RightClick

இந்தியாவை அமெரிக்க மயமாக்கிட நாமே அனுமதிக்கலாமா?


மெரிக்காவில் விடுதி ஒன்றில் உள்ள பாரில் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டனர். ஒருவன் இந்தியன். மற்றொருவன் அமெரிக்கன்.
இந்தியன் அமெரிக்கனிடம் சொன்னான், “இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள் என்னை என் உறவுக்காரப் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். அவர்கள் பார்த்துள்ள அந்த பெண்ணோ ஒரு சரியான பட்டிக்காடு. நகரத்துக்கு நாகரீகமே தெரியாதவள். நான் அவளை பார்த்தது கூட கிடையாது. இதை எங்கள் ஊரில் ARRANGED MARRIAGE என்று சொல்வோம். எனக்கோ ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள ஆசை. அதாவது LOVE MARRIAGE. நான் விரும்பாத, காதலிக்காத ஒரு பெண்ணை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். ஆகையால் வீட்டில் ஒரே பிரச்னை. எனவே குடிக்க வந்தேன்.”
அமெரிக்கன் சொன்னான் : “ஓ…நீ காதல் திருமணம் பத்தி சொல்றியா? இரு என் கதையை சொல்றேன். நான் ஒரு விதவையை 3 வருஷமா காதலிச்சேன். அவ கூட டேட்டிங் எல்லாம் போயி அப்புறமா கல்யாணம் பண்ணிகிட்டேன். சில வருடங்கள் கழித்து என் வளர்ப்பு மகளை (மனைவியின் முதல் கணவருக்கு பிறந்தவள்) என் அப்பா விரும்பித் தொலைக்க, என் அப்பா எனக்கு மருமகனானார். நான் மாமனாராகிவிட்டேன்.”
இவன் அதிர்ச்சியுடன் பார்க்க… அவன் தொடர்ந்தான் : “இதனால் என் மகள் எனக்கு அம்மாவாகிவிட்டாள். என் மனைவி பாட்டியாகிவிட்டாள். எனக்கு என்று ஒரு மகன் பிறந்தபோது பிரச்னை அதிகமானது. என் மகன் என் அப்பாவின் மைத்துனன் என்பதால் அவன் எனக்கு ஒரு வகையில் மாமா முறை வேண்டும். என் அப்பாவுக்கு குழந்தை பிறந்தபோது பிரச்னை மேலும் அதிகமானது. என் அப்பாவுக்கு பிறந்த என் தம்பி, எனக்கு ஒரு வகையில் பேரன் ஆவான். கடைசீயில் நான் எனக்கே தத்தாவாகிவிட்டேன். நானே எனக்கு பேரனும் ஆகிவிட்டேன்!!!!!!!!!!!!”
“ஆமா… நீ என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே? கொஞ்சம் இரு ஒரு பிரேக் எடுத்துக்குறேன்….” என்று அமெரிக்கன் முடிக்க, நம்ம ஆளு எப்பவோ கீழே விழுந்து மயக்கம் போட்டிருந்தார்.
நகைச்சுவையாக இருந்தாலும் இந்த கலாச்சாரம் தான் தற்போது மேற்கத்திய நாடுகளில் பரவி வருகிறது.
இது தான் அந்த நாடுகளுக்கும் நம் புண்ணிய பூமிக்கும் உள்ள வித்தியாசம்.
இந்தியனாக இரு. இந்தியனாக இருப்பதில் பெருமைப்படு. இந்தியாவில் இருப்பதில் பெருமைப்படு.இந்திய உணவுப் பழக்கவழக்கங்களை ஒருபோதும் கைவிடாதே! இந்தியாவுக்கும்,இந்தியப் பண்பாட்டுக்கும் கெடுதி தரும் ஜீன்ஸ்,கோக்,பர்கர்,பிஸ்ஸா,பர்முடா அணிதல்,டேட்டிங்,மதமாற்றம் போன்றவைகளை தலைமுழுகினால் மட்டுமே இனி இந்தியாவை வல்லரசாக்கிட முடியும்.