RightClick

சாமி மனசையும் குத்தும்




கடலூர் மாவட்டம் எடசித்தூர் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் கோபுரக் கலசம் திருடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில்,காணாமல் போன கோவில் கலசம் மீண்டும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள பெருமுலை சாலையில் உள்ள ஒரு சிமெண்ட் சிலாப் மீது கண்டெடுக்கப்பட்டது.

கலசத்துடன் இருந்த கடிதத்தில், “ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் கலசத்தைத் திருடியதற்காக கடவுளிடமும்,எடசித்தூர் பகுதி மக்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.கலசத்தைத் திருடியநாளில் இருந்தே நாங்கள் தொடர்ச்சியாக பல பிரச்னைகளை,சோதனைகளை அனுபவிக்க நேர்ந்தது.இந்த கலசம் மிகவும் சக்தி வாய்ந்தது.அதனால் இதை திரும்ப கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க விரும்புகிறோம்.தயவு செய்து யாரும் இதுபோல் கோவில் கலசங்களை திருடாதீர்கள்” என்று உருக்கமாகவும் பயபக்தியுடனும் திருடர்கள் எழுதியிருந்தார்கள்.

நன்றி:விஜயபாரதம்,பக்கம் 4, வெளியீடு 11.10.13