RightClick

அரிய தேய்பிறை அஷ்டமி 30.7.2013 (செவ்வாய்க்கிழமை)யைப் பயன்படுத்துவோமா. . .



இன்று மாலை மணி 4.28 வரையிலும் ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.இன்றைய நட்சத்திரம் ஸ்ரீகால பைரவப் பெருமானின் அவதார நட்சத்திரமான பரணி நட்சத்திரம் ஆகும்.இன்று முழுவதும் பரணி நட்சத்திரம் இருக்கிறது.இன்றைய கிழமையோ இறைவழிபாட்டுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை ஆகும்.
ஆக,
இறைவழிபாட்டுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை
+
நமது கடவுளாகிய ஸ்ரீகால பைரவப் பெருமானின் நட்சத்திரம் பரணி நிற்கும் நாள்
+
ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடக்கூடிய திதியான தேய்பிறை அஷ்டமி(நமது அனைத்து கர்மவினைகளையும் அடியோடு நீக்கும் நாள்)
மூன்றும் சேர்ந்து வருவதால்,இன்று மாலை 3 மணி முதல் 4.30 க்குள் நாம் பைரவ சஷ்டிக் கவசம் பாடலாம்;
அல்லது
ஸ்ரீகால பைரவர் 108 போற்றியை பாடலாம்;
அல்லது
ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியைப் பாடலாம்;
அல்லது
இந்த நேரத்தில் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம் அல்லது எழுதலாம்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஸ்ரீகால பைரவப் பெருமானின் நட்சத்திரமான பரணியும்,தேய்பிறை அஷ்டமியும்,செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும்.
இந்த ப்ளாட்டின வாய்ப்பைப் பயன்படுத்துவோம்;நமது கர்மவினைகளை கரைத்துவிடுவோம்;
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30.7.13 செவ்வாய்க்கிழமை) வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;




பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.

33.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
34.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=29.7.13 திங்கட்கிழமை மாலை 3.57 மணி முதல் 30.7.13 செவ்வாய்க்கிழமை மாலை 4.28 வரை அமைந்திருக்கிறது.(இதில் செவ்வாய்க்கிழமை அன்று இராகு காலம் மாலை 3 மணி முதல் 4.30 வரை வருகிறது;தேய்பிறை அஷ்டமியோ மாலை 4.28 வரை இருக்கிறது.எனவே,தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமையே!!!).உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=28.8.2013 புதன் கிழமை முழுவதும்(இராகு கால நேரம் மதியம் 12.30 முதல் 1 மணி வரை)


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

நாம் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 7





புத்தகப்புழுக்களாக தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்;நான்குபேர் இருக்கும் இடத்தில் தமது மேதாவித்தனத்தைக் காட்டிட பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டுவர்;தினசரி செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் கூட(ஆன்லைனிலும் தான்!) இல்லாதவர்களுக்கு அவர்களுடைய மேற்கோள்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்;அவர் சொல்லும் புத்தகத்தின் மீதோ அல்லது அந்தப் புத்தகத்தை எழுதியவர் மீதோ அல்ல;அதைச் சொல்லும் அந்த ‘புத்தகப் புழுவின்’ மீது! இது போதாதா? அந்த புத்தகப்புழு இந்த அப்பாவியை ஏமாற்றிட. .

 முகநூலில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் இதே சுபாவம் இருக்கிறது.எச்சரிக்கை அப்பாவிகளே!!!

புத்தக அறிவை விடவும்,அனுபவ அறிவே நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்;அனுபவ அறிவு பெற்றவர்கள் பெரும்பாலும் நேரடியாகத்தான் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பார்களே தவிர,எழுத்தில் தமது அனுபவங்களை வெளியிடுவதில்லை;அப்படியே வெளியிட்டாலும் அந்த வெளியீடு முழுமையானதாக இராது.எனவே,உங்கள் பிரச்னை தீர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நேரடியாகச் சந்திப்பதே நன்று.யாரை? ஜோதிடம் பார்ப்பவர்களையும்,அருள்வாக்கு சொல்பவர்களையும்.

ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரை நீங்கள் நேரடியாக சந்தித்தப் பிறகு உங்கள் வாழ்க்கையே அடியோடு மாறிவிடும்.ஏனெனில்,நீங்கள் வெகுதூரத்தில் இருந்து அவரை சந்திக்க வருவதால்,அவரை நீங்கள் மதிப்பதாக அர்த்தம்.அவ்வளவு தூரம் வருவதால்,நீங்கள் களைத்துப் போயிருப்பீர்கள்.எனவே,உங்களுக்கு ஜோதிடப் பலன்களை அந்த ஜோதிடர் பூடகமாக புரியாத தமிழில் சொல்வது கிடையாது;நேரடியாகவும்,விளக்கமாகவும் சொல்வதால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உடனடியாகவும்,தீர்க்கமாகவும் முடிவெடுக்க அவரது ஜோதிட கணிப்பு காரணமாக இருக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருமே எல்லா துறையிலும் எக்ஸ்பர்ட் கிடையாது;ஓரிரு துறைகளில் மட்டுமே ஒருவர் எக்ஸ்பர்ட்டாக இருப்பார்;இவ்வாறு மனிதனை இறைவன் படைத்தமைக்குக் காரணம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு செயலில் இறங்கும் முன்பு நீங்கள் அந்த செயலை தொழிலாகக் கொண்டவர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு செயல்பட ஆரம்பிப்பது நன்று.ஆனால்,நமது தமிழ்நாட்டில் அப்படி கேட்பதற்குக் கூச்சப்படுபவர்களே அதிகம்.அப்படி கேட்பதால் நம்மை அப்பாவி என்றோ இது கூடவா தெரியவில்லை? என்று கேட்டுவிடுவார்களோ என்றோ நினைப்பவர்களே அதிகம்.இந்த நினைப்பால் ஏற்படும் பிரச்னைகளும்,இழப்புகளும் மிக அதிகம்.


கொஞ்சம் ஜோதிடம்,25 வருட ஜோதிட அனுபவம் + கணிப்பொறி பற்றிய அடிப்படை அறிவு + இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தும் சுபாவம் + புதிய புதிய மென்பொருட்களை அறிந்து கொண்டும்,அதைப் பயன்படுத்திப்பார்க்கும் பொறுப்புணர்ச்சி + எழுத்தாற்றல் + ஆங்கில அறிவு போன்றவைகளாலும்,தகுந்த ஆன்மீக குருவின் அருளாலும் இந்த ஆன்மீகக்கடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இதில் அனுபவ உண்மைகளே அதிகம் எழுதப்படுவதால் பலருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக இருக்கிறது.

பலர் ஏழரைச்சனி நடைபெறும் போதுதான் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கையிருப்பு சேமிப்பையும்,மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் சொந்தத் தொழில் செய்யத் துவங்குவர்.அவர்களில் பலர் எந்தத் தொழில் செய்ய துவங்குகிறார்களோ அதில் அடிப்படை அறிவு கூட இல்லாமல் துவங்கி,கடனாளியாகி மனைவியிடமும்,பெற்றோரிடமும் கெட்டபெயர் வாங்கி தனிமையோடும்,அவமானத்தோடும் வாழத் துவங்கிவிடுகின்றனர்.
சிலர்  குறைந்தது மூன்று வருடம் வரை வேலை பார்த்த அனுபவத்தில் அதே தொழிலுக்கு வருகின்றனர்.அவர்களுக்கு பணத்தை நிர்வாகம் செய்யத் தெரிவதில்லை;அதனாலேயே அவர்களின் தொழில் கடனால் மூழ்கி விடுகிறது.இது பற்றிய அனுபவத்தை பள்ளியிலோ கல்லூரியிலோ சொல்லித்தருவதில்லை;இதற்குரிய பாடத்திட்டம் இந்தியாவிலேயே இல்லை;
ஒருவர் சனி மஹாதிசை புதன் புக்தி இராகு அந்தரத்தில் இயற்கையான முறையில் இறந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்;அவர் மறு ஜன்மம் எடுக்கும் போது சனி மஹாதிசை புதன் புக்தி இராகு அந்தரத்தில் மீதி இருக்கும் காலக் கணக்கின்படியே பிறப்பார்.இதையே விட்டகுறை=தொட்ட குறை என்று நமது தமிழ் முன்னோர்கள் பழமொழியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரையிலும் அந்த உயிர் இறந்த இடத்திலேயே இருக்கும்;தனது உடலுக்குள் நுழைய மீண்டும் முயற்சிக்கும்;தனது குடும்பத்தாரை நினைத்தும்,தனது குழந்தைகளை நினைத்தும் அழும்;இந்த நிலையில்,இறந்தவரின் மகன்/ள்களில் யாருக்காவது மன வலிமை இல்லாவிட்டால் அவர்களுக்கு இந்த 16 நாட்களுக்குள் உடல் நலம் குன்றி அவர்களில் ஒருவர் அல்லது இருவர் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் மூன்று நாட்களில் அடுத்தடுத்து இயற்கையாகவே மரணமடைந்தார்கள்.இது தொடர்பாக ஒரு வருடம் கழித்து விசாரிக்கையில் அந்த மூன்று பெண்களுமே ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த பாசத்தோடும்,அக்கறையோடும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இறந்த 17 ஆம் நாளன்று அந்த ஆத்மாவானது தனது மேலுகப் பயணத்தைத் துவங்கும்;ஒருவருடம் வரை பயணித்து,வானில் நாம் பார்க்கும் கன்னிராசி மண்டலத்தை சூட்சுமமாகச் சென்றடையும்.(இதை இன்றைய ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் நவீனக் கருவிகளால் நிரூபித்துள்ளனர்)அங்கே இவர்களின் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு மேலுலகம் அல்லது கீழுலகம் சென்று அதற்குரிய பலன்களை அனுபவிக்க வேண்டும்.

நிறைய புண்ணியம் செய்திருந்தால்(அல்லது முடிந்தவரையிலும் பாவம் செய்யாமல் தான் உண்டு;தனது வேலை உண்டு என்று இருந்தாலே) சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்;
மனிதனாக வாழ்ந்த காலத்தில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால் கீழுலகம் சென்று படாத பாடு பட வேண்டியிருக்கும்(அந்நியன் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் உண்மையே! கலிகாலமாக இருப்பதால் இதை நம்பாதவர்களே அதிகம்).கலியுகமாக இருந்தாலும்,இந்தக் கணக்கு மாறாது.குறிப்பிட்ட காலம் இவ்வாறு சுகங்கள் அல்லது வேதனைகளை அனுபவித்துவிட்டு,மீண்டும் கர்மபூமி எனப்படும் இந்த பூமிக்கே வந்து பிறக்க வேண்டும்.



திருந்திய மனித ஆத்மாக்கள் இப்பிறவியில் தனது மனைவியை/கணவனைத் தவிர வேறு எந்த துணையிடமும் காமவலையில் சிக்காமல் வாழ்ந்து வருவார்கள்.யாருக்கு எதிராகவும் அரசியல் செய்ய மாட்டார்கள்;யாரையும் மனதால் கூட நோகடிக்க மாட்டார்கள்;வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் எண்ணம் சிறிதும் வராது.பிறருடைய தவறுகளை தாமே தாங்கிக் கொள்வார்கள்.இவர்களின் ஆன்மீக நோக்கங்கள் பரமரகசியமாக இருக்கும்.
உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல்,WTO =World Trade Organisation என்ற அமைப்பில் இந்தியா உறுப்பினராக 1.1.1995 அன்று சேர்ந்ததால்,இன்று பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற மனோபாவம் இந்தியா முழுவதும் பரவி விட்டது;இதனால்,கோடிக்கணக்கான இந்துக்குடும்பங்கள் ஒழுக்கமாக வாழ முடியாமல் திணறி வருகின்றன;சேமிக்கவே முடியாமல் தவித்து வருகின்றன;ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன;

உலகமயமாக்கல் என்பது அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு தந்திரமான வக்கிர ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தத்தால் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்;ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக மாறி வருகின்றனர்; உள்நாட்டு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன;இதனால்,பல கோடி பேர்கள் வேலையிழந்து வேறு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்;வேலை கிடைக்காதவர்கள் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்தால் என்ன செய்வார்கள்? 


 உலகில் இருக்கும் 220 நாடுகளில் 195 நாடுகள் உலகமயமாக்கல் என்ற காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும்,இதையும் மீறி தனது நாட்டு மக்களின் நலனைக் காப்பதில் ஒவ்வொரு நாடும் கண்ணும் கருத்துமாக தனது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் வகுத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்தியாவில் மட்டும் அப்படி அல்ல;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குடும்பங்கள் ஏதாவது ஒரு வகையில் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இதற்கு முதல் காரணம் அவர்களின் அப்பா அல்லது அம்மா வழிமுன்னோர்கள் தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டிருப்பதே!
அவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது;சொர்க்கம்,நரகம் கிடையாது.ஆவியாக 40 முதல் 200 வருடங்கள் வரை பசியோடும்,பட்டினியோடும் அலைவதால் அவர்கள் ஆக்ரோஷப்பட்டு தமது வம்சாவளியினரின் நிம்மதியைக் கெடுத்து வருகின்றன.செயற்கையான முறையில் இறந்த ஆத்மாக்கள் அனைத்துமே பிரேதாத்மாக்கள் என்றே அழைக்கப்படுகின்றன.அவைகளுக்கு சாந்தி செய்து ஒளி மண்டலத்துக்கு அனுப்புவது ஒவ்வொரு தமிழர்களின்/இந்துக்களின்/மனிதர்களின் கடமை ஆகும்.இப்படி அனுப்பாத குடும்பங்களே இன்று கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அந்த சொத்துக்களுக்காக கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.அல்லது ஏதாவது ஒருசில காரணங்களால் பூர்வீகச் சொத்துக்கள் பகிர்ந்து தரமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.


இணையத்தின் பரவல்,செல்போன்களின் அறிமுகம்,தொலைக்காட்சித் தொடர்களின் அணிவகுப்பு,சாஃப்ட்வேர் நிறுவனங்களால் மிகச் சிறந்த சம்பளம் என்று நமது தமிழ்நாடு முன்னேறினாலும்,இந்த முன்னேற்றம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றம் அல்ல;தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் வெறும் பத்து சதவீதம் இருந்தால் அதுவே அதிகம்.ஐரோப்பிய,அமெரிக்க நிறுவனங்கள் திறமையான பணியாளர்களுக்காக இங்கே கடைவிரித்துள்ளது;அவ்வளவே! எந்த நிமிடத்திலும் வேலையை காலி செய்யும் திறம் படைத்தவை இவை! இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்படும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதுவும் கூட இறந்த முன்னோர்களின் கோபத்தின் காரணம் என்று சொல்லலாம்.இதை அனுபவிப்பவர்களால் மட்டுமே விவரிக்க முடியும்.மற்றவர்கள் வேடிக்கையாக கிண்டல் செய்துவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்.
இறைவன் படைத்த பிறவிகளில் மிக மிக மிக உயர்ந்த பிறவி மனிதப் பிறவியே! இறைவன் படைத்த பிறவிகளில் மிக மிக மிக இழிவான பிறவியும் மனிதப் பிறவியே! எந்த ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மந்திர ஜபத்தைப் பின்பற்றவில்லையோ அல்லது ஏதாவது ஒரு இறை வழிபாட்டைச் செய்யவில்லையோ அந்த மனிதப்பிறவி இழிவான பிறவியே!!


கலியுகத்தில் தான் நமது கர்மவினைகளை மிகவும் சுலபமாகக் கரைக்க முடியும்.தினமும்  ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்பதை எழுதிக்கொண்டு வந்தாலோ அல்லது அட்டவீரட்டானங்கள் அனைத்திற்கும் ஒருமுறை பயணம் செய்தாலோ அல்லது திருவாதிரை நட்சத்திரநாளன்று அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் சென்றாலோ அல்லது ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீகால பைரவ/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அபிஷேகத்தில் கலந்து கொண்டாலோ அந்த மனிதப் பிறவியே மிக மிக மிக உயர்ந்த பிறவி ஆகும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


அர்த்தநாரீஸ்வராக அருள் புரியும் ஆதிசிவம்!!!



நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையி லனலும் வைத்தார் ஆனையி னுரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

- திருக்கழிப்பாலை
(பாடல் எண் : 1)

ஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு உபதேசித்த மொழியே தமிழ்!!!

அகத்தியர் ஒரு நாள் திருக்கயிலை மலையில் இதுவரை தாம் உணர்ந்து அறியாத திவ்விய நறுமணம் ஒன்றினை உணர்ந்தார். அதனைப் பற்றி கயிலைநாதனிடம் வினவினார். அந்த நறுமணம் அங்கிருந்த ஓலைச்சுவடிகளின் நறுமணம் என அறிந்தார். அச்சுவடிகளில் இருந்த மொழி நறுமணத்தோடு, இனிமையும் மிகுந்து இருந்ததால் அதனைத் தமிழ் என்றார். அம்மொழியே தமிழ் மொழியாம்.

“என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்“ (கம்பராமாயணம்)

சிவபிரான் தமிழ் மொழியை அவருக்கு உபதேசம் செய்தார். தமிழ்மொழியுடன்தான் அகத்தியர் தென்திசை வந்தார். காடு திருத்தி நாடாக்கினார். 1) த்ருணதூமாக்கினி (தொல்காப்பியர்) 2) அதங்கோட்டு ஆசான் 3) துராலிங்கர் 4) செம்பூட்சேய் 5) வையாபிகனார் 6) வாய்ப்பியனார் 7) பனம் பாரணனார் கழாரம்பனார் 9) அவினயனார் 10) காக்கை பாடினியார் 11) நற்றத்தனார் 12) வாமனனார் என்னும் பன்னிருவருக்குத் தமிழ்மொழியை உபதேசம் செய்தார்.

1) எழுத்திலக்கணம் 2) சொல்லிலக்கணம் 3) பொருளிலக்கணம் 4) யாப்பிலக்கணம் 5) அணியிலக்கணம் – என்ற ஐவகை இலக்கணங்கள் அடங்கிய “அகத்தியம்“ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார்.

பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுபிடிப்பும்!!!

பொக்ரைனில்அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை.என்ன காரணம் தெரியுமா?

அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழையமுடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிஷி!

(அணுகுண்டு சோதனையை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி தந்தவர் கலாம் அவர்கள்)

~ என்றும் தமிழன் என்பதை நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுங்கள் !

நன்றி:-
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?




ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.

இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.


ஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .




அந்த வாசகருக்கு வயது 42.அவர் இந்த சேவை சார்ந்த தொழிலில் சுமாராக இருபது வருடங்களாக இருந்து வருகிறார்.இந்த சேவைத் தொழில் பற்றிய அத்தனை விபரங்களும் அவருக்கு அத்துப்படி! இந்தத் தொழிலில் ஆரம்ப வருடங்களில் போட்டி இல்லாமல் இருந்ததால் செமத்தியாக லாபம் சம்பாதித்தார்.தனது மூன்று மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார்;ஒவ்வொரு மகள்களும் விரும்பும் படிப்பிலேயே சேர்த்தார்.மிகவும் கஷ்டப்பட்டு சிறந்த வரன்களைத் தேடி மணம் முடித்தார்.


தற்போது அவரது தொழிலில் இறங்குமுகம் வந்துவிட்டது.யாராக இருந்தாலும்,எப்பேர்ப்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும்,எந்தத்  தொழிலில் இருந்தாலும் செய்யும் வேலை அல்லது தொழிலில் ஏறுமுகம் இருப்பது போல இறங்குமுகம் வரத்தான் செய்யும்.இருபத்தோரு வயது முதல் ஐம்பது வயதுக்குள் சம்பாதித்து தொழிலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.ஐம்பது வயதுக்குப் பிறகும் தொழிலில் சாதிக்கப்போகிறேன் என்று கடனாளி ஆகிவிடக்கூடாது.

ஒரு தொழிலில் இறங்கும் முன்பு அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்.ஆனால்,ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு அப்போதுதான் சொந்தத் தொழில் செய்து அம்பானியாகவோ,பில்கேட்ஸாகவோ ஆக வேண்டும் என்ற வெறி வரும்;ஏழரைச்சனி நடைபெறும் போது சொந்தத் தொழில் ஆரம்பித்தால் கடனாளி ஆகி காணாமல் போவது நிச்சயம்.


அதே போல தினசரி ரூ.100/-மட்டுமாவது சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அந்த சேமிப்பை எக்காரணம் கொண்டும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் செலவழித்துவிடக்கூடாது.இவ்வாறு சுமாராக இருபது முதல் ஐம்பது ஆண்டுகள் வரையிலும் சேமித்துக்கொண்டே வந்தால் தான் முதுமைக்காலம் நிம்மதியாக இருக்கும்.இதுவே பணக்காரர் ஆக குறுக்கு வழி.


எது கொடிய நரகம் தெரியுமா?

நமது முதுமைக்காலத்தில் நாம் நமது பணத்தேவைகளுக்காக பிறரைச் சார்ந்திருப்பதுதான்! இதைச் சொன்னவர் நம்ம சாணக்கியர்.


இந்த சூழ்நிலையில் அந்தப் பெரியவரிடம் ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான்;அவன் சொன்ன தொழில் ஆலோசனைகள் வருமானத்தைப் பெருக்கும் விதமாக இருந்தன;எனவே,அவனது பொறுப்பில் அந்த தொழில் ஆலோசனையை நடைமுறைப்படுத்தினார்;முதல் இரண்டு ஆலோசனைகள்  ஜெயித்தபடியால்,அந்த வேலையாளை முழுமையாக நம்பி மேலும் சில பொறுப்புகளை கொடுத்து,அவன் மீதான கண்காணிப்பை நிறுத்தினார்.ஒரே வருடத்தில் கடனே இல்லாமல் தொழில் செய்த அவர் கடனாளி ஆகிவிட்டார்.செல் எண்ணையும்,இருப்பிடத்தையும் மாற்றிய அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை;அவனை நம்பி கொடுத்த ஒரு வங்கிக் கணக்கையும் ஜீரோ பேலன்ஸுக்கு கொண்டு வந்துவிட்டு,ஓடியே போனான்.
அப்போது அவர் நமது ஆன்மீகக்கடல் வாசகராக இருந்தவர்,மைத்ர முகூர்த்தம் பற்றி அறிந்தார்.கூடவே,பைரவ மந்திரஜபத்தை தினமும் எழுதத் துவங்கினார்.
தினமும் 108 முறை பின்வருமாறு எழுதத் துவங்கினார்.

ஓம் கணபதி நமஹ என்று ஒரு முறையும் எழுதிவிட்டு,
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 108 முறை தினமும் எழுதிக்கொண்டே வந்தார். 


ஒரு நாள்,இருநாட்கள் அல்ல;தொடர்ந்து பதினொரு மாதங்கள் ஒரு நாள் விடாமல் இந்த மந்திரத்தை எழுதிக் கொண்டு வந்தார்.12 வது மாதத்தின் துவக்கத்தில் ‘அவன்’ ஒரு நிறுவனத்தில் மோசடி செய்து பிடிபட்டது தினசரி செய்தித்தாள்களின் மூலம் தெரியவந்தது.அவன் செய்த மோசடிகளைப் பொறுத்து,காவல் துறையே ‘இவனிடம் ஏமாந்தவர்கள் யாராக இருந்தாலும் வந்து புகார் செய்யலாம்’ என்று அறிவிப்பு வெளியிட்டது;இவரும் தம்மிடம் இருந்த ஆதாரங்களோடு சென்று புகார் செய்துவிட்டு வந்துவிட்டார்.தனது புகாருக்கு நிச்சயம் முழுப்பலன் கிட்டும் என்று அவர் நம்பிக்கையோடு சொன்னது இன்றும் எமது மனதில் தன்னம்பிக்கை கலந்த உற்சாகத்தை தந்திருக்கிறது.

அடுத்த சில நாட்களில் இவருக்கு இவரது கடன்களை முழுமையாகத் தீர்க்கும் விதமாக ஒரு ஒப்பந்தப்பணி உள்ளூர் நகராட்சியில் கிடைத்தது.அதுவும் யாரென்றே தெரியாத ஒரு நபரால் கிடைத்ததும்,தனது பதினோரு மாத அனுபவத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.அவர் எழுதிய நோட்டுகள்,காகிதங்கள் அனைத்தையும் நேரில் கொண்டு வந்து காட்டினார்;தேதி எழுதி,எழுதத்துவங்கிய நேரத்தையும் அவர் எழுதியதை பார்த்து மலைப்பே வந்துவிட்டது.ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு எழுதியிருக்கிறார்;இன்னொரு நாள் மதியம் 2.22க்கு எழுதியிருக்கிறார்;இன்னொரு நாள் நள்ளிரவு 1.30க்கும் எழுதியிருக்கிறார்.பிறிதொரு நாள் மாலை 5.10 மணிக்கும் எழுதியிருக்கிறார்.

அவரது பொறுமையும்,ஒரு நாள் கூட விடாமல் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதியதையும் நாம் மனதாரப் பாராட்டுவோம்;தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் வரும் ராகு கால நேரத்திலும்,பரணி நட்சத்திரம் வரும் நாட்களில் வரும் குரு ஓரையிலும்,திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் வரும் ராகு கால நேரத்திலும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஸ்ரீகால பைரவப் பெருமானின் சன்னதியில் 108 முறை எழுதி வந்திருக்கிறார்;எழுதி முடித்தப் பின்னர் பைரவ சன்னதி பூசாரியிடம் சொல்லி தனது பெயருக்கும்,தனது நிறுவனத்தின் பெயருக்கும் ஒரு அர்ச்சனை செய்திருக்கிறார்.
நெருங்கிய உறவுகள் மறைவு வரும் போது கலந்து கொண்டால் மூன்று நாட்கள் மட்டும் எழுதாமல் இருந்திருக்கிறார்.

அதே சமயம் இவ்வாறு எழுதுவதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.தற்போது அவர் சொன்னது: எம்மைப் போல தொழில் செய்து  கடனால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள்;எனவே,அவர்களுக்கு எனது அனுபவம் வழிகாட்டியாக இருக்கட்டும் 

என்ன,நாமும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டுவிட்டு,இதே போல தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று எழுதுவோமா?

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ