RightClick

ஆவணி அவிட்டத்தன்று(20.8.13 செவ்வாய் இரவு) ஸ்ரீபைரவ வழிபாடு செய்வோம்! அளவற்ற வரங்கள் பெறுவோம்!!!






விஜய வருடத்தின் ஆவணி மாதத்து பவுர்ணமியானது 20.8.13 செவ்வாய்க்கிழமை காலை 10.17க்குத் துவங்கி,21.8.2013 புதன்கிழமை காலை 8.16 வரை இருக்கிறது.ஆவணி மாதத்தில் நமது ஆத்மக்காரனாகிய சூரியன்,சிம்மராசியில் ஆட்சி பலம் பெறுகிறார்.எனவே,ஆவணி மாதத்து பவுர்ணமியானது அவிட்டம் நட்சத்திரத்தில் ஏற்படுகிறது.
இந்த மாதத்து பவுர்ணமியன்று திருவோணம்,அவிட்டம்,சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர்கள், அன்னதானம் செய்வது அவர்களின் கடுமையான கர்மவினைகளை நீக்கும்.(மற்ற நட்சத்திரக்காரர்களும் பவுர்ணமி அன்னதானம் செய்யலாம்)மேலும்,இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரவர் ஊர்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் நடைபெறும் பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டு, ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பதும் நன்று.அம்மன் கோவில்களில் மட்டுமல்ல;எந்தக் கோவிலாக இருந்தாலும் அங்கே பவுர்ணமி இரவில் குறைந்தது 10 நிமிடம் முதல் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை மந்திர ஜபம் செய்து வர அளவற்ற நன்மைகளும்,பைரவ அருளும் கிட்டும்;பைரவ வழிபாடு பற்றிய தொகுப்புகளைப் பற்றிய புத்தக விபரங்களை அறிந்து கொள்ள aanmigakkadal@gmail.com என்ற  மின் அஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.


அல்லது


தொடர்ந்து பனிரெண்டு பவுர்ணமிகளுக்கு நமது வீட்டில் இரவு 7 முதல் 8 மணி வரை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் 27 முறை ஜபித்து வந்தால் கடுமையான பண நெருக்கடி தீரும்;நீண்டகாலக் கடன்கள் தீரும்;வராக் கடன் வசூலாகும்;திருமணத் தடை விலகும்;நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமையும்;நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் போட்டோ தேவைப்படுவோர் நமது ஆன்மீகக்கடலைத் தொடர்பு கொண்டால்(aanmigakkadal@gmail.com) விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்;

அல்லது

ராகு மஹாதிசை நடப்பில் உள்ளவர்கள்,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர விரும்புவோர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் முதலியார்ப்பட்டித் தெருவில அமைந்திருக்கும் அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளலாம்.பூசாரி செல் எண்;9003353286(மதிய நேரம் மட்டுமே பேசுவார்).20.8.13 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 10 மணிக்குத் துவங்கி 1 மணி வரை பவுர்ணமி பூஜை நடைபெறும்.

அல்லது

கோவிலுக்குச் சென்று வழிபட இயலாதவர்கள்,ஸ்ரீகால பைரவர் 108 போற்றி அல்லது ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை வீட்டிலேயே பவுர்ணமி அன்று(20.8.13 செவ்வாய்க்கிழமை இரவு) பாடலாம்;ஸ்ரீகால பைரவ மந்திரஜபம் நமது கடுமையான கர்மவினைகளை நீக்கும்;நமது கர்மவினைகள் குறையக் குறைய நமது பொருளாதார பலம் அதிகரிக்கும்;சம்பளம்/கமிஷன்/லாபம் படிப்படியாக அதிகரிக்கும்;

ஆத்மாக்காரனாகிய சூரியன் இந்த பவுர்ணமியில் பலம் பெறுவதால் இந்த பவுர்ணமி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.எனவே,இந்த பவுர்ணமியை பைரவ வழிபாட்டிற்குப் பயன்படுத்துவோம்;நமது ஆத்மபலத்தைப் பெருக்கிக் கொள்வோம்;

மேலும்,சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் இருப்பதால்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ (பவுர்ணமி)வழிபாடு துவங்கிட இந்த ஆவணி மாத பவுர்ணமியே மிகவும் ஏற்றது.

குறிப்பு:தினசரி மற்றும் வாரம் தோறும் ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்பவர்களும் ஆவணி மாத பவுர்ணமி அன்று முதலில் ஸ்ரீகால பைரவ வழிபாட்டையும்,அடுத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டையும் செய்யலாம்;

தினசரி சிவ மந்திர ஜபம் செய்து வருபவர்கள்,இன்று மட்டும் அதை நிறுத்திவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்யலாம்;

இதுவரை எதுவுமே துவக்காதவர்கள் இந்த பவுர்ணமியில் இருந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ மந்திர ஜபம் அல்லது வழிபாடு துவக்கலாம்;



 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ