RightClick

சீனா முழுக்கப் பரவிவரும் இந்து யோகக்கலை!!!





ரிஷிகேஷைச்  சேர்ந்த மன்மோகன் பண்டாரி என்ற யோகக்கலை அறிஞரை திருமணம் செய்த சீனப் பெண்மணி யுன் யான் ஆவார்.இவர் சீனாவில் யோகி யோகா இன்ஸ்டிடியூட் ஆஃப் சைனா என்ற யோக கல்வி நிலையத்தை 2004 இல் துவக்கினார்.இந்த கல்விச்சாலை இதுவரை 10,000க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களையும்,பயிற்றுநர்களையும் உருவாக்கியுள்ளது.36 மாத யோகா பட்டப்படிப்பு முடித்தவர்கள் சீனாவில் புகழ்பெற்ற உடற்பயிற்சி கூடங்களிலும்,ஆரோக்கிய மையங்களிலும் பணியாற்றிவருகின்றனர்;இந்த யோகா கல்வி நிறுவனம் பி.கே.எஸ்.ஐயங்கார் என்ற இந்திய யோகா அறிஞரின் பல புத்தகங்களை சீன மொழியில் பிரசுரித்துள்ளது.


(ஏற்கனவே,அமெரிக்கா முழுக்க இந்து யோகக்கலை பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது;உலக வல்லரசு நிலையை தக்க வைக்க அமெரிக்கா ஆயுத அரசியலையே பின்பற்றி வருகிறது;அதே போல தானும் உலக வல்லரசாகத் துடிக்கும் சீனாவும் ஆயுத அரசியலைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது;இதனால்,கோடிக்கணக்கான யுவான்களும்,டாலர்களும் வீணடித்துக்கொண்டிருக்கின்றன;ஆனால்,நமது இந்தியாவோ ஆயுதமின்றி,அரசியலின்றி உலக வல்லரசாக வளர்ந்துவருகிறது;வெகுவிரைவில் சித்தர் பெருமக்களின் ஆசியால் உலகின் ஒரே வல்லரசாக இந்தியா உயர்ந்துவிடும்;அமெரிக்கா கண்டமும்,ஐரோப்பியக் கண்டமும் இனி ஒருபோதும் உலக அரசியலிலும்,உலகப் பொருளாதாரத்திலும் தலையெடுக்கவே முடியாது)


ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 30,வெளியீடு 22.6.12
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ