RightClick

ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்







தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையோடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பை தலையினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இதுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் 
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட வேண்டும்;பிறகு,ஆன்மீகக்கடல் மூலமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்;அதை லேமினேஷன் செய்து கொண்டு,நமது வீட்டின் பூஜையறையில் வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி மேலே கூறியிருக்கும் துதியை 27 முறை  மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.ஓவ்வொரு முறையும் ஜபித்து முடித்ததும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்மீது செவ்வரளி (உதிரி)ப்பூக்களைத் தூவ வேண்டும்;
27 முறை இவ்வாறு தூவியப் பின்னர்,இளநீர் அருந்த வேண்டும்இந்த வழிபாட்டுமுறையை ஒரு தேய்பிறை அஷ்டமியன்று வழிபடத் துவங்கி,தினமும் 27 முறை வீதம் ஒன்பது மாதங்களுக்கு வழிபட வேண்டும்;இவ்வாறு செய்து வந்தால்,வற்றாத செல்வ வளம் உருவாகும்.                                                         இந்த வழிபாட்டைப்  பின்பற்றுவோர்,ஒருபோதும் அசைவம் சாப்பிடக் கூடாது;ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும்;ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால்,அந்த குடும்பம் மென்மேலும் சுபிட்சமடையும்;அவ்வாறு இல்லாமல்,ஒரே ஒருவர் மட்டும்(இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றுவோர்) அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால்,அவர் மட்டுமே பொருளாதாரத் தன்னிறைவை எட்டுவார்.                     இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றும்போது துக்கவீடுகளுக்குச் சென்றால்,கண்டிப்பாக 16 நாட்களுக்கு இந்த வழிபாட்டுக்கு விடுமுறை விட வேண்டியிருக்கும்;குழந்தை பிறந்த வீடுகளுக்குச் சென்றால் ஐந்து நாட்களுக்கும்,பெண்கள் எனில்,மாதவிலக்கு வரும் நாட்கள் ஐந்து நாட்கள் வரையிலும்,ருது வீடுகளுக்குச் சென்றால் ஐந்து நாட்களுக்கும் வழிபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.                                                 இந்த வழிபாட்டுமுறையை நமக்கு அறிமுகப்படுத்திய  நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்  அவர்களுக்கும் கூகுள் நன்றிகள்!!!