RightClick

ருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் 2/6/2013 ஞாயிறு!!!






ருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு ஜீன் 2,2013 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த வகுப்பு பெரம்பலூரில் நடைபெற இருக்கிறது.(அமைவிடம்: திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அமைந்திருக்கிறது.திருச்சியில் இருந்து ஒரு மணி நேர பேருந்துப் பயணத்தில் பெரம்பலூரை அடைந்துவிடலாம்;விழுப்புரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பேருந்துப் பயணத்திலும் வந்தடைந்துவிடலாம்;ரயில் வசதிகளும் தினமும் இருக்கின்றன)
ருத்ராட்சத்தைக்கொண்டு நாம் ஏராளமான ஆன்மீக சாதகங்கள் செய்ய முடியும்.பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் ருத்ராட்சத்தைக் கொண்டே சிவவழிபாட்டில் பல சாதனைகள் செய்துள்ளனர்.கடந்த சில நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால்,இந்த வழிபாட்டு மற்றும் சாதக முறையானது அருகிப் போனது.

மறைந்து போன இந்த ருத்ராட்ச சாதக முறைகளின் தொகுப்பே ருத்ராட்ச உபநிஷத் எனப்படுகிறது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,ஏராளமானவர்கள் தேர்வாகியிருக்கின்றனர்.அவர்களில் சிலர் தமது செல் எண்ணைக் குறிப்பிடவில்லை;அவர்கள் உடனே தொடர்பு கொண்டு தமது செல் எண்ணைத் தெரிவித்தால்,வகுப்பில் கலந்து கொள்ள முடியும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி நடைபெறும் இடம்,கட்டணம் போன்றவை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்திய ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இந்த ருத்ராட்ச உபநிஷத் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

அண்ணாமலையில் நடத்தப்பட்ட தெய்வீக விபூதிப்பயிற்சி வகுப்பு,கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட தெய்வீக விபூதிப் பயிற்சியின் மறு வகுப்பு,ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவரையும் ருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

மேலே கூறப்பட்டுள்ள மூன்று ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களில் பலர் தமது புதிய செல் எண்களை பெயருடன் குறிப்பிட்டு எமது மின் அஞ்சலுக்கு உடனே  அனுப்பவும்.இந்த ருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு இந்த ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்பட இருக்கிறது.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ