RightClick

ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை!!!





ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பு 2/6/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பெரம்பலூர் முத்துக்குமரன் ஆலயத்தில் மருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் சிவதிரு.ராஜாசிதம்பரம் அவர்கள் தலைமையில் துவங்கியது.இந்த வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் ருத்ராட்ச தீட்சை வழங்கப்பட்டது.

முதல் பகுதியில் ருத்ராட்சத்தின் சக்தியைப் பயன்படுத்தி நமது ஆன்மீக பலத்தைப் பெருக்கும் தியான முறையை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் உபதேசித்தார்.இந்த ப்ராக்டிகல் பயிற்சியால் வந்திருந்த மாணவ,மாணவியர் அனைவரும் புத்துணர்ச்சி பெற்றனர்.

இரண்டாம் பகுதியில் ருத்ராட்சத்தின் வகைகள்,அதில் ஒரிஜினலைக் கண்டறியும் டெக்னிக்குகள்,ருத்ராட்சத்தைப் பயன்படுத்தி நமது ஜாதக தோஷங்களை நீக்கும் வழிமுறை,வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தை நீக்கும் டெக்னிக்,ருணத்திலிருந்து விடுபடும் முறைகளை நமது ஆன்மீக குரு அவர்கள் போதித்தார்.
பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை குருகிருபா அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தனர்.இந்த முத்துக்குமரன் ஆலய வளாகம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இந்த ஆலயவளாகத்தில் வெகு விரைவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் எழுந்தருள இருக்கிறார்.

ஆன்மீகக்கடல் ஆசிரியர் நன்றியுரையுடன் ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பு இனிதாக நிறைவடைந்தது.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ