RightClick

மீண்டும் நிம்மதியிழக்கும் நமது பூமியும்,நாமும்!!!

19.8.2013 முதல் 8.10.2013 வரையிலும் செவ்வாயும்,சனியும் ஒருவரை ஒருவர் பார்க்கப் போகின்றன;அதுவும் இந்த முறை தனுசு ராசி,மேஷ ராசி,விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த 45 நாட்கள் சோதனை காலமாக அமையப் போகிறது.ஏனெனில்,பூமிக் காரகனாகிய செவ்வாய் பகவான் 19.8.13 முதல் 8.10.2013 வரையிலும் கடகராசியை நீச நிலையில் கடக்க இருக்கிறார்.இதனால்,கடந்த சில மாதங்களில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செயல்பாடுகள்,இந்த 45 நாட்களை நெருங்க,நெருங்க பிறருக்கு எரிச்சலையும்,தவறான அர்த்தத்தையும் தரப்போகிறது. 
தைரிய அதிபதி,பூமிக்காரகன் செவ்வாய் கடகராசியில் 45 நாட்கள் நீசமாக இருக்கிறார்.செவ்வாய் நான்காம் பார்வையாக சனியையும்,சனி முழுப்பார்வையான பத்தாம் பார்வையாக செவ்வாயையும்,கடகராசியையும் பார்ப்பதால் பூமியின் நிலப்பரப்பிலும்,இந்தியாவின் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது.நம் ஒவ்வொருவரின் மனத்தையும் இயக்குவது சந்திரன் ஆகும்.எனவே,சந்திரனின் ராசியான கடகத்தை சனி தனது முழுப்பார்வையாகப் பார்ப்பதால் மேலே கூறிய மூன்று ராசிகள் மட்டுமல்ல;அனைத்து ராசிக்காரர்களுமே இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு வாரம் மட்டுமாவது நிலைகுலைந்து தடுமாற்றத்துடன் செயல்படக்கூடிய சூழ்நிலை உருவாக இருக்கிறது.


இதைத் தடுக்க,தினமும் நாம் ஒவ்வொருவருமே ஸ்ரீகால பைரவரின் பைரவ சஷ்டிக்கவசம் அல்லது ஸ்ரீகால பைரவர் 108 போற்றி பாடுதல் அல்லது ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி பாடுதல்=இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பாடுவதன்  மூலமாக  நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்;கடந்த இரண்டுமுறை இதே போல சனியும்,செவ்வாயும் பார்த்த போது திடீர் தற்கொலை,திடீர் விபத்துக்கள் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன.

தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தல்;

தினமும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்தல் அல்லது ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;

தினமும் 131 சித்தர்கள் மந்திரங்கள் ஜபித்தல்;

இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் விடாமல் தினமும் பின்பற்றிவந்தால்,சிக்கல்கள் நிறைந்த நமது காலத்தில் நமது தினசரி வாழ்க்கை எந்த ஒருகுறையுமின்றி சீராகும்;

மேஷம்,விருச்சிகம் ராசியினர் அளவற்ற பொறுமையுடன் இந்த கால கட்டத்தில் செயல்பட வேண்டும்;குறைந்தது ஒரு வருடம் வரையிலும் ஸ்ரீகால பைரவர் வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது 131 சித்தர்கள் மந்திர ஜபம் செய்து வருபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் எந்த பிரச்னையும் வராது.

இந்த கம்யூட்டர் யுகத்திலும்,நமது நிம்மதியான வாழ்க்கைக்கு(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டுவிட்டு) நமது தினசரி மந்திர ஜபம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு மட்டுமே உறுதியளிக்கும் என்பது அனுபவ உண்மை!!! 

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ