RightClick

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?


1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!

இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.
2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில "நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.

ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.

ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!
சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் "தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.
2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், "இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?

2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்
2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.

1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?

2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.
கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.

உற்பத்தியை அழித்த இறக்குமதி

இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.

2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மூலதனப் பொருள்களின் இறக்குமதி "செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

79 சதவீதம் அதிகரிப்பு

மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?
நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?
ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

 By எஸ்.குருமூர்த்தி, நன்றி:தினமணி 29.8.13

தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் உலகிலேயே அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்

சென்னை : தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவில் ஆய்வு :

இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வாளர்கள் தகவல் :

சமீப காலமாக இந்தியாவில் மக்களிடையே ஆரோக்கியம் குறித்த கவனம் அதிகரித்து வருகிறது; இந்த ஆய்வு மக்களின் உணவு பழக்கத்தை பிரதிபலிப்பதற்காக அல்ல; உணவில் குறிப்பாக காலை உணவில் நாம் சாப்பிடும் முறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கானதாகும்; உணவு தொடர்பாக நடத்தப்பட்ட ஏராளமான ஆய்வில் அதிகப்படியாக மக்கள் காலை உணவை தவிர்ப்பதும், உணவு சாப்பிட்டாலும் குறைந்த அளவு சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது; தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் கோல்கட்டாவின் பாரம்பரிய காலை உணவில் மைதா அதிக சேர்க்கப்படுகிறது; இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம்; மிகக் குறைந்த அளவே புரோட்டீன் சேர்க்கப்படுகிறது; நார்சத்து கிடையாது; டில்லி உணவில் எண்ணெய் மிகவும் அதிகம்; மும்பையில் முறையற்ற உணவு சாப்பிடப்படுகிறது; இங்குள்ளவர்கள் வெறும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள். இவ்வாறு மும்பை நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரியின் ஆராய்ச்சித்துறை இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆய்வு முடிவு :

மும்பையில் 79 சதவீதம் மக்கள் போதிய சத்துக்கள் அற்ற உணவுகளை சாப்பிடுகின்றனர். டில்லியில் 76 சதவீதம் பேரும், கோல்கட்டாவில் 75 சதவீதம் பேரும் சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள். சென்னையில் 60 சதவீதம் பேர் மட்டுமே போதிய சத்துக்கள் இல்லாத உணவை சாப்பிடுகிறார்களாம். மற்றவர்களை விட தென்னிந்திய கிராமப்புறங்களில் வாசிப்பவர்களின் உணவில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அவர்கள் ராகியை அதிகம் பயன்படுத்துவதால் அதில் வைட்டமின் பி, நார்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருப்பதாக மெட்ராஸ் மருதஅதுவ கல்லூரியின் உணவு கட்டுப்பாட்டு நிபுணர் மீனாட்சி பஜாஜ் தெரிவித்துள்ளார். பிரபலமான இட்லி, சாம்பார் தான் அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கிய முழுமையான உணவு எனவும் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

சென்னை நிலவரம் :

இட்லியில் உள்ள அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு உணவில் முழுமையான சத்துக்களை அளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பாரில் உள்ள காய்கறிகள் மற்றும் பருப்பு சரிவிகித அளவில் சேர்க்கப்படுவதால் சத்துக்கள் அதிகம் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால் சென்னையில் காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகவும் குறைவு. சத்துக்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களும் சென்னையில் குறைவு. சென்னையில் 50 சதவீதம் குடும்ப பெண்களும், 30 சதவீதம் வயதானவர்களும், 20 சதவீதம் வேலைக்கு செல்பவர்களும் காலை உணவாக ஆற்றல் தரும் பானங்களை மட்டுமே உட்கொள்கின்றனர். நன்றி:தினமலர் 29.8.13
ஆன்மீகக்கடலின் கருத்து: பிஸ்ஸா,பர்கர்,மக்காச்சோளத்தில் இருந்து தயாராகும் உணவுகள் அமெரிக்காவுக்கும்,ஐரோப்பியர்களுக்கும் பொருந்தும்;நமக்கு சிறிதும் பொருந்தாது.எனவே,பிஸ்ஸா,பர்கர்,கலர் கலராக டிவி விளம்பரங்களில் வரும் பன்னாட்டு குளிர்பானங்கள் நமது உடல்நலத்தைக் கெடுக்கக் கூடியவை;இவை நமது பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் மேல்நாட்டின் நோயை உருவாக்கும் ஐந்தாம் படைகள்;இவைகளை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும்.

ஸர்ப்பதோஷம்,ஆயில்யதோஷம் நீக்கும் கருவூர் சித்தர் வழிபாடு!!!







நீங்கள் அல்லது உங்கள் மகள்/ன் ஸர்ப்ப தோஷத்தால் திருமணம் தாமதமாகிக் கொண்டே போகிறதா?

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததாலேயே உங்களுக்குத் தகுந்த வரன் அமையாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்களா?

ஸர்ப்பதோஷம் அல்லது மாங்கல்ய தோஷம் இருந்து அந்த தோஷத்தை நீக்கிட பலவிதமான பரிகாரங்கள் செய்தும் தகுந்த வரன் அமையாமல் சிரமப்படுகிறீர்களா?

கரூர் நகரில் மையமாக அமைந்திருக்கும் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்வரும் நாட்களில் ஏதாவது ஒரு எட்டு நாட்களுக்கு காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் வருகை தர வேண்டும்.பின்வரும் வழிமுறைப்படி,வழிபாடு செய்து முடித்தால் கருவூரார் சித்தர் அருளால் திருமணத் தடை நீங்கி,சிறந்த வரன் அமைந்துவிடும்.
யாருக்கு ஸர்ப்ப தோஷம் அல்லது திருமணத்தடை இருக்கிறதோ அவரே இந்த சுய வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.அல்லது அவர்களின் ரத்த உறவுகளான பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் இந்த சுய வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.திருமணத்தடை உள்ளவர்களே பின்பற்றுவது சிறப்பு & அவசியம்.

முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட ஒரு மாலை,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்பு திராட்சை அரைக்கிலோ(சீசன் சமயத்தில் மட்டுமே கிடைக்கும்;மற்ற நேரங்களில் கிடைக்காது)விதை நீக்கப்பட்ட பேரீட்சை பாக்கெட் ஒன்று,ஆறு மஞ்சள் வாழைப்பழங்கள்,வெற்றிலையும் கொட்டைப்பாக்கும்,தரமான பத்தி பாக்கெட் ஒன்று,நெய்தீபம் இவைகளுடன் கருவூர் சித்தர் அமைந்திருக்கும் ஜீவசமாதிக்குச் செல்ல வேண்டும்.பூசாரியிடம் இவைகளை ஒவ்வொன்றாகக் கொடுக்க வேண்டும்;கொடுத்து ஸர்ப்பதோஷம்/திருமணத்தடை உள்ளவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;

பிறகு,பூசாரிக்கு ரூ.101/-க்குக் குறையாமல் தட்சிணை தந்துவிட்டு,டயமண்டு கல்கண்டு,கறுப்புத் திராட்சை,பேரீட்சை,மஞ்சள் நிற வாழைப்பழங்கள் இவைகளில் பாதியை கேட்டு வாங்க வேண்டும்;வாங்கியவைகளை அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அவைகளை சாப்பிடலாம்;வீட்டிற்கும் கொண்டு செல்லலாம்;

பிறகு அங்கிருந்து சென்றால் சிறிது தொலைவிலேயே நாகர்கள் சிலைகள் இருக்கும்.அந்த நாகர்களின் சிலை ஒவ்வொன்றின் மீதும் முதலில் (குறைந்தது அரைக்கிலோ மஞ்சள் பொடி வாங்கியிருக்க வேண்டும்)மஞ்சள் பொடியைத் தூவ வேண்டும்;அடுத்த படியாக(குறைந்தது மூன்று லிட்டர் பால் வாங்கியிருக்க வேண்டும்;பாக்கெட் பாலும் வாங்கிக் கொண்டு வரலாம்) பால் ஊற்ற வேண்டும்;முடிவாக பசுபதீஸ்வரரையும்,அம்பாளையும் வழிபட்டுவிட்டு வேறு எவர் வீட்டுக்கும் செல்லாமலும்,எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி ஒன்பது ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வழிபாடு முடிக்க வேண்டும்.தொடர்ந்து முடியாவிட்டாலும்,விட்டுவிட்டாவது ஒன்பது ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வழிபாடு முடித்துவிட்டால்,அடுத்த நூறு நாட்களுக்குள் பொருத்தமான வரன்/வாழ்க்கைத் துணை அமையும்.


இந்த வழிபாட்டைப் பின்பற்றுவதற்கு ஒரே ஒரு பத்தியம் உண்டு;அது அசைவம் ஒரு வருடம் வரையிலாவது சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே இதற்குரிய பலன்கள் கிட்டும்.இந்த அரிய தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!

3.9.2013 செவ்வாய்க்கிழமை

30.9.2013 திங்கள் காலை 11.25 முதல் 1.10.2013 செவ்வாய் மதியம் 1.30 வரை

28.10.2013 திங்கள்

24.11.2013 ஞாயிறு

21.12.2013 சனி காலை 8.40 முதல் 22.12.2013 ஞாயிறு காலை 10.58 வரை

17.1.2014 வெள்ளி மதியம் 3.51 முதல் 18.1.2014 சனி மாலை 6.12 வரை

14.2.2014 வெள்ளி(ஆயில்யமும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாள்!)

13.3.2014 வியாழன் காலை 6.23 முதல் 14.3.2014 வெள்ளி காலை 8.50 வரை

9.4.2014 புதன் மதியம் 1.42 முதல் 10.4.2014 வியாழன் மாலை 4.13 வரை

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் கருவூர் தேவாய நமஹ



சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்!!!



ஆகாயம்:சென்னையில் அமைந்திருக்கும் ஆகாயஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும்.இதன் மூலவர் திருமூலநாதசுவாமி ஆவார்.112,அவதான பாப்பையா தெரு,சூளைமேடு,சென்னை-112 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.தினமும் காலை 6 மணி முதல் 11.30 வரையிலும்,மாலை 5மணி முதல் 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்.7C,7B,7D,164,59,159 என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.மிகவும் பழுதடைந்த இத்திருக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வேண்டியது நமது கடமை ஆகும்.
தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு 8.30க்கு நடைபெற்றுவருகிறது.


மண்:சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் 315,தங்கச்சாலை தெரு,பூங்கா நகர்,சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மனுடன் அருள்புரிந்துவருகிறார்.தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில் வன்னிமரத்தடியிலும்,அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே!
1,21,51,57,18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்;அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிது தொலைவில் அமைந்திருக்கிறது.
மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷபலக்னம்,கன்னி லக்னம்,மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.
காலை 6 முதல் 12 வரையிலும்,மாலை 4 முதல் 9 வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும்.


நீர்:சென்னையின் நீர்ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள் புரிந்துகொண்டிருக்கிறார்.7A,7F,7H,34,16A,22,29D,23C,27K என்ற எண்ணுள்ள பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் பயணித்து கங்காதரேசுவரர் சிவன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.இந்த ஆலயம் புரசைவாக்கத்தில் அமைந்திருக்கிறது.
கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம் அல்லது மீன ராசியில்  பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.


நெருப்பு: சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது.28,34,37,159 இந்த எண்ணுள்ள பேருந்துகளில் பயணித்து யானைக்கவுனி காவல் நிலையம் நிறுத்தத்தில் இறங்கி,வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாப்பிள்ளை தெரு வழியாக சிறிது தொலைவில் பயணித்தால் இந்த திருக்கோவிலை அடையலாம்.இத்திருக்கோவிலின் முகவரி:24,பள்ளியப்பன் தெரு,சவுக்கார்பேட்டை,சென்னை-79.
ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது.இங்கே பெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார்.
மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற ராசிக்காரர்களும் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.




வாயு:சென்னையின் வாயுஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில்,155,பவளக்காரத்தெரு,பாரிமுனை,சென்னையில் அமைந்திருக்கிறது. காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இத்திருக்கோவில் திறந்திருக்கும்.38H,44,44C.56C,116  என்ற எண்ணுள்ள பேருந்தில் ஒன்றில் பயணித்து மாணவர் மன்றம் அல்லது தம்புச்செட்டித்தெரு அல்லது பவளக்காரத் தெரு நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் கடைசியில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.அல்லது ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத்தெரு நுழைந்தவுடன் இந்த திருக்கோவிலை அடையலாம்.
கோவில் கொடிமரத்தின் நேராக இருக்கும் வாசல் அடைக்கப்பட்டுள்ளது;இறைவனுக்கு எதிரே மடப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.இந்த இழிநிலையை நீக்கிட நாம் முயலுவோமா?
ஒரு நாள் உணர்வு அழியும் நாள் உயிர்போகும் நாள் உயர்பாடைமேல்
காவுநாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல்காவிரிப்
பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே என்று சுந்தரர் பாடியதற்கேற்ற சக்தி வாய்ந்த ஆலயம் இது.
மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம் அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டே இருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.

நன்றி:www.chennaisivapathigal.blogspot.com

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 28.8.13 புதன்கிழமை) வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;




பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.

33.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
34.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=28.8.13 புதன்கிழமை முழுவதும் அமைந்திருக்கிறது.( புதன்கிழமை அன்று இராகு காலம் மதியம் 12 மணி முதல்  1.30 வரை வருகிறது;).உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=27.9.2013 வெள்ளிக்கிழமை முழுவதும்(இராகு கால நேரம் காலை 10.30 முதல் மதியம் 12  மணி வரை)

$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

'அடுப்பெரிக்கறதுக்கு... வீட்டுக்கூரையை முறிக்காதீங்க''

கோவணாண்டி
'
நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு கோவணாண்டி எச்சரிக்கை!
ஓவியம்: ஹரன்
முறையீடு

இந்தியப் பொருளாதாரத்துல 'அடிக்கடி கிலி' ஏற்படுத்துற 'பொருளாதார புலி'... செட்டிநாட்டுச் சீமான்... பன்னாட்டு கம்பெனிகளின் 'பவர் ஸ்டார்'... இந்தியாவோட நிதியமைச்சர்... சிதம்பரம் அவர்களுக்கு, வணக்கம் சொல்லிக்கிறான், உங்க பாசக்கார கோவணாண்டி!
'அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’னு காத்திருந்து, பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானதும், நிதியமைச்சர் நாற்காலியை மறுபடியும் கெட்டியா புடுச்சுக்கிட்டீங்க. 'நம்ம ஊர்க்காரரு இம்புட்டு பெரிய பதவியில மறுக்கா உக்காந்து இருக்காரு... நிச்சயம் நாட்டுக்கும் நம்ம ஊரு ஜனங்களுக்கும் நல்லது செய்வாரு’னு நம்பிக்கையோட இருந்தாங்க பல பேரு (இதுல நான் இல்லீங்கோ). அந்த சமயத்துல... 'சிங்கம் களமிறங்கிருச்சிடோய்'னு எங்க ஊரு கதருங்க கத்துன கத்துல, காது ஜவ்வே அந்து போச்சுங்க. ஆனா, 'நான் சிங்கமில்ல, எப்பவுமே சிறு நரிதான்’னு ஒரு வருஷத்துக்குள்ளயே உணர்த்திட்டீங்களே!
'சில்லரை வணிகத்துல பன்னாட்டு கம்பெனிகள் வந்தா, இடைத்தரகர்கள் இருக்க மாட்டாங்க, நேரடி கொள்முதல் செய்வாங்க. அது மூலமா, இந்திய விவசாயி களுக்கு நல்ல விலை கிடைக்கும். உள்ளூரு கோவணாண்டிகள்லாம்... கோடீஸ்வரன்களா மாறிடுவாங்க’னு எங்களுக்கெல்லாம் ஆசை காட்டி, அந்தப் பக்கம் அந்நிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள அள்ளிவிட்டு, அந்நிய முதலீட்டை அடுப்படி வரைக்கும் அழைச்சுட்டு வந்திருக்கு உங்க கதர் கெவருமென்ட். இந்த நிலையில, 'அந்நிய முதலீட்டை அதிகப்படுத்த... இன்னும் சில சலுகைகளை அவங்களுக்கு கொடுக்கணும்’னு வக்காலத்து வாங்கியிருக்கீங்களே?
ஆரம்பத்துல எனக்கும் ஒண்ணும் புரியலீங்க. ''சலுகை கொடுக் கணும்னுதானே சொல்றாரு சிதம்பரம். இதுல என்ன தப்பு..?'’னு எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியார்கிட்ட கேட்டேன். மனுஷன் கதர்காரரா இருந்தாலும்... ''அட கேணப்பயலே... அதுல பெரிய தந்திரமே இருக்கு''னு சொல்லி, ஒவ்வொண்ணையும் புட்டுப்புட்டு வெச்சுப்புட்டாருங்க.
''சில்லரை வணிகத்துல அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வரக்கூடாதுனு தேசமே போராடுனப்ப, நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல. முதலீடு செய்றவங்க, முதலீட்டுல பாதி பணத்தை (50%) குடோனு, பில்டிங்னு கட்டடமா கட்டணும். உம்ம பாஷையில சொல்லணும்னா அசையா சொத்துல முதலீடு பண்ணுவாங்க. அதனால திடீர்னு அவங்க ஓடிப்போயிட முடியாது. அதேமாதிரி, கண்ட இடத்துல கடையைத் திறந்து சில்லரை வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டாங்க. 10 லட்சம் மக்களுக்கும் அதிகமா வாழற நகரங்கள்லதான் கடையைத் தொறப்பாங்க. மூணாவது, அவங்க கடைகள்ல 30 சதவிகிதம் இந்தியாவுல உற்பத்தியாகுற பொருளுங்கள விப்பாங்க’னு சொல்லித்தான் அனுமதியை அள்ளிவிட்டாங்க. ஆனா, அதெல்லாம் 'ஆடுகிட்ட ஓநாய் சொன்ன கதை’ங்கிறது அப்ப யாருக்கும் புரியாம போயிடுச்சு.
அனுமதி வாங்கிட்டு உள்ள வந்த பிறகு, வாயைத் தொறந்த வால்மார்ட், '50 சதவிகிதம் பணத்தை பில்டிங்ல போடுறதுக்கு நாங்க என்ன முட்டாள்களா?’னு கோவிச்சுக்கிடுச்சு. அதோட '10 லட்சம் மக்கள் வாழுற நகரங்கள்’னு விதிகள்ல இருக்கற வார்த்தையை '10 லட்சத்துக்கு கீழ் மக்கள் வாழுற நகரங்கள்’னு மாத்து. 30 சதவிகிதம் இந்திய பொருட்களை வாங்கி விற்க முடியாது... 20 சதவிகிதம்தான் விற்க முடியும்’னு கண்டிசன்கள வேற போட்டுட்டிருக்கு.
'இப்ப இந்திய உற்பத்தி பொருளுங்கள 20 சதவிகிதம்தான் விப்போம்’னு சொல்றவன்... நாளைக்கு, '100 சதவிகிதம் எங்க பொருளை மட்டும்தான் விப்போம்’னு சொல்லிட்டா, இங்க உற்பத்தியாகுற பொருளையெல்லாம் சுடுகாட்டுலயா விக்க முடியும்''னு வாத்தியாரு போட்ட போடுல... 'ஷாக்' ஆயிட்டேன்.
''ரூபாய் நோட்டுல சிரிக்கிற காந்திய மதிக்காம, டாலருக்கு அலைஞ்சாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல முருகன் டாலர் கூட மிஞ்சாது. அந்தளவுக்கு மோசமா இருக்கு அந்நிய செலாவணி கையிருப்பு.  நாடு நாசமா போச்சு''னு வயசான காலத்துல வார்த்தைகளாலயே வறுத்துட்டாருங்க அந்த வாத்தியார்.
அய்யா சிவகங்கை சீமானே... அடுப்பு எரிக்கறதுக்கு வீட்டுல விறகு இல்லைனா, வீட்டுக்கூரையை முறிச்சு அடுப்பு எரிக்க முடிவு பண்ணிட்டீங்களே... இது நல்லாவா இருக்கு? 'இன்னிக்கு நிலைமையை சமாளிச்சா போதும்’னு அப்பப்ப நீங்களும்... நிதியமைச்சர் பதவியில உங்கள மாதிரி ஏற்கெனவே உக்கார்ந்திருந்தவங்களும் எடுத்த தப்புத்
தப்பான முடிவுகள்தான், இந்தியாவை இத்தனை இக்கட்டுல தள்ளி விட்டிருக்கு.
இனியாவது, உள்நாட்டு உற்பத்தியை நம்பி திட்டம் போட்டு, நாட்டை வளப்படுத்த பாருங்க. அதை விட்டுட்டு எல்லாத்தையும் இறக்குமதி செஞ்சுட்டே இருந்தா... 'இந்தியானு ஒரு நாடு இருந்துச்சு. கதர் பெருமை பேசியே, அதை காலி பண்ணிட் டாங்க இந்த காங்கிரஸ்காரங்க’னு வரலாறு காறித் துப்பிடும்... ஜாக்கிரதை!
இப்படிக்கு,
கோவணாண்டி

கருவூரார் சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கும் ஊர் கரூர்! கோவில் அருள்மிகு பசுபதிநாதர் கோவில்!!!




சோழர்களின் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர் கருவூர் சித்தர்! அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கு ராஜராஜசோழனின் அப்பா தங்கத்தால் பசு ஒன்றை தானமாக வழங்கினார் என்று வரலாறு தெரிவிக்கிறது;அதன் பலனாக,உலகம் முழுவதையும் ஆட்சி செய்வதற்காகவே பிறந்தவர் ராஜராஜசோழன்!(அலெக்ஸாண்டர் உலகை கைப்பற்றுவதற்கு முன்பே உலகை ஆண்டவர் நமது மன்னர் ராஜராஜசோழன்! சித்தர் கருவூராரின் ஆசியும்,வழிகாட்டுதலுமே இதற்குக்காரணம்!!!

ராஜராஜ சோழ மன்னர் காலத்தில் அவரது அரசியல் ஆலோசகராக அறிமுகமாகி,அவரது ஆன்மீக மற்றும் வாழ்க்கை குருவாக உயர்ந்தவர் கருவூர் சித்தர்! இது தொடர்பான வரலாற்று நாவல்கள் மிக மிகக் குறைவு.ஆனால்,ஆதாரங்களோ பழமையான நூலகங்களில் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன;இவைகளைத் தொகுத்தாலே ஒரு கோடி பக்கங்கள் கொண்ட சிவ என்சைக்ளோபீடியா ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கும்;அத்தனைத் தகவல்கள் தமிழ்நாடு,டெல்லியிலும், இத்தாலி,ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஏராளமான புராதனத் தகவல்கள் ஓலைச்சுவடிகளில் நிரம்பியிருக்கின்றன;

அப்பாவி மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கியவர் கருவூரார்.அரசுப் பணியில் இருந்தவாறே ஏராளமானவர்களுக்கு இறைவழிபாடு பற்றிய அடிப்படை எண்ணங்களைத் தோற்றுவித்தவர்,தீராத பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்தவர்.கிறிஸ்தவ ஆங்கிலேயனால் நமது நாட்டின் கல்வித்துறையில் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வித்திட்டமானது நமது முன்னோர்களின் பெருமைகளைக்கூட நாம் அறிந்து கொள்ளாத அளவுக்கு நம்மை அடிமுட்டாளாக்கி வைத்திருக்கிறது.அதனால் தான் தன் முனைப்பு(Ego) கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கி நமது தேசமானது அண்டைநாடுகளின் வம்புகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் இன்றைய காலகட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்கள் இன்றும் நிம்மதியாக வளர்ந்து வரக் காரணம் அந்தந்த நகரங்களில் மறைந்து நின்று நம்மை வழிநடத்தும் சித்தர்களும்,மகான்களுமே! இவர்களின் ஜீவசமாதிகளின் ஆற்றலால் மாநகரங்கள் பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது.இந்து தர்மத்தின் ஆணிவேர்களான ஆழ்ந்த தெய்வபக்தியும்,சகிப்புத் தன்மையும்,அரசு சட்டதிட்டங்களையும் மீறிய மனித நேயமும் கொண்ட இன்றைய ஒரு சில அரசு அதிகாரிகள் மூலமாக இம்மாதிரியான நகரங்களை முறைப்படி வளரச் செய்து கொண்டிருக்கிறது.

கரூரில் அமைந்திருக்கும் பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்குள்ளே அமைந்திருக்கும் கருவூர் சித்தரின் ஜீவசமாதி இதே மாதிரியானது;இந்தியாவில் முதன் முதலில் பேருந்து கட்டுமானம் மற்றும் வடிவமைப்புத் தொழில் மும்பையில் துவங்கியது;பிறகு,தொழில் நெரிசலால் அந்தத் தொழில் புனேவுக்கு இடப்பெயர்ச்சி ஆனது; அங்கிருந்து இந்தியாவின் தெற்குப்பகுதிக்கு பெயர்ச்சி ஆன போது,அந்தத் தொழில் கரூருக்கே வந்தது;இந்த வருகைக்குப் பின்னால் கருவூர் சித்தரின் அருளாசியே செயல்பட்டு வருகிறது.

நீங்கள் செய்யும் தொழில் மென் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமா? 


நீங்கள் இரண்டே இரண்டு சித்தவிதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.முதல் சித்தவிதி: நீங்கள் ஒரு போதும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ அசைவம் சாப்பிடக் கூடாது;முட்டையும்,செயற்கையான கருத்தரித்தல் மூலமாக உருவாகும் முட்டையும் முழு அசைவமே! மது அருந்தினால்,மூளை இயல்பாக சிந்திக்கும் திறனை இழந்துவிடும்;எனவே,மதுவை விடுவதும் அவசியம்.


இரண்டாவது விதி முறை:பின்வரும் பொருட்களுடன் கரூர் நகரில் அமைந்திருக்கும் அருள்சிவநிறை பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் வர வேண்டும்.மூலவரையும்,அம்பாளையும் வழிபட்டுவிட்டு,கருவூராரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதிக்கு வர வேண்டும்.

முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை ஒன்று,
குறைந்தது இரண்டு நெய்தீபங்கள்
விதையில்லாத திராட்சை குறைந்தது அரைக்கிலோ(குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும்;மற்ற நாட்களில் கிடைக்காது;கிடைக்காவிடில்,பரவாயில்லை;இதற்குப் பதிலாக வேறு எதுவும் வாங்க வேண்டாம்)
விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழ பாக்கெட் ஒன்று
டயமண்டு கல்கண்டு ஒரு கிலோ
வெற்றிலையும்,கொட்டைப்பாக்கும்
ஆறு நாட்டு வாழைப்பழங்கள்
தரமான பத்தி பாக்கெட் ஒன்று,தேங்காய் ஒன்று(மணமாகி,மனைவி கர்ப்பிணியாக இருந்தால் தேங்காய் வாங்கக்கூடாது)

பூசாரியிடம் இந்தப் பொருட்களை ஒவ்வொன்றாகத் தர வேண்டும்;நமது பெயருக்கும்,நமது நிறுவனத்தின் பெயருக்கும் அர்ச்சனை ஒன்று செய்ய வேண்டும்.அர்ச்சனையின் முடிவில் பூசாரிக்கு ரூ.101/-தட்சிணை தர வேண்டும்.தட்சிணை பெற்றப்பின்னர்,குறைந்தது 30 நிமிடம் வரை நமது நியாயமான தொழில் கோரிக்கைகளை மனதுக்குள் நினைத்து கருவூர் சித்தரிடம் வேண்ட வேண்டும்.பிறகு,திராட்சை,பேரீட்சை,டயமண்டு கல்கண்டு,வாழைப்பழங்கள் இவைகளில் பாதியை திரும்பப் பெற வேண்டும்.

 வாங்கியவைகளில் பாதியை அங்கே வருபவர்களுக்கு பிரசாதமாகத் தர வேண்டும்.மீதியை நமது வீட்டுக்கு/தொழில் நிறுவனத்துக்கு எடுத்துச் சென்று நமது குடும்ப உறுப்பினர்களுக்குத் தர வேண்டும்.தொழிலாளர்களுக்கும் தரலாம்.நாமும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு இதே போல வழிபாடு செய்ய வேண்டும்.சிலபல காரணங்களால் தொடர்ச்சியாக எட்டு சனிக்கிழமைகள் இவ்வாறு ஜீவசமாதி வழிபட முடியாமல் போனாலும்,விட்டுவிட்டாவது எட்டு சனிக்கிழமைகள் வழிபாடு செய்து முடிக்க வேண்டும்;எட்டாவது சனிக்கிழமையில் இருந்து 90 நாட்களுக்குள் நிச்சயமாக நமது தொழில் அபார வளர்ச்சியை அடைய ஆரம்பிக்கும்;


இந்த முறைப்படி வழிபாடு செய்வதன் மூலமாக கரூவூர் சித்தரின் அருள் நமக்கும்,நமது தொழிலுக்கும் நிரந்தரமாகக்கிட்டும்;அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டால்,இந்த அருளாற்றல் நமது ஆயுள் முழுமைக்கும் நமது தொழிலை படிப்படியாக வளர வைத்து,நமது சாதனை தொழிலதிபராக்கும்!!!கரூர் நகரமும் இந்தியாவின் முன்னணி மாநகரமாக மாறிவிடும்.

இந்த அரிய வழிபாட்டு முறையை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(செல் எண்:-9677696967) அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!

ஓம் கருவூர் சித்தர் நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ