RightClick

தென்பொதிகை மாமுனிவர் அகத்தியர் ஆலயம்,பாளையனேந்தல்





அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் திரு.சி.தியாகராஜ சுவாமிகள்.இவர் ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை அருகே பாளையனேந்தல் கிராமத்தில் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமியில் பரப்பியவருமாகிய அகத்தியருக்கு ஒரு ஆலயம் அமைத்து,தினமும் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்து வருகிறார்;கி.பி.2006 ஆம் ஆண்டுமுதல் இந்த நித்திய அன்னதானம் நடைபெற்று வருகிறது.


ராமநாதபுரத்தில் இருந்து 16 கி.மீ.தூரத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு பாரத நாடு முழுவதும் இருந்து கன்னியாக்குமரி,திருச்செந்தூர் வழியாக பாதயாத்திரையாய் வரும் சாதுக்கள்,துறவிகள்,முனிவர்கள் இங்கே தங்கி உணவருந்தி பாதயாத்திரையைத் தொடர்கிறார்கள்;கோவிலின் சுற்றுச்சுவற்றில் 18 சித்தர்களின் ஓவியமும்,கோவிலின் மேற்புறத்தில் நான்கு திசைகளிலும் அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,திருநாவுக்கரசர் திருவுருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன;


ஒவ்வொரு அமாவாசை,கிருத்திகை,பவுர்ணமி நாட்களிலும் இங்கே வடை,பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 25,வெளியீடு 22.6.12


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ