RightClick

ஆன்மீகக்கடலின் மறுப்புப் பதிவு!!!


நமது இந்து தர்மத்தில் தனி மனித கடமைகள்,குடும்பக் கடமைகள்,சமுதாயக் கடமைகள்,சகோதரக் கடமைகள்,சகோதரிக்கடமைகள்(சகோதரிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்) என்று ஏராளமாக இருக்கின்றன;இவைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் பலருக்கு இல்லாததால் தான் இன்று கூட்டுக்குடும்பங்கள் அருகி,தனிக்குடும்பங்களும் சுருங்கி தனித் தனியாக வாழும் மனிதர்களாக ஆகிவிட்டோம்;இந்த சூழ்நிலை அமெரிக்கா வாழ்க்கை முறையை ஒத்தது;இது தொடர்பாக பதிவுகள் எழுத ஆரம்பித்தால் நூறு வலைப்பூக்கள் போதாது;
ஆன்மீகக்கடல் ஆரம்பித்ததன் நோக்கம்,தனி மனிதர்களின் துயரங்கள்,கஷ்டங்கள் நீங்கிட எனது ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் படி சுய பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகளை ஒவ்வொரு தமிழ் மக்களிடமும் கொண்டு செல்வது மட்டுமே! அவ்வாறு கொண்டு செல்ல ஜோதிட அனுபவமும் ஓரளவு கைகொடுக்கிறது; இந்த இலக்கினை மையமாகக்கொண்டே ஆன்மீகக்கடலின் பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
பணம் பண்ணும் எந்த ஒரு வியாபாரத் திட்டத்தையும் ஆன்மீகக்கடல் வழிகாட்டியதில்லை;வழிகாட்டப்போவதுமில்லை;இது தொடர்பாக எந்த ஒரு வலைப்பூவிலும்,வலைத்தளத்திலும் ஆன்மீகக்கடலின் பெயரை  யாராவது பயன்படுத்தினாலும் அதற்கு ஆன்மீகக்கடல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.குறிப்பாக livingextra அறிவித்திருக்கும் 18.8.2013 ஞாயிற்றுகிழமை அன்று அண்ணாமலையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்தில் நடத்த இருக்கும் பங்குச் சந்தை மூலமாக பணம் சம்பாதிக்கும் திட்ட விளக்கத்திற்கும்;(Meeting Date & MoneyMoney Article-சில சந்தேகங்கள்/விளக்கங்கள்..!=என்ற பதிவு) ஆன்மீகக்கடலுக்கும்,ஆன்மீகக்கடல் அறக்கட்டளைக்கும்,அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ எந்த விதத் தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் எமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
கை.வீரமுனி
ஆன்மீகக்கடல்