RightClick

சீரியலால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு குடும்பங்களிலும் சீரழிவு



டிவி சேனல்களில் மெகா சீரியல்கள் மக்களின் பொழுதுபோக்கில் முக்கால் பங்கை ஆக்கிரமித்துள்ளன.குறிப்பாக பெண்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டன.
படிக்க வேண்டிய 17 முதல் 21 வயதில் காதலிப்பது வாழ்வின் அங்கம் என நினைக்க சிறுவர்களை,சிறுமிகளைத் தூண்டுகின்றன.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,வன்முறைக் காட்சிகளோடு காவல்துறையையும்,நீதித்துறையையும் கேவலப்படுத்தும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை;


சில ஆண்டுகளுக்கு முன் இரவில் 7 மணி முதல் 9 மணி வரை பெரியவர்கள்,கணவன்,மனைவி,மகன்,மகளுடன் ஒன்றாக உண்பதும்;குடும்ப வளர்ச்சி பற்றிய சகஜமான கலந்துரையாடலும் இருந்தது.குடும்ப அமைப்பும் வாழ்வும் மகிழ்ச்சியுடன் கழிந்தது.
இந்த பொன்னான நேரத்தை சீரியல்கள்(மெகாத் தொடர்கள்,நெடுந்தொடர்கள்) எடுத்துக்கொள்வதால் குடும்ப உறுப்பினர்கள் மனம் விட்டுப் பேசும் நிலை மறைந்து போனது;


விளைவு?


 தற்போது பிரச்னைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.மிகச் சாதாரண காரணங்களாலும் விவகாரத்துகள் பெருகிவிட்டன.டிவி சேனல்கள் நடத்துவது சில கோடி ரூபாய்களை முதலீடாக்கி,பல கோடி ரூபாய்கள் சம்பாதிக்கும் தொழில்! நாட்டின் அரசியல் நிலையையே புரட்டிப்போடும் சக்தி ஊடகத்துக்கு உண்டு.ஆனால்,இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கத் தூண்டும் வில்லன்கள் ஆகிவிட்டதே?

 யாரோ சில பேர்கள் பல கோடி ரூபாய்கள் சம்பாதிக்க,நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் குடும்ப ஒற்றுமையை பலிகொடுக்க வேண்டுமா?
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 23,வெளியீடு 4.10.13


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ