RightClick

சிவயோகி அவர்களின் ஆன்மீக அறிவுரைகள்:-





1.நாம் செல்லும் போது எவராவது இடம் தெரியாமல்/முகவரி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தால் நின்று அதற்கென்று மெனக்கெட்டுச் சரியான வழியைக் கூறி உதவுங்கள்;அவர்களுக்குப் புரியாவிட்டால் இரண்டாம் முறையும் பொறுமையாகக் கூறுங்கள்;சிடுசிடுப்பு வேண்டாம்;அதே சமயம்,உங்களுக்கு வழி தெரியவில்லை எனில்,உண்மையைக் கூறுங்கள்.

2.வழியில் பசுவைக் கண்டால் அதைத் தொட்டு வணங்குங்கள்;முடிந்தால் அதற்கு பழமோ கீரையோ வாங்கிக்  கொடுங்கள்;இவ்வாறு கொடுப்பதற்கு எந்தவித சகுனமும் பார்க்க வேண்டியதில்லை;ஏனெனில்,பசு என்பது கோமாதா ஆகும்.

3.வழிபாட்டுத் தலங்கள் தென்பட்டால் மரியாதை செய்யுங்கள்;வேறு மார்க்கத்தில் செல்பவரின் வழிபாட்டுத் தலங்களையும் மதியுங்கள்;உரிய மரியாதை செலுத்துங்கள்.

4.தரமற்ற பேச்சுக்களையோ,காட்சிகளையோ நீங்கள் செல்லும் வழியில் சந்திக்க வேண்டியிருந்தால் உடனே அவற்றை ஒதுக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6.தேக ஊனம் உடையவர்கள்,முதுமை அடைந்தவர்கள்,புத்திஸ்வாதீனம் உள்ளவர்களைக் காணும்போது ஏதாவது ஒருவகையில் உதவி செய்யுங்கள்.

7.நண்பர்,உறவினர்,பழகியவர்கள் என்று எவரையேனும் வழியில் காண நேர்ந்தால் முதலில் அவர் பேசட்டுமே என்று காத்திராமல் நீங்கள் முதலில் வணக்கம் சொல்லி அன்பு பாராட்டுங்கள்.இறை நாமம் சொல்லி வாழ்த்துங்கள்.

ஆதாரம்:ஆவிகள் உலகம்,பக்கம் 34,ஜீலை 2013 வெளியீடு.