ஆராய்ந்து தெரிவித்தவர் தொழிற்சங்க சிந்தனையாளரும்,ஸ்வயம்சேவகருமான அமரர் தந்தோபந்த டெங்கடி.

மஹாராஷ்டிராவில் துவங்கி தென்பாரதம் முழுவதும் சத்ரபதி சிவாஜியின் ஆட்சியில் நிம்மதியாக 200 ஆண்டுகள் வரை  இந்து தர்மம் தழைத்தோங்கி வளர்ந்தது.சத்ரபதி சிவாஜியின் ஆட்சி முறைகளை அறிய எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற தொடர் நாவல்களை வாசிக்கவும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ