RightClick

சிவலிங்கம் நிறுவுவோம்;நாமும் ருத்ரப் பதவி அடைவோம்!!!







சிவபுராணம் என்று ஒன்று இருக்கிறது.இதில் சிவ வழிபாட்டுமுறைகள்,சிவ வழிபாட்டினால் ஏற்படும் நன்மைகள்,சிவ வழிபாட்டின் சூட்சும ரகசியங்கள் போன்றவை விரிவாகவும்,எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன;சிவபுராணம் என்ற தலைப்பில் இதுவரையிலும் சுமாராக 30 பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றன;ஆனால்,நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சிவபுராணம் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக உங்கள் தாத்தாவிடம் அல்லது அவரது வீட்டு நூலகம்/பரணில் தூசி படிந்து கிடக்கும்;யாருக்கு பூர்வபுண்ணிய ப்ராப்தம் இருக்கிறதோ அவரே அதை வாசிக்கும் தகுதி பெற்றவர் ஆவார்.


நூறு வருடத்திற்கு முன்பு வெளிவந்த சிவபுராணம் புத்தகம் தேவைப்படுவோர் என்ன செய்ய வேண்டும்?
மதுரையில் புதுமண்டபம் பகுதி,சென்னை லஸ்கார்னர் அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழைய புத்தகக் கடை எதுவாக இருந்தாலும்,நீங்கள் நேரடியாகச் சென்று தேடிப் பார்த்தால் சில வாரங்களுக்குப் பிறகு கிடைக்கலாம்;
ஓரளவு பக்தி உள்ளவர்களுக்கு அது கிடைத்தால்,அவர்கள் அடுத்த சில வருடங்களில் தமது துறையில் மகத்தான சாதனையாளராக உருவெடுத்துவிடுவார்;அவ்வளவு சிவரகசியங்கள் அதில் புதைந்திருக்கின்றன.
ஒருவன் சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணினாலே அவனது முன்னோர்கள் 71 தலைமுறையினர் செய்த அனைத்துப் பாவங்களும் தீர்ந்துவிடும்;
ஒருவன் கருங்கல்லால் ஒரு சிவாலயம் எழுப்பினாலோ அல்லது பாழடைந்த சிவாலயத்தை புனர்நிர்மாணம் செய்தாலோ அல்லது உழவாரப்பணி செய்தாலோ அவனது முந்தைய ஏழு தலைமுறையினர் செய்த அனைத்து கர்மாக்களும் கரைந்து காணாமல் போய்விடும்;
ஒருவன் கருங்கல்லால் ஆன ஒரு சிவாலயம் எழுப்பினால்,அந்த சிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு கருங்கல்லுக்கும் ஆயிரம் தேவ வருடம்( ஒரு தேவ வருடம் என்பது நமது பூமியில் பல ஆயிரம் வருடங்களைக் குறிக்கும்) சகல சம்பத்துக்களோடு வாழ்வான்;அந்த புண்ணியத்தை அனுபவித்தப் பின்னர்,அவன் பூமியில் மகத்தான செல்வ வளத்தோடும்,சிறந்த சிவபக்தியோடும் பூமியில் பிறப்பான் என்று சிவமஹா புராணம் தெரிவிக்கிறது.சிவபுராணமும்,சிவமஹாபுராணமும் ஒன்றுதான்.


1971 ஆம் ஆண்டில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருக்கு அருகில் கோடி லிங்கம் ஸ்தாபிக்க ஆரம்பித்தார்;1999 ஆம் ஆண்டில் சுமாராக 96,00,000 சிவலிங்கங்களை ஸ்தாபித்துவிட்டார்.1990களில் இங்கே ஒரு தமிழ்த்திரைப்படம் கூட எடுத்துள்ளனர்;இதே போன்ற ஒரு முயற்சியை சைவம் தோன்றிய நமது தமிழ்நாட்டில் ஒருவர் துவக்கியிருக்கிறார்.ஆமாம்!
சித்தர்கள் அடிக்கடி வருகை தரும்(தேனி மாவட்டம்) சுருளி அருவிக்கு அருகில் கோடி லிங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.இவர் கொஞ்சம் வித்தியாசமாக தான் மட்டும் ஒரு கோடி சிவலிங்கங்களை ஸ்தாபிக்காமல்,அனைவருடைய பங்களிப்போடு இதைத் துவக்கியிருக்கிறார்.நீங்கள் விரும்பினாலும், ஒரு சிவலிங்கத்தை இங்கே நிறுவலாம்;ஒரு கோடி சிவலிங்கங்கள் உருவாகுவதில் பங்கேற்கலாம்;இதன்மூலமாக நீங்களும் ருத்ரப்பதவியை அடையலாம்;


ஒருமுறை தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுருளி அருவிக்குப் பயணிப்போமா?