RightClick

பிரிந்திருக்கும் தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திருவாதிரை அமாவாசை!!! 7.7.2013




இறைவன் ஒருவனே என்று நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்;அந்த இறைவன் என்பது ஆதிசிவன் என்ற அண்ணாமலையார் மட்டுமே!!!அவரது அவதார நட்சத்திரமே திருவாதிரை ஆகும்.ஆண்டுக்கு ஒருமுறை ஆனி மாதத்தில் வரும் அமாவாசையானது திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழ்ந்து வருகிறது.இந்த விஜய வருடத்தின் ஆனிமாதத்து அமாவாசையானது 7.7.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.11மணி முதல் 8.7.2013 திங்கள் மதியம் 1.08 வரை அமைந்திருக்கிறது.


இந்த நன்னாளில்,ஏழரைச்சனியாலோ,கர்மவினைகளாலோ பிரிந்திருக்கும் தம்பதியர் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்குச் சென்று மூலவராகிய சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஏதாவது ஒரு சிவமந்திரத்தை என்று ஜபிக்க வேண்டும்;அபிஷேகம் நிறைவடைந்தப் பின்னர் தனது பெயர் மற்றும் நட்சத்திரம்,தனது வாழ்க்கைத்துணையின் பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;பூசாரிக்கு ரூ.108/-தட்சிணை தர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஆறு அமாவாசைகளுக்குச் செய்து முடித்தால் ஏழாவது அமாவாசைக்குள் பிரிந்தவர்கள் சேருவர் என்பது நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(செல் எண்:9677696967) அவர்கள் நமக்கு உபதேசித்திருக்கிறார்.

இந்த ஆறு அமாவாசைக்கு சிவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இன்று முதல் தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டப்பின்பே,இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

இந்த வருடத்தின் அமாவாசை நாட்கள்:

6.8.2013 செவ்வாய்க்கிழமை(ஆடி அமாவாசை)
5.9.2013 வியாழக்கிழமை
4.10.2013 வெள்ளிக்கிழமை
3.11.2013 ஞாயிற்றுக்கிழமை
2.12.2013 திங்கட்கிழமை(திங்கட்கிழமை அமாவாசை மிகவும் சிறப்பானது)
1.1.2014 புதன்கிழமை
30.1.2014 வியாழக்கிழமை
1.3.2014  சனிக்கிழமை
30.3.2014 ஞாயிற்றுக்கிழமை

 ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ