RightClick

கழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் பகுதி 4





புத்தூரைச் சேர்ந்த அந்த தம்பதிக்கு திருமணம் ஆன ஐந்து ஆண்டுகளாகியும் ஒருமுறை கூட கருத்தரிக்கவில்லை;எனவே,அந்தத் தம்பதியினர் ஜோதிடர்களை நாடிச் சென்று அதற்கான பரிகாரங்களையும் அடுத்த சில ஆண்டுகளுக்குச் செய்து கொண்டே வந்தனர்.இவ்வாறு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜோதிடர்களைச் சந்தித்து,அவர்களின் ஜோதிட ஆலோசனைகளையும் செய்து முடித்துவிட்டனர்.இருந்தும் குழந்தைப்பாக்கியம் கிட்டவில்லை;


1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிணெண்சித்தர்களும் சூட்சுமமாக கழுகுமலைக்கு வருகைதரும் தெய்வீக ரகசியத்தை நமது நலன்களுக்காக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் உபதேசிக்க நாம் அதை ஆன்மீகக்கடல் வாயிலாக வெளியிட்டோம்.


இந்த பதிவினை நமது ஆன்மீகக்கடலை வாசித்துவிட்டு,கழுகுமலைக்கு 28.12.12வெள்ளிக்கிழமை அன்று வருகை தந்தனர்;கழுகுமலைக்கு வருகை தந்து கழுகாச்சலமூர்த்தியை வழிபட்டு,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கிரிவலம் வந்தனர்;அடுத்த சில நாட்களிலேயே அந்தத் தம்பதியினர் தாம் பெற்றோர் ஆகத் துவங்கியதை டாக்டரிடம் உறுதி செய்தனர்.இதே போல மதுரை,ஆட்கொண்டார்குளம்,புளியங்குடி,புன்னையாபுரம் பகுதியிலிருந்து வந்த சில தம்பதிகளுக்கும் நீண்டகால புத்திர ஏக்கம் நிறைவேறியது;கழுகாச்சலமூர்த்தியின் வரத்தாலும்,பதினெட்டு சித்தர்களின் அருளாசியாலும் அவர்களுடைய மனக்குறை நீங்கியது.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ