RightClick

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்








ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.



சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?



நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்.காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதும்,மது அருந்துவதும்,போதைப் பொருட்கள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும்;பெண்கள் தாலியுடன் சேர்த்து அணியலாம்;



பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.



நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?





ருத்ராட்சம் அணியாதாவர்கள் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால் எவ்வளவு பங்கு புண்ணியம் வருமோ,அதைவிடவும் நூறு மடங்கு புண்ணியம் ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு ஜபித்தால் கிடைக்கும்;

ஒருபோதும் அடுத்தவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்திய ருத்ராட்சத்தைப் பயன்படுத்தக் கூடாது;இதில் விதிவிலக்குகள் உண்டு;அப்பா தனது வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்த ருத்ராட்சத்தை தனது மகன் அல்லது மகளுக்குத் தரலாம்;குரு தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை தகுதி நிறைந்த சீடனுக்குத் தரலாம்;

உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ருத்ராட்சம் அணிவது பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் ருத்ராட்சம் அணியத்  தூண்டுங்கள்.


அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள்.வாங்கித் தருவது முக்கியமல்ல;அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.இது ரொம்ப முக்கியம்.உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும் ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.

பின்குறிப்பு:ருத்ராட்ச மாலை என்பது 21 ருத்ராட்சங்கள்,54 ருத்ராட்சங்கள்,108 ருத்ராட்சங்கள் கொண்டவை;ருத்ராட்ச மாலையை சாதாரண மனிதர்களாகிய நாம் எப்போதும் அணிவது தவறு;துறவிகள் அவைகளை அணிந்தாலும்,அதற்குத்தான் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன;ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை;







ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ