RightClick

கஜமுகனுக்கு கஜபூஜை செய்யும் கஜேந்திரன்!!!


வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் ஆண்யானைக்கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆண் யானை மலையடிவார கிராமத்தில் தீர்த்தம் காட்டும் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று இரவு வருகிறது.

இதைப் பற்றி தீர்த்தமலை கோவில் அர்ச்சகர் சிவா, “சிவன் கோவிலுக்குள் வரும் யானை,தீர்த்தக் குளத்தில் குளித்துவிட்டு,தண்ணீரை உறிஞ்சி விநாயகர் சிலை மீது ஊற்றி அபிஷேகம் செய்யும்.பின்னர் ஒரு விளாம்பழத்தைப் படையலிட்டு சிறிது நேரம் வழிபாடு செய்தபின்,அப்பழத்தை பிரசாதமாக உண்டுவிட்டு,மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடும்.இது கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது” என்று கூறுகிறார்.

நன்றி:விஜயபாரதம்,பக்கம்4,  20.9.13

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ