RightClick

உங்களுடைய நீண்டகால சிக்கல்களைத்தீர்க்கும் ஸ்வர்ணாகர்ஷண கிரிவலம்!!!




மலையே சிவனாக இருக்குமிடம் அண்ணாமலை! பூமியில் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்களை கண்காணிக்க இறைவனால் நியமிக்கப்பட்டிருப்பவர்களே அஷ்டதிக் பாலகர்கள்! அவர்களின் பணியிடம் இந்த அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் அஷ்டலிங்கங்களே!! உங்களில் யாருக்கெல்லாம் பூர்வபுண்ணியம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமாவது அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல முடியும்.உங்களில் யார் யாருக்கெல்லாம் பூர்வபுண்ணியம் வலுவாக இருக்கிறதோ,அவர்களால் மட்டுமே அடிக்கடி அண்ணாமலைக்கு கிரிவலம் வந்து தமது ஆன்மீக பலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்;

உங்களில் யாருக்கெல்லாம் விரைவாக அவரவர் கர்மவினைகளை மிகச் சுலபமாக கரைக்க விருப்பமோ,அவர்களே மாதம் ஒருமுறையாவது அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல முடியும்.பலர் பவுர்ணமியன்று அண்ணாமலை கிரிவலம் சென்றால் மட்டுமே புண்ணியம் என்று எண்ணுகிறார்கள்;அது தவறு! பவுர்ணமி கிரிவலத்தை விடவும் மிதமிஞ்சிய புண்ணியம் தரும்(அதே சமயம் நமது கருமவினைகளை,வேதனைகளை,வாழ்க்கைச் சிக்கல்களை,பணச் சிக்கல்களை நீக்கும்) கிரிவல முறைகள் இருக்கின்றன.

அவற்றில் ஒருசிலவற்றை மட்டுமே இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
ஆதிசிவன் என்ற சதாசிவன் என்ற அண்ணாமலையாரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று கிரிவலம் செல்வது மிகவும் சக்தி வாய்ந்த கிரிவலமுறை;


உங்களுடைய ஜன்ம நட்சத்திரம் இருக்கும் போது கிரிவலம் செல்வது இன்னொரு சக்தி வாய்ந்த கிரிவலமுறை!!(ஒரு தமிழ்மாதத்தில் ஒருமுறை மட்டுமே உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும்;சில சமயம் இருமுறை வரும்)

ஒவ்வொரு அமாவாசையன்றும் இரவு கிரிவலம் செல்வது இன்னொரு கிரிவலமுறை!!!

ஒவ்வொரு தமிழ்மாதப்பிறப்பன்றும் கிரிவலம் செல்வது மற்றொரு கிரிவலமுறை!!

அம்பாள் உபாசகர்கள் தாம் வழிபட்டு வரும் அம்பாளின் அருளைப்(அல்லது இடைக்காடர் சித்தரின் அருளாசியைப்) பெற நமது சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் நமக்குப் போதித்த கிரிவலமுறை!!!இந்த கிரிவலமுறையானது ஜோதிடர்களுக்கும்,அம்பாள் கோவில் பூசாரிகளுக்கும்,அருள்வாக்கு புரிபவர்களுக்கும்,அம்பாளைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல் வாழ்ந்து வரும் சக்தி உபாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்;

இவைகளுக்குச் சமமானதே நமது ஆன்மீக குரு அவர்களின் தலைமையில் வரும் சனிப்பிரதோஷமும்,துவாதசி திதியும்,சுவாதி நட்சத்திரமும் கூடிய 30.11.2013 அன்று நடைபெற இருக்கும் ஸ்வர்ணாகர்ஷண கிரிவலம்!!!

நாம் யாருடைய போதனைகளைப் பின்பற்றி நமது கஷ்டங்களைக் குறைத்து கொண்டு வருகிறோமோ,அவரது தலைமையில் அண்ணாமலையாரின் காலடியில் கிரிவலம் செல்கிறோம் எனில் அதற்கு எப்பேர்ப்பட்ட பூர்வபுண்ணியம் தேவைப்படும்?!?!!

29.11.13 வெள்ளிக்கிழமை மாலையில் அண்ணாமலையை வந்தடைவோம்;இட்லிதானம் செய்வதற்கு விரும்புவோர் இந்த நாளில் ஒருங்கிணைந்து இட்லிதானத்துக்குரிய ஆன்மீக ரகசியங்களை அறிந்து கொள்வோம்;பிறகு,நாமே இட்லி தானத்துக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்வோம்;

30.11.13 சனிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் நாமே சமையல் செய்வோம்;காலை 7 மணிக்கு நமது சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் ஸ்வர்ணாகர்ஷண கிரிவலம் புறப்படுவோம்;கிரிவலப்பாதை முழுவதும் இட்லிதானம் செய்வோம்;கிரிவலப்பாதை முழுவதும் நவதானியங்களைத் தூவுவோம்;டயமண்டு கல்கண்டுகளைத் தூவுவோம்;மாலையில் சனிப்பிரதோஷத்தில் கலந்து கொள்வோம்;

ஒரு சனிப்பிரதோஷத்தில் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கலந்து கொண்டாலே ஐந்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்ற புண்ணியம் கிட்டும்;அண்ணாமலையில் நடைபெறும் சனிப்பிரதோஷத்தில் கலந்து கொண்டால்,ஐந்து ஆண்டுகள் தினமும் அண்ணாமலைக்கு வந்த புண்ணியம் கிட்டுமல்லவா!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ